ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலையானது உலக அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 6வது நாளாக போர் பதற்றம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக உக்ரைனின் வேகத்தினை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, தற்போது குடியிருப்புகளின் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகள் என அங்கும் இங்கும் பயந்து பதுங்கி வாழ்ந்து வந்து கொண்டுள்ளனர். சில தரப்பில் நாங்கள் போரினால் சாகிறோமோ இல்லையோ? உணவு, நீர் இன்றி, சரியான இருப்பிடம் இல்லாமல் தவித்து வருகின்றோம். இதனால் இறந்து விடுவோமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது என கூறியது காண்போரை கண்ணீர் விட வைத்தது.
உக்ரைன் - ரஷ்யா பேச்சு வார்த்தை கைகொடுக்குமா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்!

தற்காலிக தடை
அமெரிக்காவின் பிரபல எக்ஸ்சேஞ்ச் ஆன நாஸ்டாக் (Nasdaq), நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NYSE)ல் பட்டியலிடப்பட்ட, ரஷ்ய நிறுவனங்கள் தற்காலிகமாக பங்கு சந்தையில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வலைதளங்கள் மூலம் அறிய முடிகிறது.
இதற்கிடையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இதற்கிடையில் தான் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் தெரிகின்றது.

நாஸ்டாக்கில் இருந்து தடை
நெக்ஸ்டெர்ஸ் இன்க் (Nexters Inc), ஹெட்ஹண்டர் குரூப் பிஎல்சி (HeadHunter Group PLC), Ozon holdings PLC, Qiwi PLC மற்றும் Yandex உள்ளிட்ட பல பங்குகள் நாஸ்டாக் சந்தையில் பங்கு சந்தையில் தடை செய்யப்பட்டுள்ளன.
எனினும் விரைவில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யப்படுவததற்கான வாய்ப்பினையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

நியூயார்க் சந்தையில் தடை
இதே நியூயார்க் பங்கு சந்தையில் cian PLC, mechel PAO மற்றும் மொபைல் டெலிசிஸ்டம்ஸ் PAO உள்ளிட்ட சில நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்ந்து ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை முழுதும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். மேலும் உக்ரைனின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சந்தை மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், தொழில்துறைக்கு நம்பிக்கைய கொடுக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என இக்குழு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவுக்கு பாதிப்பு
தொடர்ந்து பல பக்கங்களில் இருந்தும் ரஷ்யாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், ரஷ்ய நிறுவனங்களுக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக பல நாடுகளும் வணிக நடவடிக்கைகளை நிறுத்தி வரும் நிலையில், தற்போது பங்கு சந்தையிலும் தடை செய்யப்பட்டு வருகின்றன. இது தற்காலிகமாக தடை செய்யப்பட்டு வரும் நிலையில், மேற்கொண்டு ரஷ்யாவின் நடவடிக்கையை பொறுத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.