டிசிஎஸ் மீது ஆன்டி-அமெரிக்கன் முத்திரை.. அமெரிக்காவில் சிக்கித்தவிப்பு..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அதிகளவில் தங்களது வர்த்தகத்தை அமெரிக்கச் சந்தையை மையமாக வைத்தே இயங்கி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் டெக் துறையில் சிறந்து விளங்கும் பல ஆயிரம் நிறுவனங்கள் அமெரிக்காவில் தனது தலைமையகத்தை அமைத்து வர்த்தகம் செய்வது தான்.

இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் ஐடி மற்றும் டெக் துறையைச் சார்ந்துள்ள நிறுவனங்கள் ஒரு அளவிற்கு வளர்ச்சி அடைந்த பின் உலகச் சந்தைக்குத் தனது வர்த்தகத்தையும் சேவையையும் கொண்டு செல்லும் முயற்சியாக அமெரிக்காவில் வர்த்தகத்தைத் துவங்குகிறது. இத்தகைய நடைமுறை தற்போது பார்மா, உற்பத்தி சார்ந்து நிறுவனங்கள் மத்தியிலும் பரவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஊழியர்கள் ஒருவர் தொடுக்க வழக்கால் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது ஆன்டி-அமெரிக்கன் முத்திரை குத்தப்பட்டுள்ளது.

ஆன்டி டஸ்கிரிமினேஷன் வழக்கு

இந்நிலையில் டாடா குழுமத்தின் மென்பொருள் வர்த்தகப் பிரிவான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் அமெரிக்கக் கிளை மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

2015ஆம் ஆண்டுத் தொடுக்கப்பட்ட வழக்கில், தென் ஆசிய மக்களுக்குச் சாதகமாகவும் அமெரிக்க ஊழியர்களுக்குப் பாரபட்சம் காட்டியதற்காகப் பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களை மீறியதாக டிசிஎஸ் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

 

தடாலடியாக மறுப்பு..

கலிப்போர்னியா, ஓக்லேண்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணைக்கு வந்தது, இதில் டிசிஎஸ் நிறுவனக்கு வழக்கின் சில முக்கியமான கோரிக்கையை வைத்தது.

நீதிபதி கோரிக்கை அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்தார்.

 

பின்டைவு

டிசிஎஸ் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு முழுமையாக மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், நீதிபதி இந்த வழக்கை டிசிஎஸ் நிறுவனத்தின் ஆமெரிக்க அலுவலகத்தில் இருக்கும் அமெரிக்க ஊழியர்களை நேரடி பணியில் (கிளையிட் கீழ் நேரடி பணியில் இல்லாதோர்) அமர்த்தாத பிரச்சனைக்கும் இந்த வழக்கில் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

இது டிசிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும் இதுகுறித்து எவ்விதமான கருத்தும் தெரிவிக்க டிசிஎஸ் மறப்பு தெரிவித்துள்ளது.

 

ஆன்டி அமெரிக்கன்

டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 20 வருட அனுபவம் கொண்ட ஒரு அமெரிக்க ஊழியர் வெறும் 20 மாதம் பணியில் அமர்த்திவிட்டு இவரைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இதே பணியிடத்தில் குறைந்த அனுபவம் உள்ள 2 நபர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது இது முற்றியலும் anti-American sentiment என்று கூறி டிசிஎஸ் நிறுவனத்தின் மீது 2015ம் ஆண்டு வழக்குத் தொடுத்தார்.

 

400 ஊழியர்கள்

அதேபோல் தென் கலிப்போர்னியா எடிசன் நிறுவனத்தில் 28 வருடம் பணியாற்றிய பிரையன் புச்னென் கூறுகையில், தனது நிறுவனம் ஐடி சேவைக்காக மிகப்பெரிய திட்டத்தை டிசிஎஸ் நிறுவனத்திற்கு அவுட்சோர்சிங் செய்தது.

