சவுதி உத்தரவால் ஆடிப்போன ஊழல்வாதிகள்.. இந்தியாவிலும் வந்தால் எப்படி இருக்கும்..?!

Written By:
Subscribe to GoodReturns Tamil

கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆதிக்கம் நிறைந்த சவுதி அரேபியா நாட்டில், சில நாட்களுக்கு முன்பு இந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையாக ஊழல் செய்தவர்களை எவ்விதமான கரிசனமும் இல்லாமல் இளவரசர்கள் முதல் மத்திரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் என 200க்கும் அதிகமானோரை கைது செய்தது.

இந்தக் கைதுகள் அனைத்தும் சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனில் சவுதி அரசு அவர்களுக்கு வாய்ப்பை அளித்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பைக் கேட்டு கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் ஆடிப்போயுள்ளது.

கைது

முகமது பின் சல்மான் உத்தரவின் பெயரில் இளவரசர்கள், அமைச்சர்கள், பல முன்னணி தொழிலதிபர்கள், உயர் ராணுவ அதிகாரிகள் எனச் சுமார் 200 பேர் அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்காமல் அவர்களை இந்நாட்டில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ரியாத் பகுதியில் இருக்கும் ரிட்ஸ் கார்ட்லான் ஹோட்டல்களில் உள்ளனர்.

வாய்ப்பு

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நாட்டின் பாதுகாப்பு, அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சவுதி இளவரசர் அனைவருக்கும் விடுதலை பெற ஒரு வாய்ப்பை அளித்துள்ளார்.

அது என்வென்றால்..?

விடுதலை செய்யப்பட வேண்டும் என விரும்பும் அனைவரும் தங்களது மொத்த தனிநபர் சொத்தில் 70 சதவீதத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் என்பதே ஆகும். இது ஊழல் குற்றத்தை செய்தமைக்காக அபராதம் என்றும் முகமது பின் சல்மான் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அனைவரிடமும் அரசு தரப்புகள் விளக்கம் அளித்து வருவதாகவும் தெரிகிறது.

 

சிறை தண்டனை

கைது செய்யப்பட்ட 200 பேரும் பெரிய இடம் என்பதால் யாரும் சிறை செல்லவோ அல்லது அரசுக்கு எதிராக வழக்கு நடத்த விரும்பமாட்டார்கள். ஆகவே அனைவரும் இத்திட்டத்திற்கு ஒப்புக்கொள்வார்கள், ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் வேறு வழியில்லை எனத் தெரிகிறது.

ஆனால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் 70 சதவீதம் என்பதில் சில தளர்வுகள் விதிக்கப்படலாம்.

 

பில்லியன் டாலர் நிதி

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை அடையும்பட்சத்தில் சவுதி அரசு அமைப்பில் பல பில்லியன் டாலர் நிதி குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி பற்றாக்குறை

அமெரிக்கச் சந்தைக்குப் போட்டியாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையைக் குறைத்ததன் மூலம் சவுதி அதிகளவிலான நிதி பற்றாக்குறையைக் கடந்த சில வருடங்களில் சந்தித்தது.

பட்ஜெட் பற்றாக்குறை

கடந்த வருடம் சவுதி அரேபியா நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையாக 79 பில்லியன் டாலர் நிலவியது. இது இந்நாட்டின் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதித்தது குறிப்பிடத்தக்கது.

100 பில்லியன் டாலர்

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் செய்த ஊழல் தொகை மட்டும் சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருக்கும் என இதுகுறித்து விசாரணை செய்த அட்டார்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாலமல் கைது செய்யப்பட்டவர்களின் 1700 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

அலாவுதின் பின் தலால்

சவுதி அரசர் மற்றும் இளவரசர் உத்தரவின் பெயரில் கைது செய்யப்பட்ட வர்களில் மிகமுக்கியமானவர் இந்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளரான அலாவுதின் பின் தலால் தான். இவர் இளவரசர் சல்மானின் மருமகன் ஆவார்.

அலாவுதின் பின் தலால் சவுதியில் மட்டுமல்லாமல் சிட்டிகுரூப் மற்றும் டிவிட்டர் போன்ற முன்னணி நிறுவனங்களில் பெரிய அளவிலான முதலீட்டை செய்துள்ளார்.

 

பிற முக்கியத் தலைகள்

மத்திய கிழக்குப் பிராட்காஸ்டிங் சென்டர் நிறுவிய வாலீத் அல் இப்ராகிம், இவருக்கு அல் அரேபியான் என்ற தொலைக்காட்சி சேனலும் சொந்தமாக உண்டு. சவுதி பின்லாடின் கன்ஸ்டிராக்ஷன் குரூப் தலைவர் பார்க் பின் லேடின் ஆகியோர் கைது செய்யப்பட்ட முக்கியத் தொழிலதிபர்கள் ஆவார்.

இந்தியா

இந்தியாவிலும் இதுபோல் ஊழல் செய்தவர்கள் அரசு உத்தரவின் போல் கைது செய்து சொத்துக்களில் 70 சதவீதத்தைக் கேட்டால் எப்படி இருக்கும்.?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pay for your freedom; last chance given by saudi prince

Pay for your freedom; last chance given by saudi prince
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns