Pakistan Airspace: பாகிஸ்தானால் ரூ. 1600 கோடி நட்டத்தை தாங்க முடியாமல் இந்திய விமானங்களுக்கு அனுமதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகிஸ்தான்: கடந்த பிப்ரவரி 18, 2019 அன்று, இந்தியாவின், புல்வாமா பகுதியில் 40-க்கு மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் ஒரு பயங்கர தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்டனர்.

இந்த ஒரு காரணத்தால் பழைய பங்காளியான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நடக்கும் அளவுக்கு உக்ரமடைந்தது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உரசல்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், 26 பிப்ரவரி 2019 அன்று பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் (Pakistan Airspace) நுழைந்து, பாலகோட் பகுதியில் இந்திய விமானப் படை அத்து மீறி தாக்குதல் நடத்தி சுமார் 300 பேரைக் கொன்றதாகச் சொன்னது இந்திய அரசு.

மூடு விழா

மூடு விழா

அப்போது தான் பாகிஸ்தான் அரசு தன் (Pakistan Airspace) வான் எல்லையில், இந்திய விமானங்கள் பறக்க அனுமதி மறுத்தது. கடந்த 2019 ஜூலை 11-ம் தேதி பாகிஸ்தானின் விமானத் துறைச் செயலர் மற்றும் பயணிகள் விமான இயக்ககத்தின் தலைவர் ஷாரூக் நுஷ்ரத், "இந்தியா தன் போர் விமானங்களை பின் வாங்காத வரை, பாகிஸ்தானின் வான் எல்லையை இந்தியா பயன்படுத்த முடியாது" என நேரடியாக ஒரண்டைக்கு இழுத்தார். இந்தியா மசிவதாக இல்லை. போர் விமானங்களை பின் வாங்குவதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை.

சமாதான திறப்பு

சமாதான திறப்பு

ஆனால் கடந்த ஜூலை 16, 2019 அன்று காலை 12.40 மணி அளவில் "பாகிஸ்தான் வான் எல்லையை அனைத்து பயணிகள் விமானமும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என ஒரு வெள்ளைக் கொடி பறந்தது. என்னைய்யா இது நம்மோடு சமாதானம் பேச விரும்புகிறதோ பாகிஸ்தான்..? என இந்தியா யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் பாகிஸ்தானின் விமான இயக்க ஆணையம் (CAA - Civil Aviation Authority)நட்டக் கணக்கு தான், அவர்கள் மூடிய வான் எல்லையை திறக்க வைத்திருக்கிறது என பல செய்திகள் வலம் வந்தன.

பாகிஸ்தான் நட்டம்
 

பாகிஸ்தான் நட்டம்

பாகிஸ்தான் தன் வான் எல்லையை மூடியதால், நாள் ஒன்றுக்கு சுமார் 400 விமானங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் இந்த 400 விமானங்கள் மூலம், பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்துபவர்களிடம் இருந்து வரும் கட்டணம், பாகிஸ்தான் விமான நிலையங்களை பயன்படுத்தும் விமானங்களில் இருந்து வரும் கட்டணம், பாகிஸ்தான் விமான நிலையத்தில் விமான பராமரிப்பு சேவை மற்றும் எரிபொருள் நிரப்பும் சேவை வழியாக பெறப்படும் கட்டணம் என பல வியாபாரங்களை இழந்தது. கடந்த பிப்ரவரி 26 2019 முதல் ஜூலை 16, 2019 வரையான 140 நாட்களில் மட்டும் சுமார் 1,600 கோடி ரூபாய் (பாகிஸ்தானி ரூபாய்) நட்டமடைந்திருப்பதாகச் சொன்னார்கள்.

இதனால் தான்

இதனால் தான்

ஏற்கனவே பாகிஸ்தானிய பொருளாதாரம் தாங்க முடியாத பல பிரச்னைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது Pakistan airspace வான் எல்லையை மூடி வரும் வருமானத்தையும் குறைத்துக் கொண்டால் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்கிற கவலையில் தான் இப்போது இந்தியாவுக்கு வெள்ளைக் கொடி காட்டி வான் எல்லையை பாகிஸ்தான் திறந்திருக்கிறதாம்.

மீசைல மண்ணு ஒட்டல

மீசைல மண்ணு ஒட்டல

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாகிஸ்தானின் பயணிகள் விமானத் துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் "பாகிஸ்தான் தன் வான் எல்லைகளை மூடியதால், சுமார் 1,600 கோடி பாகிஸ்தானிய ரூபாய் நட்டம் அடைந்திருக்கிறது. பாகிஸ்தான் கண்ட நட்டத்தை விட, இந்தியாவுக்கு இரு மடங்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. இது ஒட்டு மொத்த ஏவியேஷன் துறைக்கே பெரிய நட்டம். எனவே, இந்த நேரத்தில் நமக்கு (இந்தியா பாகிஸ்தான்) மத்தியில் நல்லிணக்கம் தான் தேவை எனச் சொல்லி இருக்கிறார்.

இந்திய தரப்பு

இந்திய தரப்பு

இந்திய பாராளுமன்றத்தில் கடந்த ஜூலை 03, 2019 அன்று இந்திய சிவில் ஏவியேஷன் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களையில் பேசிய போது "பாகிஸ்தான், தங்கள் வான் எல்லையை (Pakistan airspace) மூடிக் கொண்டதால் இந்திய விமான சேவை நிறுவனங்கள் சுமார் 550 கோடி நட்டமடைந்திருக்கிறது. அதில் ஏர் இந்தியா 491 கோடி ரூபாய், ஸ்பைஸ் ஜெட் 30 கோடி ரூபாய், இண்டிகோ 25 கோடி ரூபாய் மற்றும் கோ ஏர் 2 கோடி ரூபாய் நட்டமடைந்திருக்கிறார்கள்" எனச் சொல்லி இருக்கிறார். பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்தாமல் மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தினால் தான் இந்த செலவில் பெரும் பகுதி அதிகரித்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் அமைச்சர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan airspace opened to India due to pak rs 1600 crore loss

Pakistan airspace opened to India due to their 1600 pak rs loss
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X