சூயஸ் கால்வாய்: 3 நாள் போராட்டம்.. தினமும் 9.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்கு முடக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடல் வழி போக்குவரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி நாடுகளை இணைக்கும் முக்கியமான வர்த்தக வழியாக இருக்கும் சூயஸ் கால்வாய்-யில் தைவான் நாட்டின் எவர்கிரீன் நிறுவனத்திற்குச் சொந்தமான 400 அடி நீளம் கொண்ட மாபெரும் ராட்சத எவர்கிவன் கப்பல் கால்வாயின் இருபக்க தரைகளிலும் முட்டி மோதி சிக்கியுள்ளது.

இதனால் இந்தக் கால்வாய் வாயிலாக வேறு எந்தக் கப்பலும் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதால் பல நாடுகள் மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

 கிழக்கு - மேற்கு போக்குவரத்து

கிழக்கு - மேற்கு போக்குவரத்து

சூயஸ் கால்வாய் வாயிலாகத் தினமும் சராசரியாக மேற்கு பகுதி நாடுகளுக்கு 5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளும், கிழக்குப் பகுதியில் இருக்கும் நாடுகளுக்கு 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளும் அனுப்பப்பட்டு வருகிறது.

 15 நாள் கூடுதல் பயணக் காலம்

15 நாள் கூடுதல் பயணக் காலம்

தற்போது எவர் கிவன் கப்பல் கால்வாயில் இரு பக்கத்திலும் முட்டிக்கொண்டு சிக்கியுள்ள காரணத்தால் வேறு கப்பல்கள் இதன் வழியில் செல்ல முடியாமல் உள்ளது. மாற்று வழியில் கப்பல்கள் செலுத்தப்பட்டால் 15 நாள் கூடுதலாகப் பயணக் காலம் ஆகும் என்பது மட்டும் அல்லாமல் போக்குவரத்து நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான வருவாய் பாதிப்பு ஏற்படும்.

 9.6 பில்லியன் டாலர் சரக்குகள் தேக்கம்
 

9.6 பில்லியன் டாலர் சரக்குகள் தேக்கம்

இதனால் தினமும் 9.6 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் இப்பகுதியில் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாகச் சிக்கிக்கொண்டு தவிக்கும் இந்த எவர் கிவன் கப்பலை வெளியில் எடுக்கப் பல முயற்சிகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தொடர் தோல்வி அடைந்து வருகிறது மீட்பு குழு.

 ஒரு வாரம் தேவை

ஒரு வாரம் தேவை

இந்நிலையில் கடல் வழி போக்குவரத்து நிபுணர்கள் கூறுகையில் இந்தக் கப்பலை வெளியில் எடுக்கக் குறைந்தது ஒரு வாரம் காலம் தேவைப்படும் எனக் கூறுகின்றனர். இதனால் இவ்வழியில் திட்டமிட்டு இருக்கும் பிற கப்பல்கள் உலக நாடுகளில் இருந்து மாற்று வழியில் செல்ல துவங்கியுள்ளது.

 20,000 கண்டெயினர்கள்

20,000 கண்டெயினர்கள்

சுமார் 400 மீட்டர் நீளம், 2 லட்சம் டன் எடை கொண்ட இந்த மாபெரும் எவர் கிவன் சரக்குக் கப்பலில் தற்போது சுமார் 20,000 கண்டெய்னர்களில் சரக்குகள் உடன் உள்ளது. எடை அதிகமாக இருக்கும் காரணத்தால் மீட்பு பணிகள் தொடர்ந்து கடினமாகி வருகிறது.

 சூயஸ் கால்வாய் மிகவும் முக்கியமானது

சூயஸ் கால்வாய் மிகவும் முக்கியமானது

மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பிரிக்கும் முக்கியமான கால்வாய்-ஆகச் சூயஸ் கால்வாய்த் திகழ்கிறது. உலகின் மிகவும் மிகவும் பிசியான கால்வாயாகக் கருதப்படும் சூயஸ் கால்வாயில் உலகளாவிய கடல் வழி போக்குவரத்தில் 12 சதவீதம் இந்தக் கால்வாய்ப் பெறுகிறது.

 160 கப்பல்கள் முடக்கம்

160 கப்பல்கள் முடக்கம்

தற்போது நிலவரத்தின் படி சுமார் 160 கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாகச் செல்ல முடியாமல் முடங்கி நிற்கிறது. இதில் 24 கச்சா எண்ணெய் கப்பல்களும் அடக்கம். இந்தியாவிற்கு வரும் பெரும்பாலான கச்சா எண்ணெய் இந்த வழியில் தான் வருகிறது.

 5,00,000 பேரல் கச்சா எண்ணெய்

5,00,000 பேரல் கச்சா எண்ணெய்

சூயஸ் கால்வாய் வாயிலாகவே இந்தியா தினமும் அரபு நாடுகளிடம் இருந்து சுமார் 5,00,000 பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சூயஸ் கால்வாயில் ஏற்பட்டு உள்ள டிராபிக் ஜாம் பிரச்சனையால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் நிலவுகிறது.

 ஸ்தம்பிக்கும் ஆசிய நாடுகள்

ஸ்தம்பிக்கும் ஆசிய நாடுகள்

சூயஸ் கால்வாய் வாயிலாக ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 50க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் செல்லும் நிலையில் தற்போது இக்கால்வாயின் இரு பக்கத்திலும் முடங்கியிருக்கும் 160 கப்பல்களில் கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல் ஆடைகள், பர்னீச்சர்கள், உற்பத்தி பொருட்கள், கார் உதிரி பாகங்கள் எனப் பல முக்கியமான பொருட்கள் இருக்கும் காரணத்தால் ஆசிய நாடுகளில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது உற்பத்தி பொருட்களைப் பெற முடியாமல் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Suez canal blocked for 3 days: holding up $9.6bn of goods a day

Suez canal blocked for 3 days: holding up $9.6bn of goods a day
Story first published: Friday, March 26, 2021, 15:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X