கூகிள் நிறுவனத்துடன் இணைந்து டாடா கம்யூனிகேஷன்ஸ் புதிய கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கூகுள் கிளவுட் மென்பொருள் கட்டமைப்பிற்கான அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளியாக பன்னாட்டு இணையதள சேவைகளை வழங்கும் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கூகிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தின் கீழ் கூகுளின் புதிய சேவையான கூகுள் கிளவுட் இன்டர்கனெக்ட் சேவை, டாடா கம்யுனிக்கேஷனுடைய ஐ இஜட்ஒ (IZO) என்ற பொது தளத்துடன் இணைந்து கிளவுட் கம்பியுடிங் வசதியைப் அளிக்க உள்ளது.

கூகிள் நிறுவனத்துடன் இணைந்து டாடா கம்யூனிகேஷன்ஸ் புதிய கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை

"கூகுளுடன் இணைந்து வர்த்தகத்திற்குத் ஏற்ற இணைய சேவைகளுக்கேற்ற தகவமைப்பை உருவாக்கி நிறுவனங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் கணிக்கக்கூடிய வகையிலான இணையதள தொடர்பை கிளவுட் சேவை மூலம் பெற உறுதி பூண்டுள்ளோம்" என டாடா கம்யூனிகேஷன்ஸ் நெக்ஸ்ட்ஜென் வர்த்தகத் தலைமை அதிகாரி ஜூலி வூட்ஸ் மோஸ் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

கிளவுட் தளம் விவரப் பதிவு அல்லது பென்பொருள் பதிவுகளை கட்டணத்திற்கு வழங்குவதுடன் தேவைக்கேற்றவாறு கட்டணம் செலுத்தவும் வழி செய்கிறது. இதனால் ஒரு மென்பொருளை முழு விலைகொடுத்து ஒரே நேரத்தில் வாங்க வேண்டியதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகச் செலவைக் குறைக்கும் வகையில் தங்களுடைய தகவல் சேமிப்பு மற்றும் மென்பொருள் உபயோகத்தை கிளவுட் வர்த்தக தளங்கள் மூலம் பெறுகின்றன.

பெரு நிறுவனங்கள் அதிவேக தகவல் பரிமாற்றங்களுக்காகவும் விவர பாதுகாப்புக் காரனங்களுக்காகவும் பொதுவாக தங்களுடைய சொந்த தொடர்புக் கட்டமைப்புகளை தங்களுடைய செய்துகொள்கின்றன.

டாடா கம்யூனிகேஷன்ஸ் ஏற்கனவே தன் ஐஇசட்ஒ தளத்தை உருவாக்குவதற்காக அமேசான் வெப் சர்விசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் அஜ்யூர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனம் தன்னுடைய ஐ இஜட் ஒ தளத்தினை கடந்த வாரம் 34 நாடுகளில் அறிமுகம் செய்ததுடன் வரும் 2016 ஆம் ஆண்டிற்குள் அதனை 100 நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Communications Partners Google For Cloud Computing Services

Global internet solution provider Tata Communications said it has become authorised partner for Google Cloud Platform.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X