என்ஆர்ஐ-களுக்கு வலைவீசும் 'ரஷ்யா'.. ஐடி ஊழியர்களுக்கு யோகம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

அமெரிக்க விசா விதிமுறைகளைக் கடுமையாக்கி வரும் நிலையில், எச்1பி, எல்1 விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்து வரும் இந்தியர்கள் அடுத்தச் சில மாதங்களில் அல்லது வருடங்களில் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியர்களின் திறமை மற்றும் அறிவை மிகவும் குறைந்த செலவில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் என்ஆர்ஐகளுக்குச் சீனா, ஜப்பான் நாடுகள் பல்வேறு சலுகைகளை அளித்து இந்தியர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துள்ள நிலையில், தற்போது இப்பட்டியலில் ரஷ்யாவும் இணைந்துள்ளது.

ரஷ்யா அழைப்பு..

ரஷ்யா இந்திய திறமைகளுக்கு வரவேற்பு மட்டும் அல்லாமல் எங்கள் நாட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துத் தரவும் உதவும் செய்வோம். இது இருநாடுகளுக்கு வெற்றிகரமான வாய்ப்பாக இருக்கும் என்று ரஷ்யாவின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டென்னிஸ் மன்ட்ரோவ் கூறியுள்ளார்.

என்ஆர்ஐ-களின் எதிர்காலம்..?

அமெரிக்கா அரசு விசா மற்றும் குடியுரிமை விதிகளைக் கடுமையாக்கி வரும் நிலையில் அந்நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனை அடிப்படையாக வைத்தே ரஷ்யா இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

திறமை

மேலும் இதுகுறித்துப் பேசிய டென்னிஸ்.. இந்திய திறமைகளுக்கு ரஷ்யா வரவேற்கிறது. அதிகத் திறமைவாய்ந்த இந்தியர்களுக்கு ரஷ்யா நாட்டில் அனைத்து வாய்ப்புகளும்க கிடைக்கும், அதுமட்டும் அல்லாமல் ரஷ்யாவிலேயே செட்டில் ஆகவும் ரஷ்ய அரசு உதவி செய்யத் தயாராக உள்ளது.

உலகளவில் சிறந்த கணித மேதைகளை இந்திய மற்றும் ரஷ்யா கொண்டுள்ளது என்று கூறினார்.

 

2வது சுற்றுப் பயணம்

கடந்த 6 மாதத்தில் 2வது முறையாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அமைச்சர், இந்தியா - ரஷ்ய இடையே உள்ள 70 வருட நட்புறவை கொண்டாடவும், St Petersburg நகரில் நடக்கும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் இந்தியாவை விருந்தினராக மோடியை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டென்னிஸ் மன்ட்ரோவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய கார்பரேட்கள்

சர்வதேச பொருளாதார மாநாட்டு மூலம் இந்திய கார்பரேட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.

இந்தியா - ரஷ்ய இடையே உள்ள 70 வருட நட்புறவில் இந்த மாநாட்டிற்கு மோடியின் வருகை எங்களைப் பெருமைப்படுத்தும்.

 

5000 வர்த்தகத் தலைவர்கள்

இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இணைந்து 5000 வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் St Petersburg சர்வதேச பொருளாதார மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.

சீனா, ஜப்பான்

அமெரிக்கா பொருளாதாரத்துடன் போட்டுப்போடும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பணிகளில் இருக்கும் பிற நாட்டவர்களை (திறமையானவர்கள்) தங்களது நாட்டு ஈர்க்கப் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.

இதில் ஜப்பான் ஒரு படி மேல்...!!!

 

புதிய விதிகள்..

வெளிநாடுகளில் இருக்கும் திறமையானவர்களை ஜப்பான் நாட்டிற்கு ஈர்க்க, நிரந்தரக் குடியுரிமை வழங்கும் புதிய விதிமுறைகளையும், அதிகளவிலான தளர்வுகளையும் ஜப்பான் நாட்டின் நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒரு வருடத்தில் குடியுரிமை

ஜப்பான் நாட்டின் நீதி அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் அனைத்தும் வருகிற மார்ச் மாத இறுதியில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

இப்புதிய விதிமுறைகளில், நிரந்தரக் குடியுரிமைக்காக ஒரு விண்ணப்பம் அனைத்துத் தகுதிகளையும் பெற்றால் ஒரு வருடத்திற்குள் அவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும்.

தகுதிகள் எட்டப்படாதவர்களுக்கு 10 வருடம் ஜப்பான் நாட்டில் வாழ்ந்தாலே போதும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவதாக இந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

சீனா... அறிவாளி இந்தியர்கள்

அமெரிக்காவின் டெக்னாலஜி மற்றும் இன்னோவோஷன் துறையின் முக்கியச் சக்தியாக இருப்பது இந்தியர்கள் என்பது உலக நாடுகளுக்குத் தெரிந்த ஒன்று.

இதனைக் குறிவைத்து சீனா நாட்டினர் தற்போது அமெரிக்காவில் வெளியேற்றப்படும் இந்தியர்கள், மற்றும் அமெரிக்கா செல்ல விரும்பு அறிவாளி (High skilled or skilled) இந்தியர்களைத் தன் நாட்டில் ஈர்க்க முடிவு செய்துள்ளது சீனா.

 

சீனாவின் அதிரடி திட்டம்..

பல்வேறு பிரச்சனைகளால் சீன நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகளவில் பாதித்த நிலையில், டெக்னாலஜி மற்றும் இன்னோவோஷன் துறையில் கவனத்தைச் செலுத்தி அமெரிக்க உடன் நேரடியாகப் பொருளாதாரத்தில் போட்டுப்போட முடிவு செய்துள்ளது.

சீனா நாட்டின் இப்புதிய திட்டத்திற்கு அடித்தளம் அமைப்பவர்கள் இந்தியர்கள்.

 

குளோபல் டைம்ஸ்

இதுகுறித்து இந்நாட்டு அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் இன்னோவேஷன் திறமையை மேம்படுத்த, சீனா இந்தியர்களை அதிகளவில் பணியில் அமர்த்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரையில் காலங்களில் சீனா அதிகளவிலான இந்தியர்களையும், இந்திய அறிவியலையும் பயன்படுத்தாதது உறுதியாகியுள்ளது.

 

 

புதிய இடம்

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களுக்கு என்ன செய்வதென்று புரியாமல் இருந்தவர்களும் தற்போது புதிய இடம் கிடைத்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்க விசா கட்டுப்பாடுகளைக் கண்டு இனி அஞ்சத் தேவையில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia to welcome Indian brains, talent

Russia to welcome Indian brains, talent - Tamil Goodreturns
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns