சாம்சங் நிறுவனத்தின் லாபம் 37.4% சரிந்தது!! விற்பனையில் கடுமையான போட்டி அளிக்கும் ஜியோமி...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியோல்: மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் சாம்சங் 2014ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு 37.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் 2011ஆம் ஆண்டுக்கு பின் இந்நிறுவனம் வருவாயில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை கண்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடனான காப்புறிமை வழக்கில் தோற்றது முதல், இந்நிறுவனம் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகளவில் இழந்து வருகிறது மறுக்க முடியாத உண்மை.

கடுமையன போட்டி

கடுமையன போட்டி

சந்தையில் புதிய நிறுவனங்களின் வருகையும், இந்நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 6 வருகையும் இந்நிறுவனத்தின் விற்பனையை அதிகளவில் பாதித்தது.

ஜியோமி ஓரம் கட்டியது

ஜியோமி ஓரம் கட்டியது

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் முக்கிய மற்றும் மிகப்பெரிய சந்தையான சீனாவில், ஜியோமி நிறுவனத்தின் வருகையால் இந்நிறுவனத்தின் விற்பனை கடுமையாக பாதித்தது. சீனாவில் இவ்வருட மொபைல் விற்பனையில் ஜியோமி நிறுவனம் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

காலாண்டு வருவாய்

காலாண்டு வருவாய்

மேலும் இந்நிறுவனம் 2014 நிதியாண்டின் நான்காவது காலாண்டு லாப கணிப்புகளான 5 டிரில்லியன் வான் (won- தென் கொரிய நாணயம்) என்ற அளவை உடைத்து 5.2 டிரில்லியன் வான் பெற்றுள்ளது.

25 டிரில்லியன் வான்

25 டிரில்லியன் வான்

இந்நிறுவனத்தின் வருடாந்திர லாப கணிப்புகளின் அளவு 25 டிரில்லியன் வான், இது 3 வருடத்தில் கணிக்கப்பட்ட குறைவான அளவாகும். மேலும் இந்நிறுவனம் 2014ஆம் ஆண்டில் 3வது காலாண்டில் வெறும் 4.1 டிரில்லியன் டாலர் மட்டுமே, இது இந்நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் குறைவான வருவாயாகும்.

2015ஆம் ஆண்டு

2015ஆம் ஆண்டு

மேலும் நிறுவனத்தின் இந்த மந்தமான விற்பனை நிலை 2015ஆம் ஆண்டின் 2வது காலாண்டு முதல் சீரடையும் என இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகள் வெளிவந்த நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் பங்குசந்தையில் 1 சதவீதம் உயர்ந்தது.

வான் மதிப்பு

வான் மதிப்பு

தென் கொரியாவின் நாணயமான வான் இந்திய ரூபாய்க்கு எதிராக 0.057 ரூபாய் என்று மதிப்பிடப்படுகிறது. இதே போன்று பிர நாணய மதிப்புகள் தெரிந்துக்கொள்ள இதை கிளிக்கவும்....

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Samsung Electronics tips first annual profit fall in 3 years

Samsung Electronics Co. Ltd. on Thursday said its fourth-quarter profit likely fell 37.4 per cent, confirming expectations for its first year of profit decline since 2011 as it struggles to retain its crown as global smartphone leader.
Story first published: Thursday, January 8, 2015, 14:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X