பாகிஸ்தானுக்கு ரூ.41,000 கோடி அபராதம்.. அதிரடி தீர்பளித்த சர்வதேச நடுவர் நீதிமன்றம்...

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் இங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்த பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாநிலமாகும். இங்கு தங்கம் உள்ளிட்ட பல தாதுக்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. இதனால் இந்த தலைநகரம் தாதுக்கள் நிறைந்த தலைநகரம் என்றும் கருதப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த மாநிலம் பல ஆண்டுகளாக, தனி நாடாக அறிவிக்கக் கோரி, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம், பல போராட்டங்கள் இங்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

பாகிஸ்தானுக்கு ரூ.41,000 கோடி அபராதம்.. அதிரடி தீர்பளித்த சர்வதேச நடுவர் நீதிமன்றம்...

என்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..

இந்த நிலையில் சிலி மற்றும் கனடாவை சேர்ந்த, "Tethyan Copper Company" என்கிற கூட்டு நிறுவனத்துக்கு, ரெகோ நகரில் சுரங்க பணிகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது கவனிக்கதக்கது.

கடந்த 2011-ம் ஆண்டு அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலுசிஸ்தான் மாகாண அரசு திடீரென ரத்து செய்து கொண்டது. எனினும் இதை எதிர்த்த அந்த நிறுவனம் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

எனினும் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது என கூறி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையிலேயே இதனை தொடர்ந்து, "Tethyan Copper Company" நிறுவனம் இந்த விவகாரத்தை சர்வதேச நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. அங்கு இந்த வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு சட்டவிரோதமான முறையில் "Tethyan Copper Company" நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு, 5.97 பில்லியன் அமெரிக்க டாலர் ( அதவாது இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ.41,000 கோடி) அபராத தொகையினை கட்ட வேண்டும் என்று சர்வதேச நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் இருந்து வரும் பாகிஸ்தான் அரசுக்கு இது மேலும் ஒரு பலத்த அடியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இது குறித்து கருத்து கூறியுள்ள இந்த நிறுவனம், பாகிஸ்தான் 11.43 பில்லியன் டாலர்களை தனக்கு சேதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. இது இன்று நேற்றல்ல கடந்த 7 ஆண்டுகளாக தொடர்கின்ற பிரச்சனை என்றும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over 5 billion dollar penalty imposed on Pakistan

Over 5 billion dollar penalty imposed on Pakistan
Story first published: Monday, July 15, 2019, 11:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X