ரஷ்யாவுக்கு சரியான செக்..அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடாவின் அதிரடி திட்டம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகள் பலவும் பலமான கண்டனங்களை தெரிவித்து வந்தாலும், பொருளாதார தடைகளை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது.

இது உக்ரைனில் பேரழிவினை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னதாக முக்கிய தளவடாங்கள், உக்ரைனின் ராணுவ அலுவலகங்கள், கம்யூனிகேஷன், இணையம் என பல அம்சங்களில் கைவைத்தது. ஆனால் தற்போது ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்கள் என குறி வைத்து தாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பல நகரங்களில் ஆங்காங்கே குண்டு வெடித்து தீம்பிழப்புகள் பரவி வருவதும், மக்களின் அலறல் சத்தம், சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் தங்களை காப்பாற்ற கோரிக்கை விடுத்து வருவதும் பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது.

நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணீடாதீங்க..! நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணீடாதீங்க..!

வேதனையளிக்கும் சம்பவங்கள்

வேதனையளிக்கும் சம்பவங்கள்

இதற்கிடையில் பல இடங்களில் மக்கள் கட்டிடங்களின் கீழ் இருக்கும் பதுங்கு குழிகளில், உணவு, தண்ணீர், மின்சாரம் என எந்த விதமான அத்தியாவசியமான தேவைகளும் இல்லாமல் தவித்து வருகின்றது. இது பார்ப்போருக்கு மிக வேதனையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், உயிரை பாதுகாக்க வேறு வழியில்லாமல் தவிக்கும் மக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன அண்டை நாடுகள்.

ஸ்விப்ட் சேவையில் இருந்து தடையா?

ஸ்விப்ட் சேவையில் இருந்து தடையா?

ஏற்கனவே பல பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகள் ஸ்விப்ட் பரிமாற்ற சேவையில் இருந்து தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. அதெல்லாம் சரி அதென்ன ஸ்விப்ட் (SWIFT)? இதனை தடை செய்தால் ரஷ்யாவுக்கு என்ன பாதிப்பு. இதனால் மற்ற நாடுகளுக்கு என்ன பாதிப்பு? வாருங்கள் பார்க்கலாம்.

ஸ்விப்ட் என்றால் என்ன?

ஸ்விப்ட் என்றால் என்ன?

ஸ்விப்ட் என்பது பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட வங்கிகளுக்கான ஒரு அமைப்பாகும். இது கடந்த 1970ல் நிறுவப்பட்டதாகும். இது பணம் செலுத்துதல், வர்த்தகம் மற்றும் நாணய பரிமாற்றங்களுக்கான ஆர்டர்கள் மற்றும் உறுதிபடுத்தல்கள் உட்பட எழுத்துபூர்வ செய்தியினை அனுப்ப பயன்படும் ஒரு அமைப்பாகும். இது வங்கிகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கான மெயில் போன்றது.

ஸ்விப்ட் தடை செய்தால் ரஷ்யாவுக்கு என்ன பயன்?

ஸ்விப்ட் தடை செய்தால் ரஷ்யாவுக்கு என்ன பயன்?

ஸ்விப்ட்-னை பயன்படுத்த முடியவில்லை எனில், ரஷ்ய வங்கிகள் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு மெயில் போன்ற காலாவதியான தொழில் நுட்பத்தினை நம்பியிருக்க வேண்டும். இது அவர்களின் பரிமாற்ற வேகத்தினை குறைக்கும். அதனால் செலவினையும் அதிகரிக்கும்.

பரிவர்த்தனை பாதிக்கலாம்

பரிவர்த்தனை பாதிக்கலாம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளின் இந்த முடிவால், ரஷ்யாவின் பணபரிமாற்றங்கள் தாமதமாகலாம். எனினும் ஐரோப்பிய நாடுகள் எரிபொருளுக்காக பெரியளவில் ரஷ்யாவினையே சார்ந்துள்ளன. இதன் காரணமாக ஒரு புறம் இதற்கு தயக்கம் காட்டினாலும், உக்ரைன் மீதான தொடர் தாக்குதல் , அண்டை நாடுகளை இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க தூண்டலாம்.

பல நாடுகளின் திட்டம்

பல நாடுகளின் திட்டம்

இந்த ஸ்விப்ட் தளமானது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 11000 நிதி நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த முடிவினை எடுத்திருந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் இன்னும் சில நாடுக்ள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் பயன்பாடு

ரஷ்யாவின் பயன்பாடு

ரஷ்யாவில் மட்டும் 300 நிதி நிறுவனங்கள் இந்த ஸ்விப்ட் பயன்பாட்டினை பயன்படுத்தி வருகின்றது. இது மெசேஜ்ஜிங் மூலம் நிதி நிறுவனங்களை இணைக்கிறது. இந்த பாதுகாப்பான முறையானது பெரியளவில் பரிவர்த்தனை செய்யப்படும்போது, வங்கிகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்த பரிவர்த்தனை மூலம் ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

செலவு அதிகரிக்கும்

செலவு அதிகரிக்கும்

ஒரு வேளை ஸ்விப்ட் தடை செய்யப்பட்டால், ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்படும் பரிவர்த்தனையானது பாதிக்கப்படலாம். இதனால் தனி நபர், நிறுவனங்கள் உட்பட பலரும் பாதிக்கப்படலாம். மொத்தத்தில் இது ரஷ்யாவுக்கு பெரும் சிக்கலாக இருக்கும். இதனுடம் செலவும் அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia - ukraine crisis! what is SWIFT? if banning SWIFT how it affect Russian banks?

Russia - ukraine crisis! what is SWIFT? if banning SWIFT how it affect Russian banks? ரஷ்யாவுக்கு சரியான செக்..அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடாவின் அதிரடி திட்டம்.. !
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X