ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளர்... பொது மன்னிப்பு அளித்த அதிபர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளருக்கு அந்நாட்டின் அதிபர் பொது மன்னிப்பு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

 

கடந்த 2021ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் நிறுவனத்தின் உரிமையாலர் லீ ஜே யங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது குற்றம் நிரூபணம் ஆனது. இதனை அடுத்து அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதனையடுத்து சில மாதங்களில் லீ ஜே யங் பரோலில் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது தென் கொரிய அதிபர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி லீ ஜே யங் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வழக்கிலிருந்து விடுவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஒரு தவறான தகவல்.. சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.76 கோடி அபராதம்..!ஒரே ஒரு தவறான தகவல்.. சாம்சங் நிறுவனத்திற்கு ரூ.76 கோடி அபராதம்..!

லீ ஜே யங்

லீ ஜே யங்

சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான லீ ஜே யங், உலகின் 278வது பணக்காரராக அறியப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து வழக்கின் தீர்ப்பு அவருக்கு பாதகமாக வெளியானது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரோல்

பரோல்

இருப்பினும் எட்டு மாதத்தில் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார் என்பதும், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் தனது சாம்சங் நிறுவனத்தின் பணிகளை கவனித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 பொது மன்னிப்பு
 

பொது மன்னிப்பு

இந்த நிலையில் தென் கொரிய அதிபர் Yoon Suk-yeol அவர்கள் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சாம்சங் உரிமையாளர் லீ ஜே யங் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வழக்கிலிருந்து விடுவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி நெருக்கடி ஆகியுள்ள நிலையில் தென் கொரிய பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் லீ ஜே யங் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக தென் கொரியாவின் சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்கொரிய அரசு விளக்கம்

தென்கொரிய அரசு விளக்கம்

லீ ஜே யங் தனது தொழில் முதலீடுகளை அதிகரித்து அந்நாட்டு மக்களுக்கு மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் என்றும் தென் கொரிய நாட்டின் பொருளாதாரத்தை சீரான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவுவார் என்று தென்கொரிய அரசு பொது மன்னிப்புக்கு விளக்கம் தெரிவித்துள்ளது. லீ ஜே யங் மட்டுமின்றி அவருடன் சேர்த்து மூன்று தொழிலதிபர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

நன்றி

இந்த நிலையில் "மன்னிப்பு வழங்கியதற்கான தென்கொரிய அரசுக்கு நாங்கள் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறோம் என்று லீ ஜே யங் தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் லீ ஜே யங் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டவுடன், முக்கிய திட்டங்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய முடிவுகளை எடுப்பார் என்றும் அந்த முடிவுகள் தென்கொரியாவின் வளர்ச்சிக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சாம்சங் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

South Korea President Yoon pardons Samsung vice-chairman Jay Y. Lee

South Korea President Yoon pardons Samsung vice-chairman Jay Y. Lee | ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளர்... பொது மன்னிப்பு அளித்த அதிபர்!
Story first published: Friday, August 12, 2022, 16:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X