4 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை.. OPEC அமைப்பின் முடிவிற்கு ரஷ்யா எதிர்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலக நாடுகளின் தொழில் துறை தாண்டி இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக உலக நாடுகள் அனைத்திலும் கச்சா எண்ணெய் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி சந்தையின் முடிசூடா மன்னனாக விளங்கும் சவுதி அரேபியா மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC ஆகியவை இணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி விலையை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என கூறியது.

இந்த முடிவிற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது, மட்டும் அல்லாமல் எங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியை எந்த காரணத்தை கொண்டும் குறைக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

அதிரடி சரிவு

அதிரடி சரிவு

ரஷ்யாவின் இந்த முடிவால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீத சரிவு ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர் விளைவாக அமெரிக்க க்ரூடு ஆயில் விலை 4 வருட சரிவை சந்தித்துள்ளது.

உற்பத்தி குறைப்பு

உற்பத்தி குறைப்பு

ஏற்கனவே ரஷ்யா மற்றும் OPEC அமைப்புகள் இணைந்து 2.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை மார்ச் மாதம் வரையில் குறைத்தது. இந்நிலையில் OPEC அமைப்பு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு கூடுதலாக 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இதை தான் ரஷ்யா மறுத்துள்ளது.

அமெரிக்க கச்சா எண்ணெய்

அமெரிக்க கச்சா எண்ணெய்

இத்துறை சார்ந்த வர்த்தக வல்லுனர்கள் கூறுகையில், OPEC அமைப்பில் இல்லாத அமெரிக்கா தொடர்ந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்-ஐ உற்பத்தி செய்து, பிற நாடுகள் செய்யும் உற்பத்தி குறைப்பு மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து அதிகளவிலான லாபத்தை பார்க்கிறது அமெரிக்கா. அதுமட்டும் அல்லாமல் சவுதியின் வர்த்தகத்தையும் அதிகளவில் கைப்பற்றி வருகிறது.

எனவே அமெரிக்காவை எதிர்க்கும் நோக்கத்துடன் தான் ரஷ்யா தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க மறுக்கிறது என கூறுகின்றனர்.

 

விலை மாற்றம்

விலை மாற்றம்

இதன் எதிரொலியாக WTI எனப்படும் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 10 சதவீதம் வரையில் சரிந்து 41.28 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஏப்ரல் 2016 WTI கச்சா எண்ணெய் 41.05 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 9.4 சதவீதம் சரிந்து 45.27 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil price falls 10% at 4-Year Low after Russia rejects steep OPEC cut

Oil prices closed 10% lower on Friday in one of the market's worst crashes that sent U.S. crude to four-year lows after Russia refused to back Saudi Arabia and other allies in OPEC on deeper production cuts to offset demand lost to the coronavirus.
Story first published: Sunday, March 8, 2020, 5:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X