மோடியிடம் பணமதிப்பு நீக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றி அளிக்க நேபாள் பிரதமர் கோரிக்கை!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று நேபாள் சென்றுள்ள நிலையில் நேபாள் பிரதமர் கே பி சர்மா ஒளி அவர்கள் வங்கிகளிடம் உள்ள பணமதிப்பு நீக்கப்பட்ட பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றி அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம்

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 80-ம் தேதி திடீர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் செல்லாது என்றும் வங்கிகளில் அதனை அளித்துப் புதிய ரூபாய் நொட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்து அதற்கான முழுமையான பணிகளும் முடிவடைந்தது.

கோரிக்கை

ஆனால் இந்தியாவின் அண்டை நாடாக உள்ள நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகம். எனவே அங்குத் தேங்கியுள்ள உள்ள பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றி அளிக்குமாறும் நேபால் பிரதமர் கே பி சர்மா ஒளி கோரிக்கை பாரதப் பிரதமர் மோடிக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

எவ்வளவு ரூபாய் நோட்டுகள்?

நேபாள் தேசிய வங்கியான நேபாள் ராஷ்ட்ரா வங்கியின் கணக்குப்படி 33.6 மில்லியன் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகள் பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாகத் தேக்கம் அடைந்துள்ளதாகக் கூறுகின்றன.

அருண் ஜேட்லி

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சென்ற மார்ச் மாதம் நேபாள் வங்கிகளில் உள்ள பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை விரைவில் மாற்றி அளிப்போம் என்று உறுதி அளித்து இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nepal Prime Minister requests Modi to provide exchange facility for demonetised notes

Nepal Prime Minister requests Modi to provide exchange facility for demonetised notes
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns