இலங்கையின் திட்டம் பலிக்குமா.. ஐஎம்எஃப் ஒப்பந்தம் குறித்து விளக்கமளிக்க ஏற்பாடு..எதற்காக?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை அண்மை காலத்திலான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, இலங்கையின் வெளி கடன் கொடுநர்களுக்கு அறிவிக்கப்படும் என உலகளாவிய சட்ட நிறுவனமான கிளிஃபோர்ட் சான்ஸ் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான விளக்கமானது வரவிருக்கும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு? ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு?

நிதி திரட்ட திட்டம்

நிதி திரட்ட திட்டம்

கடும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை, பல்வேறு வகையிலும் நிதி திரட்டலுக்கான வழிகளை கையாண்டு வருகின்றது.

இலங்கை தனியாக சுதந்திரம் பெற்ற பிறகு அங்கு கோவிட் -19 தொற்று, பொருளாதார முறைகேடு, மோசமான பொருளாதார நெருக்கடி, கடன் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றது.

 

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி

இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல், தத்தளித்து வரும் சூழல் இருந்து வருகின்றது. குறிப்பாக அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிபொருட்கள், மருத்துவ பொருட்கள் என போதிய அளவுக்கு இறக்குமதி செய்ய முடியாமல் தத்தளித்து வருகின்றது.

போராட்ட களமான இலங்கை
 

போராட்ட களமான இலங்கை

இதற்கிடையில் பொருளாதார பிரச்சனையானது அரசியல் பிரச்சனையாகவும் மாறியது. இதனால் போராட்டம் வெடிக்கவே ஜனாதிபதியாக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். பல வன்முறை சம்பவங்கள் அந்த சமயத்தில் அரங்கேறின. மொத்தத்தில் இலங்கை பற்பல சிக்கல்களுக்கும் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். எனினும் போராட்டகாரர்கள் அவரையும் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

எனினும் அதனையும் சமாளித்து நடடின் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து அடுத்தடுத்தடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் ரணில், ஐ எம் எஃப் உடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். கடன் மறுசீரமைப்பு என பல நடவடிக்கைகளை எடுக்க முயன்று வருகின்றார். இதற்கிடையில் தான் இத்தகைய நடவடிக்கைகள் வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இது இலங்கை மீதான நம்பிக்கையை மேம்படுத்தலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

 கடன் பிரச்சனை

கடன் பிரச்சனை

சீனா, இந்தியா, அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட பல நாடுகளிடம் கடனைப் பெற்றுள்ள இலங்கை, இறையாண்மை பத்திரங்கள் மூலமாகவும் கடன் பெற்றுள்ளது. சுமார் 50 பில்லியன் டாலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதன் அன்னிய செலவாணி கையிருப்பும் மிக குறைவாகவே உள்ளது. இதற்கிடையில் மீண்டும் புதிய கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இலங்கை. இதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sri lanka இலங்கை
English summary

Sri Lanka plans to make a presentation on creditors

Sri Lanka plans to make a presentation on creditors/இலங்கையின் திட்டம் பலிக்குமா.. ஐஎம்எஃப் ஒப்பந்தம் குறித்து விளக்கமளிக்க ஏற்பாடு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X