கொரோனாவால் செம அடங்கி வாங்கும் ஸ்பெயின்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் யாரை விட்டு வைத்திருக்கிறது கொரோனா வைரஸ்..? சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவையே அடித்து துவைத்துக் கொண்டு இருக்கிறது.

அப்படி இருக்கும் போது, ஸ்பெயின் போன்ற குட்டி குட்டி நாடுகள் தப்பிக்க முடியுமா என்ன?

தப்பிக்கவில்லை என்பதைத் தான், ஸ்பெயின் நாட்டின் அரசு தரப்பில் இருந்து உரக்கச் சொல்லி இருக்கிறார்கள். சரி அப்படி என்ன சொல்லிவிட்டார்கள்..? வாங்க பார்ப்போம்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

ஐரோப்பிய யூனியன் நாடுகளிலேயே நான்காவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம், இந்த ஆண்டு 9.2 % சரியும் என்றும், வேலை இல்லா திண்டாட்டம் (Unemployment rate) 19 சதவிகிதத்தைத் தொடலாம் எனவும் ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் சொல்லி இருக்கிறது.

நிலைத் தன்மை விளக்கம்

நிலைத் தன்மை விளக்கம்

ஸ்பெயினின் பொருளாதார ஸ்திரத்தன்மை திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஸ்பெயின் சமர்பித்து இருக்கிறது. அதை விளக்கிய போது தான், ​​துணைப் பிரதமர் நாடியா கால்வியோ (Nadia Calvio), தங்கள் நாட்டு பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான இந்த முன்னறிவிப்புகளையும் சொன்னார்.

சரிவு
 

சரிவு

2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 25 காலாண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சி கண்டு வந்தன. ஆனால் கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் 5.2 % சரிந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புகளோடு இப்போது மேலே சொன்ன அறிவிப்புகள் வேறு ஸ்பெயின் மக்களை அச்சத்தில் ஆழ்த்தலாம்.

ஊரடங்கு

ஊரடங்கு

2021 ஆம் ஆண்டில், ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் 6.8 % வளர்ச்சியுடன் பழைய நிலைக்கு வரும் என்று ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறார் கால்வியோ. கடந்த மார்ச் 14 ம் தேதி ஸ்பெயின் நாட்டு அரசு, நம் ஊர் லாக் டவுனைப் போல அங்கும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளைப் பிரப்பித்தது. அந்த ஊரடங்கு உத்தரவுகள், இன்னும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடைமுறைகள்

நடைமுறைகள்

ஸ்பெயின் நாட்டு அரசு, தன் பொருளாதாரத்தையும், மக்களின் சமூக வாழ்கையையும் கொண்டு வர, சில சிக்கலான நடைமுறைகளைக் கொண்டு வந்து இருக்கிறதாம். இந்த கொடூரமான கொரோனா வைரஸால் ஸ்பெயின் நாட்டில் சுமார் 24,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்து இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spain predicts their Economy to Shrink by 9.2 percent

The European country Spain predicts that their Economy is going to Shrink by 9.2 percent in this year.
Story first published: Friday, May 1, 2020, 21:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X