பிட்காயின் வேண்டாம்.. டோஜ் காயின் நிலைமை தெரியல.. எலான் மஸ்க் திட்டம் இதுதானோ..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சியைப் பெரிய அளவில் ஆதரித்த மிக முக்கியமான நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எலான் மஸ்க், சில நாட்களுக்கு முன்பாக டெஸ்லா நிறுவனம் அறிவித்திருந்த பிட்காயின் பேமெண்ட் முறையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் - டெஸ்லா

எலான் மஸ்க் - டெஸ்லா

எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை உருவாக்கியதற்கு மிக முக்கியமான காரணம் சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்காத ஒரு போக்குவரத்து முறையை உருவாக்க வேண்டும் என்பது. இதற்காகத் தான் எலக்ட்ரிக் கார் உருவாக்கும் இதேவேளையில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையைப் பெரிய அளவில் ஊக்குவித்து அதை முக்கியமான வர்த்தகமாக மாற்றினார்.

மின்சாரப் பயன்பாடு

மின்சாரப் பயன்பாடு

ஆனால் பிட்காயின் உருவாக்குவதில் சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்கும் வழியில் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் காரணத்தால், இது தனது கொள்கைக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் டெஸ்லா கார்களுக்குப் பிட்காயின் ஏற்பதை நிறுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

கிரிப்டோகரன்சி தொழில்நுட்பம்

கிரிப்டோகரன்சி தொழில்நுட்பம்

இதேபோல் கிரிப்டோகரன்சி பல வகையில் சிறப்பானதாகவும், பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு பதிலாகவும், நாணய சந்தையின் எதிர்காலமாகவும் உள்ளது. ஆனால் இதை உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் மின்சாரம் அதிகளவில் நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

பிட்காயினுக்குப் புல்ஸ்டாப்

பிட்காயினுக்குப் புல்ஸ்டாப்

இதனால் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா பிட்காயின் ஏற்பதை நிறுத்துவது மட்டும் அல்லாமல் கையில் இருக்கும் பிட்காயின் விற்பனை செய்யவும் திட்டமிடவில்லை என எலான் மஸ்க் தெரிவித்தார்.

ஆனால் பலருக்கும் ஒரு கேள்வி இதேபோலத் தானே டோஜ்காயினும்.. இதற்கு எலான் மஸ்க்-ன் முடிவு என்ன..?

டிவிட்டர் கேள்வி

டிவிட்டர் கேள்வி

இப்படி ஒவ்வொரு கிரிப்டோகாயினிலும் ஒரு பிரச்சனை இருக்கும் நிலையில் ஏன் உங்களுக்குப் பிடித்தது போல், அனைத்து காரணிகளையும் பூர்த்திச் செய்யும் வகையில் ஒரு கிரிப்டோகரன்சியை உருவாக்கக் கூடாது..? தற்போது கிரிப்டோ உருவாக்கப் பல தொழில்நுட்ப உதவிகள் இருக்கிறது என டிவிட்டரில் எலான் மஸ்க்-யிடம் @long_elon என்பவர் கேள்வி கேட்டார்.

புதிய கிரிப்டோ

புதிய கிரிப்டோ

பிட்காயின் பயன்பாட்டுக்கு முடிவு செய்துள்ள எலான், சற்றும் எதிர்பாராதவிதமாக இந்த டிவிட்டர் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார். டோஜ்காயினும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை எனில், புதிய கிரிப்டோவை உருவாக்கும் பணி என் கழுத்தை நெரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

இப்போ கூடிய விரைவில் எலான் மஸ்க் தலைமையிலான ஒரு நிறுவனம் புதிய கிரிப்டோவை தயாரிக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் பிட்டியினைப் போலவே டோஜ்காயின்-க்கும் இதே பிரச்சனை உருவாக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

பிட்காயின் வேண்டாம்.. டோஜ் காயின் நிலைமை தெரியல.. எலான் மஸ்க் திட்டம் இதுதானோ..?!
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Only if Doge can’t do it. Big pain in the neck to create another one: Elon musk Answers for tweet

Only if Doge can’t do it. Big pain in the neck to create another one: Elon musk Answers for tweet
Story first published: Monday, May 17, 2021, 18:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X