ரஷ்ய வங்கிக்கு பெரிய அடி.. UAE அரசு இப்படிப் பண்ணும்ன்னு எதிர்பார்க்கல..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்ய வங்கித்துறையில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தும் Sberbank, உக்ரைன் போருக்கு பின்பு மேற்கத்திய நாடுகள் அனைத்தும் அடுத்தடுத்துத் தடை விதித்துப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

 

இந்த நிலையில் தற்போது உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்ய Sberbank-க்கிற்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் அந்நாட்டை விட்டே வெளியேற்ற முடிவு செய்து பெரும் அதிர்ச்சியை உலக நாடுகளுக்கு அளித்துள்ளது.

9 ரஷ்ய வங்கிகள் இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளை திறந்தது..! 9 ரஷ்ய வங்கிகள் இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளை திறந்தது..!

ரஷ்யா - இந்தியா

ரஷ்யா - இந்தியா

ரஷ்யா இந்தியா உடன் மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுடன் டாலர், யூரோ அல்லாமல் சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள வேளையில், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை விட்டு ரஷ்ய Sberbank வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2023 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டில் இயங்கி வரும் ரஷ்ய Sberbank-ன் அலுவலகத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்று ரஷ்ய Sberbank முதல் துணைத் தலைவர் Alexander Vedyakhin திங்கட்கிழமை அறிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர்
 

ரஷ்யா - உக்ரைன் போர்

2022 ஆம் ஆண்டுப் பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய படைகள் ஆயுதங்கள் உடன் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் ரஷ்யாவின் நிதி அமைப்பைக் குறிவைத்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் மேற்கத்திய நாடுகள் தடைகள் விதித்தன.

SWIFT பேமெண்ட்

SWIFT பேமெண்ட்

இது மட்டும் அல்லாமல் ரஷ்யாவில் இயங்கி வரும் பெரும்பாலான வங்கிகள் சர்வதேச நிதி பரிமாற்ற தளமான SWIFT பேமெண்ட் அமைப்பிலிருந்து தடை செய்யப்பட்ட நிலையில், ரஷ்யாவின் சர்வதேச நிதி பரிமாற்றத்தில் இருந்து மொத்தமாக விலக்கப்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட ரஷ்ய வங்கிகளில் Sberbank ஒன்றாகும்.

பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடைகளின் எதிரொலியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் தலைநகரான அபுதாபியில் உள்ள எங்கள் SberInvest மத்திய கிழக்கு அலுவலகத்திற்குக் கடுமையான நெருக்கடிகளையும், தடைகளை எதிர்கொள்கிறோம். இதனால் துரதிர்ஷ்டவசமாக, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதை மூட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ரஷ்ய Sberbank முதல் துணைத் தலைவர் Alexander Vedyakhin செய்தியாளர்களிடம் கூறினார்.

ரஷ்யா Sberbank

ரஷ்யா Sberbank

UAE சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு Sberbank தொடர்ந்து சேவை செய்யும் என்றும், சீனாவில் புதிய அலுவலகம் திறப்பது குறித்துச் சீன வங்கி கட்டுப்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் Alexander Vedyakhin கூறினார். பொதுவாக 2 வருடம் ஆகும் நிலையில், சீனாவில் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் சீனாவில் வங்கி கிளை திறக்கும்.

ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய மத்திய வங்கி

வியன்னாவை தளமாகக் கொண்ட Sberbank இன் ஐரோப்பியப் பிரிவு, மார்ச் மாதத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் உத்தரவின்படி மூடப்பட்டது. Sberbank வைப்புத் தொகையில் தோல்வியைச் சந்தித்ததாக எச்சரித்ததை அடுத்து ஐரோப்பிய மத்திய வங்கி இந்த உத்தரவை வெளியிட்டதாகத் தகவல் வெளியானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia closing Sberbank UAE office; Western sanctions causing serious constraints

Russia closing Sberbank UAE office; Western sanctions causing serious constraints
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X