விவாகரத்து வேணுமா, 7 பில்லயன் டாலர் கொடு.. ரஷ்ய பில்லியனருக்கு மனைவி கொடுத்த ஷாக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்ய நாட்டின் 2வது பெரிய பணக்காரரான விளாடிமிர் பொட்டானின் விவாகரத்து தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமேசான் ஜெப் பெசோஸ், மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ்-க்கு அடுத்தபடியாக மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாக
விளங்குகிறது.

பெரும் பணக்காரர்களின் விவாகரத்து எப்போதுமே உலக மக்களை அதிர்ச்சியை வைத்து வரும் நிலையில், விளாடிமிர் பொட்டானின் மட்டும் விதிவிலக்கல்ல.

 2 டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் ஆர்பிஐ.. எதற்காகத் தெரியுமா..? 2 டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் ஆர்பிஐ.. எதற்காகத் தெரியுமா..?

விளாடிமிர் பொட்டானின்

விளாடிமிர் பொட்டானின்

விளாடிமிர் பொட்டானின் மனைவி நடாலியா பொட்டானினா லண்டன் நீதிமன்றத்தில் அவருக்கு விவாகரத்து அளிக்க வேண்டுமெனில், அவருடை கனவர் தலைமை வகிக்கும் MMC நோரில்ஸ்க் நிக்கல் PJSC நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

50 சதவீத பங்குகள்

50 சதவீத பங்குகள்

விளாடிமிர் பொட்டானின் வைத்திருக்கும் MMC நோரில்ஸ்க் நிக்கல் PJSC நிறுவனத்தின் மொத்த பங்குகளில் நிறுவனத்தின் 3ல் ஒரு பங்கு பங்குகளை வைத்துள்ளார். இந்த நிலையில் நடாலியா கோரும் 50 சதவீத பங்குகளின் மதிப்பு பல பில்லியன் டாலராகும்.

மேல்முறையீடு
 

மேல்முறையீடு

லண்டன் கீழ் நீதிமன்றத்தில் நடாலியா பொட்டானினா மீது divorce tourism குற்றம் சுமத்தியதால், பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். விளாடிமிர் பொட்டானின் இந்த விவாகரத்துக்காக நீண்ட காலமாகப் போராடி வருகிறார்.

 பணக்காரர்கள்

பணக்காரர்கள்

லண்டன் நீதிமன்றம் இதுபோன்ற காஸ்ட்லியான விவாகரத்துக்களை விசாரிப்பதில் மிகவும் பிரபலமானவை என்பதால் உலக நாடுகளில் இருக்கும் பல பணக்காரர்கள் விவாகரத்துக்காக லண்டன் நீதிமன்றத்தை அனுகி வருகிறார்கள்.

630 மில்லியன் டாலர்

630 மில்லியன் டாலர்

பிரிட்டன் நீதிமன்றத்தில் இதுவரை அதிகப்படியான ஜீவனாம்சம் அளிக்கப்பட்டது, 450 மில்லியன் பவுண்ட் அதாவது 630 மில்லியன் டாலர், இது பில்லியனரான ஃபர்காத் அக்மெடோவ் மனைவிக்குக் கொடுக்கப்பட்டது. இதன் பின் தற்போது விளாடிமிர் பொட்டானின் - நடாலியா பொட்டானினா விவாகரத்து வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோரிக்கைகள்

பல கோரிக்கைகள்

நடாலியா பொட்டானினா தனது மேல் முறையீட்டில் MMC நோரில்ஸ்க் நிக்கல் PJSC நிறுவனத்தின் பங்கு இருப்பில் 50 சதவீதம் மட்டும் அல்லாமல் 2014ஆம் ஆண்டில் இருந்து கிடைக்க வேண்டிய ஈவுத்தொகையில் 50 சதவீதத்தையும், ரஷ்யாவில் இருக்கும் ஆடம்பர மாளிகையான Autumn House-ம் தனக்கு வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 ரஷ்ய நீதிமன்றம்

ரஷ்ய நீதிமன்றம்

31 வருட திருமண வாழ்க்கையில் ரஷ்ய நீதிமன்றத்தில் தனக்குக் கிடைத்த ஜீவனாம்சம் வெறும் 40 மில்லியன் டாலர் மட்டுமே எனப் பிரிட்டன் நீதிமன்ற மேல் முறையீட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் டிமிட்ரி ரைபோலோவ்லேவ் தனது மனைவியை விவாகரத்து செய்யும் போது அவருடைய மனைவி எலெனா ரைபோலோவ்லேவா4.5 பில்லியன் டாலர் ஜீவனாம்சம் கோரினார். ஆனாஸ் சிவிஸ் நீதிமன்றம் வெறும் 600 மில்லியன் டாலர் மட்டுமே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russian Billionaire Vladimir Potanin Faces $7 Billion Divorce Claim in London

Russian Billionaire Vladimir Potanin Faces $7 Billion Divorce Claim in London விவாகரத்துக்கு 7 பில்லயன் டாலர்.. ரஷ்ய பில்லியனருக்கு மனைவி கொடுத்த ஷாக்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X