சாம்சங் மொபைல் விற்பனை மந்தம் ஆனால் லாபத்தில் சாதனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாமசங் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவை சந்தித்துள்ளதாகவும், வருவாய் வளர்ச்சி குறைவாக உள்ளதாக 2018-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிடும் போது தெரிவித்துள்ளது.

மெமரி சிப்ஸ், ஸ்மார்ட்போன் மற்றும் டிவி-ஐ அதிகளவில் தயாரித்து வரும் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஓல்ஈடி பேனல்களுக்கு அமோக வரவேற்பு உண்டு. அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தின் சிலிக்கான் சிப் தயாரிப்பு வணிக மிகப் பெரிய அளவில் வளர்ச்சியினை நோக்கிச் சென்று வருகிறது.

வணிகங்கள்
 

வணிகங்கள்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் செய்து வரும் அனைத்து வணிகங்களையும் சேர்த்தால் லாபம் அதிகளவில் இருந்தாலும் டிஸ்ப்ளே பேனல் மற்றும் ஸ்மார்ட்போன் மொபைல் பிரிவில் விற்பனை மந்தமாக உள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிலிக்கான் சிப்

சிலிக்கான் சிப்

என்ன தான் சாம்சங் நிறுவனம் மொபைல் போன் விற்பனை மந்தமாகத் தெரிவித்து இருந்தாலும் அதன் சிலிக்கான் சிப் வணிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் பங்குகள் விலை சரியவில்லை.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

சாம்சங்கின் போட்டி நிறுவனங்களான எஸ்கே ஹைனிக்ஸ் இன்க் மற்றும் தைவான் செமிகண்டக்ட்டர் மேன்யூஃபேக்சரிங் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சிப் விற்பனை மந்தமாக உளதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்குச் சிப்கல் விநியோகிக்கும் டிஎஸ்எம்எஸ்சி சென்ற மாதம் தங்களது வருவாய் இலக்கினையும் குறைத்துக்கொண்டது.

ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளரான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் சர்வர்களுக்கான டிராம் மட்டும் இல்லாமல் மொபைல் டிராம் விற்பனையும் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 வருவாய்
 

வருவாய்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் செயல்பாட்டு லாபம் 14.4 பில்லியன் டாலர்களாக முதல் காலாண்டில் உள்ளதாகவும், இதே காலாண்டில் சென்ற ஆண்டினை விட 58 சதவீத உயர்வு என்று தெரிவித்துள்ளது. வருவாய் 19.8 சதவீதம் உயர்ந்து 60.6 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.

விற்பனை

விற்பனை

சாம்சன்ங் மார்ச் மாதம் அறிமும் செய்துள்ள கேலக்ஸி எஸ்9 போனை இது வரை 1 கோடிக்கும் அதிகமாக விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சந்தை

சந்தை

சாம்சங் ஸ்மார்ட்போனின் சந்தையானது சர்வதேச அளவில் 2 சதவீதம் சரிந்து 347 மில்லியன் போனை 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வட அமெரிக்கா சந்தை தான் மந்தமாக உள்ளது என்றும் சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

விற்பனை விலை

விற்பனை விலை

அதே நேரம் சாம்சங் போனின் விற்பனை விலை 21 சதவீஹம் வரை ஒவொரு ஆண்டும் சராசரியாக அனைத்து காலாண்டுகளிலும் உயர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் வருவாயில் முன்னிலையில் உள்ள சாம்சாங்கின் வருவாய் தற்போது ஆண்டுக்கு 128.8 பில்லியன் டாலராக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Samsung Electronics mobile market weakness in golbal market: Q1 Report

Samsung Electronics mobile market weakness in golbal market: Q1 Report
Story first published: Thursday, April 26, 2018, 12:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?