சம்பளத்தை விடுங்க.. உங்க நிறுவனத்தில இந்த சலுகை எல்லாம் இருக்கா..?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வாங்கும் சம்பளம் மற்றும் சலுகைகளில் திருப்தி இல்லையா? இந்த நிறுவனங்களை முயற்சித்துப் பாருங்களேன்.

கடன் தொல்லைகளில் இருந்து தப்பிக்க நல்ல சம்பளம் மட்டும் அல்லாமல் இந்த நிறுவனங்கள் அதிரடியான பல சலுகைகள் அளிக்கின்றன.

அப்படி என்ன சலுகைகள் என்பதுதானே உங்க கேள்வி.?  

நெட்ஃபிக்ஸ்

நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தாயிக்காக மகப்பேறு விடுப்பு, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தந்தைகளுக்கு விடுப்பு என ஒரு வருடமும், பகுதி நேரம் அல்லது முழு நேரம் வேலை பார்க்கும் சலுகைகள் போன்றவற்றை அளிக்கிறது.

கூகுள்

கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் இறந்துவிட்டால் அவர்களது மனைவி அல்லது குடும்பத்திற்கு பணியாளரின் சம்பள தொகையில் 50 சதவீதத்தை 10 வருடத்திற்கு வாழ்வை எந்த ஒரு நிதி பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதற்காக அளிக்கிறது.

வால்ட் டிஸ்னிப்

வால்ட் டிஸ்னிப் நிறுவனம் ஊழியர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நண்பர்கள், குடும்ப என அனைவருடனும் டிஸ்னிப் பார்க் செல்ல இலவச அனுமதி, உணவு விடுதிகள் மற்றும் கடைகளில் தள்ளுபடி விலை பொருட்கள் போன்றவற்றை வழங்குகிறது.

பிடபள்யூசி(PwC)

பிடபள்யூசி(PwC) நிறுவனம் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மாணவர் கடனைத் திருப்பி செலுத்த 1,200 டாலர்கள் வரை அளிக்கிறது.

அக்சன்சர்

LGBTQ உரிமைகள் மற்றும் பன்முகத்தன்மையின் ஒருபகுதியாக பணியாளர் ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாற விரும்பினால், பாலினம் பார்க்காமல் அவர்களை அக்சன்சர் பரிசீலிக்கும்.

ஃபேஸ்புக்

ஊழியர்களுக்குப் புதிதாக குழந்தை பிறக்கும் போது பேபி கேஷ் என்ற பெயரில் 4,000 டாலர்களைப் பெற்றோருக்கு அளிக்கிறது.

வாசகர் ஸ்பெஷல்

கழுத்தை நெரிக்கும் அளவிற்கு 'கடன்'.. பொருளாதாரத்தில் ஊசலாடும் 10 நாடுகள்..!

வாரிசு கைகளுக்கு மாறும் சாம்ராஜியம்..!

ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

சாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் வர்த்தக சாம்ராஜியங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Not happy with your perks? Look for a job in these cool companies

Not happy with your perks? Look for a job in these cool companies
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns