ஓமனை தொடர்ந்து சவுதியிலும் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடை.. இந்தியர்கள் பாதிப்பு!

Posted By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சவுதி: உள்நாட்டு ஊழியர்களை அதிகப்படியாகப் பணிக்கு எடுக்க வேண்டும் என்று வேலையின்மை என்பதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சவுதி அரேபியாவும் 12 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கத் தடை விதித்துள்ளது.

சென்ற வாரம் இதே போன்று ஓமனும் 4 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைக்காலத் தடை வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒப்புதல்

வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதில் உள்ள தடைக்குத் தொழிலாளர் துறை அமைச்சரான அலி பின் நாசர் அல் கஃபீஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள்

சவுதியில் 12 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளதால் புதிய விதிகளால் இவர்களுக்கு அதிகப் பாதிப்புகள் உள்ளது. வெளிநாட்டு ஊழியர்களால் தான் 20 மில்லியன் சவுதி ஊழியர்கள் குறைந்த ஊதியத்திற்காக வேலை செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இந்தியர்கள்

சவுதி அரேபியாவின் இந்த அதிரடி முடிவால் 30 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவில் எச்1-பி விசா போன்ற கொள்கை மாற்றத்தால் இந்திய ஊழியர்கள் நாடு திரும்பும் நிலை உருவாகி வரும் நிலையில் சவுதி அரசின் முடிவு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியா

2020-ம் அண்டிற்குள் சவுதியில் யாருக்கும் வேலை இல்லை என்று கூறக்கூடாது என்ற நிலையில் இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளது.

12 துறைகள்

கார் மற்றும் மோட்டார் பைக் ஷோரூம்
ரெடிமேட் துணி கடைகள்
வீட்டு மற்றும் அலுவலகத் தளபாடங்கள் கடைகள்
வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை பாத்திரங்கள் கடைகள்
எலக்ட்ரானிஸ் கடைகள்
கடிகார நிறுவனங்கள் மற்றும் கடிகாரங்கள்
கண் கண்ணாடி கடைகள்
மருத்துவ உபகரணம் மற்றும் இதர அளிப்புகள்
கட்டுமான பொருட்கள் கடைகள்
வாகன உதிரி பாகங்கள் விற்பனை
கார் விற்பனை கடைகள்
இனிப்புக் கடைகள்

வர்த்தகம்

சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 4வது மிகப் பெரிய வர்த்தகத் தொடர்புடைய நாடாகச் சவுதி இருக்கிறது. இந்தியா இங்கு இருந்து அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியினைச் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia bans foreign workers in 12 sectors, many Indians to be affected

Saudi Arabia bans foreign workers in 12 sectors, many Indians to be affected
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns