இதையெல்லாம் எங்கப்பா நாணயமா பயன்படுத்தினாங்க..!

உப்பு, மீன் என உலகம் முழுவதிலும் வித்தியாசமான பொருட்களை நாணயமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்தி, கிளிஞ்சில்கள், உப்பு, மீன் என உலகம் முழுவதிலும் வித்தியாசமான பொருட்களை நாணயமாகப் பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.

கத்தி

கத்தி

சீனாவில் 600 முதல் 210 கிமு வரை கியி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு கத்தியை நாணயமாகப் பயன்படுத்தி வந்தனர். இது அதிகப்படியான எடை மற்றும் எடுத்துச் செல்ல உள்ள சில சிரமங்களின் காரணங்களால் ஷி ஹுவாங் பேரரசரின் காலகட்டத்தில் மாற்றப்பட்டது. அப்போது தான் வட்டமான ஓட்டை உடைய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உப்பு

உப்பு

சம்பளம் எனப்படும் வார்த்தை லத்தின் மொழியில் இருந்த சலேரியம் என்ற வார்த்தையில் இருந்து வரையறுக்கப்பட்டது. சலேரியம் என்றால் உப்பு பணம் என்று அர்த்தமாம். ரோமானிய ஆட்சிக் காலத்தில் போர் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுக்குச் சம்பளமாக உப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது. 20 வது நூற்றாண்டு வரை எத்தோப்பியாவில் உப்பு, உப்புக் கற்கள் போன்றவை நணயமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

டீ

டீ

உப்புக் கற்களை போன்று டீ படம் பொறிக்கப்பட்ட கற்கள் சீனா, திபெத், மங்கோலியா, மத்திய ஆசியா உள்ளிட்ட சில நாடுகளில் 19 வது நூற்றாண்டு வரை நாணயமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் போது சைபீரியாவிலும் இந்த முறை பின்பற்றப்பட்டது.

 

கடாங்கா கிராஸ்

கடாங்கா கிராஸ்

காங்கோ ஜனநாயக குடியரசுவில்19 வது முதல் 20 வது நூற்றாண்டு வரை கடாங்கா கிராஸ் என்பதை நாணயமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கேஸ்ட் காப்பர் இங்காட் என்பதில் உருவாக்கப்பட்ட நாணயமே கடாங்கா கிராஸ் ஆகும்.

 

கவரி கிளிஞ்சில்கள்

கவரி கிளிஞ்சில்கள்

ஷெல் எனப்படும் கிளிஞ்சில்கள் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் இந்தியாவில் ஒரிசா பொன்ற இடங்களில் நாணயமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

மீன்

மீன்

1600 களில் நியூஃபவுன்லாந்து நாட்டில் பணம் என்ற ஒன்றே இல்லை. அப்போது காய்ந்த மீன் அதாவது கருவாடு போன்றவற்றை நாணயமாகப் பயன்படுத்தி உள்ளனர்.1834 ஆம் ஆண்டு நியூஃபவுன்லாந்து சேமிப்பு வங்கி துவங்கப்பட்ட போது அச்சிடப்பட்ட நாணயம் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Strange things used as currency around the world

Strange things used as currency around the world
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X