சீன நிறுவனங்களுக்கு செக் வைத்த அமெரிக்கா.. வெளிப்படைத்தன்மை இல்லை என SEC விமர்சனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவுக்கு இது போறாத காலமே. ஏனெனில் சுற்றி சுற்றி பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சீனா கொரோனாவிலிருந்து வெளி வந்தாலும் அதனை விட பல மடங்கு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

 

ஒன்று கொரோனா என்னும் அரக்கனை சீனா பரப்பி விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இரண்டாவது கொரோனாவினால் ஸ்தம்பித்து போயுள்ள பொருளாதாரத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்களை வளைத்து போடுவதாக இப்படியாக பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது.

வெளிப்படைதன்மை இல்லை

வெளிப்படைதன்மை இல்லை

இந்த நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை பூதாகரமாக மீண்டும் கிளம்பியுள்ளது. அது அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தான், நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள (NYSE) சீன நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மை இல்லை என விமர்ச்சித்துள்ளது. இது முதல் முறை அல்ல எனவும் கூறப்படுகிறது.

நடைமுறைகளை பின்பற்றுவதில்லை

நடைமுறைகளை பின்பற்றுவதில்லை

மேலும் சீனா நிறுவனங்கள் அமெரிக்கா நிறுவனங்கள் பின்பற்றுவதை போல் கடுமையான நடைமுறைகளை கடைபிடிப்பதில்லை. கடந்த செவ்வாய்கிழமையன்று தான் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வளர்ந்து வரும் சந்தையில் முதலீடு செய்வது குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டது. இது குறிப்பாக சீனாவினை குறி வைத்து வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

வர்த்தகத்திற்கு தடை
 

வர்த்தகத்திற்கு தடை

மேலும் இந்த பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் ஸ்டார்பக்ஸ், எஸ்பியுஎக்ஸ், லக்கின் காஃபி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த நான்கு வாரத்தில் 80% சரிந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல சில சீனா நிறுவனங்கள் வர்த்தகத்திற்கு தடையும் விதிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீண்டகால போராட்டம்

நீண்டகால போராட்டம்

இது குறித்து கடந்த புதன்கிழமையன்று பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவர் ஜே கிளேட்டன், பொது நிறுவன மேற்பார்வை வாரியம் தணிக்கை பணி ஆவணங்களை அணுகுவதில் நீண்டகாலமாக போராடி வருகிறோம். இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளிக்கிறது. ஏனெனில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து, அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை என்றும் கிளேட்டன் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்

முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்

மேலும் பல சீனா நிறுவனனகள் அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அவை சர்பேன்ஸ் ஆக்ஸ்லி சட்ட கணக்கியல் விதிகளை பின்பற்றுவதில்லை(Sarbanes-Oxley Act accounting rules). ஆக சீனாவினை பொறுத்தவரையில் இந்த தணிக்கை ஆய்வு பிரச்சனைகளில் முதலீட்டாளார்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கிளேட்டன் கூறியுள்ளார்.

அமெரிக்க முதலீட்டாளர்கள் சீன நிறுவனங்களில் முதலீடு

அமெரிக்க முதலீட்டாளர்கள் சீன நிறுவனங்களில் முதலீடு

கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கா போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சீன நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்கிடையில் முதலீட்டு நிறுவனமான மட்டி வாட்டர்ஸ் (Muddy Waters), லக்கின் காஃபி நிறுவனத்தின் அறிக்கையினை பரிசோதித்த பின்னர், தன்னிடம் உள்ள பங்கினை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மர்மம் எதுவும் இல்லை

மர்மம் எதுவும் இல்லை

இதே சீனாவோ ஹாங்காய் மற்றும் சென்சென் பங்கு சந்தைகளில் ஆயிரக்கணாகான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. லக்கின் காஃபி ஒழுங்கின்மையை கடைபிடிக்கிறதா? இங்கு யாரும் அப்படி நினைக்கவில்லையே? என்றும் கேள்வி எழுப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சீனா நிறுவனமும் மர்மாக நிறுவனமும் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

மேலும் வளர்ந்து வரும் சந்தைகளில் பல அபாயங்கள் உள்ளன. ஆக அமெரிக்கா சந்தையில் இருந்து யாரும் வெளியேறாதீர்கள். மேலும் சீன நிதி மோசடிக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பததே இவர்களின் முக்கிய செய்தியாக உள்ளது. இது தான் கிளேட்டன் கூறும் முக்கிய செய்தி என்றும் ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் சீனா நிறுவனங்கள் சத்தமேயில்லாமல் அமெரிக்காவிடம் பலத்த அடி வாங்கி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SEC Chairman criticized the lack of transparency of Chinese companies

The Us securities and Exchange Commission fired another round across the bow of China’s securities market. And it’s criticized the lack of transparency of Chinese companies listed on the NYSE. None of them follow the same auditing rules their U.S. counterparts have to follow.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X