பிரிட்டன் - சீனா பொற்காலம் முடிந்தது.. ரிஷி சுனக் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவில் எப்போதும் பார்த்திடாத வகையில் மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில் சீன நாட்டின் காவல்துறை மக்கள் மீது தனது பலத்தை வெளிப்படுத்தியபோது, சீன அரசின் அடக்குமுறையையும், பிபிசி பத்திரிகையாளர் மீதான தாக்குதலையும் விமர்சித்துச் சீன அரசை ரிஷி சுனக் கண்டித்தார்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு, சீனா சவாலாக உள்ளது எனப் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் திங்கட்கிழமை சீனா-வின் ஜி ஜின்பிங்-கின் ஆட்சியின் சர்வாதிகாரத்தை எச்சரித்தார்.

இதன் மூலம் பிரிட்டன் சீனா மத்தியிலான நட்புறவில் வெளிப்படையாக விரிசல் விழுந்துள்ளது மட்டும் அல்லாமல், ரிஷி சுனக்-ன் சீனா மீதான நிலைப்பாட்டையும் உலக நாடுகளுக்குத் தெரிய வந்துள்ளது.

2022-ம் ஆண்டு குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க சூப்பரான ஐடியாக்கள்!2022-ம் ஆண்டு குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க சூப்பரான ஐடியாக்கள்!

வெளியுறவுக் கொள்கை

வெளியுறவுக் கொள்கை

வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையில் ரிஷி சுனக், வணிகம் மூலம் தானாகவே சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும் என்ற அப்பாவித்தனமான யோசனையை முன் வைத்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் என்று அழைத்த நிலையில், இந்தப் பொற்காலம் இனி முடிந்துவிட்டது என ரிஷி சுனக் கூறினார்.

புதிய அணுகுமுறை

புதிய அணுகுமுறை

இதன் விளைவாக, சீனாவுடனான புதிய அணுகுமுறையைப் பிரிட்டன் உருவாக்க வேண்டும் என்று லண்டனில் லார்ட் மேயர் விருந்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையில் கூறினார்.

மதிப்புகள் மற்றும் நலன்கள்

மதிப்புகள் மற்றும் நலன்கள்

இங்கிலாந்தின் மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு, சீனா சவாலானதாக உள்ளது மட்டும் அல்லாமல் இங்கிலாந்து-சீனா உறவுகளின் நிலை தொடர்ந்தால் சவால்கள் மேலும் மோசமாவது மட்டும் அல்லாமல் சீனா பெரிய அளவிலான அதிகாரத்தைக் காட்டும் என ரிஷி சுனக் பேசியுள்ளார்.

சீனா முக்கியத்துவம்

சீனா முக்கியத்துவம்

இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் ரிஷி சனக் சீனாவை அச்சுறுத்தல் என்று அழைப்பதை நிறுத்திவிட்டு, சர்வதேச விவகாரங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பகிரப்பட்ட சவால்களைச் சரி செய்வதில் சீனாவின் உதவும் திறனை மேற்கத்திய நாடுகள் புறக்கணிக்க முடியாது என்பதையும் ஒப்புக்கொண்டார்.

கன்சர்வேட்டிவ் கட்சி

கன்சர்வேட்டிவ் கட்சி

ரிஷி சனக் கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் போட்டிப்போடும் போது சீனா குறித்த நிலைப்பாடும், தற்போது இருக்கும் நிலைப்பாடும் மிகப்பெரிய அளவில் மாற்றியுள்ளது. இதேபோல் சுனக் சீனா-வை நம்பர் ஒன் ஆபத்து என்று கூறியுள்ளதாகவும், ஆனால் அரசு அறிக்கையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு என மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

உய்குர் முஸ்லிம் மக்கள்

உய்குர் முஸ்லிம் மக்கள்

சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு நடந்தது "கடுமையான மனித உரிமை மீறல்கள்" என்று ஐ.நா-வில் கருத்து முன் வைத்த சில பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சீனா தடை விதித்ததை ரிஷி சுனக் குறிப்பிடுகிறார்.

உள்கட்சி பிரச்சனை

உள்கட்சி பிரச்சனை

சீனாவுக்கு ஆதரவாக நிற்பதில் அவர் மென்மையாக இருப்பதாகக் குறை கூறும் சில கட்சியின் உறுப்பினர்களுக்கு ரிஷி சுனக் இந்த அதிரடி பேச்சு மூலம் உறுதியளிப்பது தெளிவாகத் தெரிகிறது.

ரெசிஷனில் பிரிட்டன்

ரெசிஷனில் பிரிட்டன்

பிரிட்டன் நாட்டின் நிதிமையச்சரான ஜெர்மி ஹன்ட் கடந்த வாரம் பேசும் போது பிரிட்டன் ஏற்கனவே ரெசிஷனில் தான் உள்ளது என அறிவித்தார். இதுவரையில் எந்த ஒரு நாடும் ரெசிஷனுக்குச் சென்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பொருளாதாரம் ரெசிஷனுக்குச் சென்றுவிட்ட நிலையிலும் ரிஷி சுனக் அரசு சுமார் 55 பில்லியன் யூரோ மதிப்பிலான வரி உயர்வு மற்றும் செலவின குறைப்புத் திட்டத்தை அறிவிக்க உள்ளது.

அக்டோபர் பணவீக்கம்

அக்டோபர் பணவீக்கம்

பிரிட்டன் நாட்டின் அக்டோபர் மாத பணவீக்கம் 11.1 சதவீதமாக அதிகரித்து 41 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. பிரிட்டன் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிப்பது எரிபொருள் செலவுகள் தான். ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியது முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rishi Sunak says end of golden era between Britain and China relationship; warns authoritarianism of Xi Jinping

Rishi Sunak says end of a golden era between Britain and China relationship; warns authoritarianism of Xi Jinping
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X