கடனில் சிக்கிய நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் ரஷ்ய மத்திய வங்கி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாஸ்கோ: ரஷ்யாவின் பணவீக்கம் உயர்ந்துவருவதர்கான வெளிப்படையான அறிகுறிகள் தெரியும் வேளையில் அந்நாட்டு மத்திய வங்கி ரூபிளின் வீழ்ச்சியை சரிகட்ட நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் மிகவும் மோசமான நிலைமையில் இருக்கும் ரஷ்ய ரூபிளை மீட்பது ரஷ்ய நிதி அதிகாரிகளின் முழுமுதற்கண் வேலையாகும்.

கடனில் சிக்கிய நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் ரஷ்ய மத்திய வங்கி!!

ரஷ்ய பொருளாதார தற்போதுள்ள நிலைமையில் கவலைக்குரிய விஷயமாக இருப்பது 55 சதவிகித வீழ்ச்சியடைந்த ரூபிள் மதிப்பை உயர்த்துவது தான்.

அந்நாட்டின் புள்ளிவிவர அமைப்பு, நுகர்வோர் விலைகள் கடந்த வாரம் சுமார் 0.9 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்ததாவும், கடந்த வாரம் இறக்குமதியாளர்கள் மின்னணு சாதனங்கள், கார்கள் ஆகியவற்றை இறக்குமதிகள் அதிகரித்தால் ரூபிளின் வீழ்ச்சியினால் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் தெரிவித்தது. 2008ஆம் ஆண்டில் நிகழ்ந்து உலகலாவிய நெருக்கடியை விட இது மிகப்பெரிய உயர்வாகும்.

கடனில் சிக்கிய நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் ரஷ்ய மத்திய வங்கி!!

கடந்த புதன்கிழமையன்று, ரஷ்யாவின் மிகப்பெரும் வங்கியான, Sberbank கடந்த வாரம் முதலீட்டாளர்கள் தங்களுடைய வாய்ப்பைக் குறித்து கவலையடைந்ததால் நெருக்கடியை சந்தித்ததாக தெரிவித்தது. அதன் தலைவர் அலெக்சாண்டர் டோர்பகோவ் ரஷ்ய செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் தங்கள் வங்கி ஒரு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கத் தயார் என தெரிவித்தார். இந்த நிதி நிலை பாதிப்பினை சரிசெய்யும் முயற்சியாக வைப்புகள் மற்றும் அடமான கடன்களின் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது இவ்வங்கி.

ரூபிளின் நெருக்கடி நிலை அந்த நாட்டின் மத்திய வங்கி, அன்னியச் செலாவணிக் கடன்களை புதிய கடன்களுக்கான உத்திரவாதமாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை கவர இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு அதனை மறு கடன்களாக மாற்ற உதவும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia's central bank to help companies meet debts

With inflation showing clear signs of picking up, Russia's central bank on Wednesday launched another initiative to shore up the ruble, offering hard currency loans to help companies and banks service their debts.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X