இந்நிலையில் எடிசன் நிறுவனம் சுமார் 400 ஊழியர்களுடன் என்னையும் அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. ஆனால் அவரை டிசிஎஸ் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சில காலம் பணியில் இருக்குமாறும் எச்டிசன் நிறுவனம் கேட்டுக்கொண்டது எனத் தனது வழக்கின் விசாரணையில் கூறியுள்ளார்.

 

4 வழக்கு

டிசிஎஸ் நிறுவனம் ஒருபுறம் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டு இருக்க, மறுபுறம் இன்போசிஸ் நிறுவனத்தின் மீது 4 ஊழியர்கள் இதேபோன்ற வழக்கு 4 வருடங்களுக்கு முன்பு தொடுக்கப்பட்டது.

வருமானம், லாபம்..

இப்படி அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் முன்னணி இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தைப் பெறும் நோக்கத்தோடு துவக்கத்தில் ஊழியர்களைத் தாய்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குக் கொண்டு வந்து பணியில் அமர்த்தியது. இதன் மூலம் வேலையும் சிறப்பாகச் செய்ய ஊழியர்கள் கிடைத்தது மட்டும் அல்லாமல் அமெரிக்கக் கனவில் இருக்கும் இந்தியர்களுக்கும் குறைவான சம்பளத்தைப் பெற தயாராகினர்.

அவுட்சோர்சிங்

இத்தகைய முறை இந்திய நிறுவனங்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கியது. சொந்த அலுவலகத்தில் இருக்கும் பிராஜெக்ட்களில் இந்திய ஊழியர்களை அமர்த்துவதையும் தாண்டி அவுட்சோர்சிங் செய்யும் நிறுவனத்திலும் இந்தியர்களைப் பணியில் அமர்த்தியது இந்திய நிறுவனங்கள்.

எல்லையைத் தாண்டியது

ஒருகட்டத்தில் அவுட்சோர்சிங் செய்யும் நிறுவனத்தில் இருக்கும் அமெரிக்க ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கி விட்டு லாபத்திற்காகவும், கூடுதல் வருமானத்திற்காகவும் இந்திய ஊழியர்களைப் பணியில் அமர்த்தி இந்திய நிறுவனங்கள் எல்லையைத் தாண்டியது.

அமெரிக்க ஊழியர்களுக்கு

இதன் மூலம் பல அமெரிக்க ஊழியர்கள் இந்திய ஐடி நிறுவனங்கள் மீது, அமெரிக்கர்களுக்கு எதிராக நிறுவனங்கள் நடந்துகொள்கிறது, வாய்ப்புகள் மறுக்கிறது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சில இடங்களில் இந்திய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது.

இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது டிசிஎஸ்.

 

டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவில் வெளிநாட்வர்களிடம் இருக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்குக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தேர்தலில் வெற்றிக்குப் பின், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார் டிரம்ப்.

 

கையெழுத்து

இந்நிலையில் 2017 ஏப்ரல் மாதம் நிறுவனங்கள் பயன்படுத்தும் வொர்க் விசா திட்டத்தை மறு ஆய்வு செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவின் மூலம் அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் ஆடிப்போனது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ்

டிரம்ப் கையெழுத்திட்ட பின்பு உலகளவில் 2,00,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழக்கும் இன்போசிஸ், அமெரிக்காவில் மட்டும் அடுத்த 2 வருடத்தில் 10,000 அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்துவதாக அறிவித்தது.

அடிப்படை நிலைப்பாடு

இந்திய நிறுவனங்களுக்குத் தற்போது புதிய திட்டங்கள் அதிகளவில் கிடைக்காத நிலையில் 10,000 அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்துவது என்றால் தற்போது அங்கு இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களைத் திரும்ப அனுப்புவதே அடிப்படையில் இருக்கும் நிலைப்பாடு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS faces setback anti American case in USA

TCS faces setback anti American case in USA
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns