உலகின் மதிப்புமிக்க வாகன நிறுவனம்.. $1 டிரில்லியனை தாண்டிய சந்தை மதிப்பு.. டெஸ்லா வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக அளவில் மின்சார கார்களுக்கு பேர் போனது டெஸ்லா தான். இது அமெரிக்காவினை சேர்ந்த ஒரு மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது கடந்த திங்கட்கிழமையன்று 1 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. ஏன்? என்ன காரணம்?

அமெரிக்காவின் மிகப்பெரிய வாடகை கார் நிறுவனமான ஹெர்ட்ஸ், நிறுவனம், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு 1 லட்சம் வாகனங்களுக்கான மிகப்பெரிய ஆர்டரை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலையானது பலமான ஏற்றத்தினை கண்டது.

1,00,000 டெஸ்லா கார்களை ஆர்டர் செய்த அமெரிக்க நிறுவனம்.. ஆடிப்போன எலான் மஸ்க்..! 1,00,000 டெஸ்லா கார்களை ஆர்டர் செய்த அமெரிக்க நிறுவனம்.. ஆடிப்போன எலான் மஸ்க்..!

உலகின் மதிப்புமிக்க நிறுவனம்

உலகின் மதிப்புமிக்க நிறுவனம்

கடந்த அமர்வில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலையானது 14.9% அதிகரித்து, 1,045.02 டாலர்களாக அதிகரித்தது. இதற்கிடையில் தான் டெஸ்லாவின் சந்தை மதிப்பானது 1 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. இந்த நிலையில் உலகின் அதிக மதிப்புமிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லா உருவெடுத்துள்ளது.

வாகன நிறுவனங்கள் ஆச்சரியம்

வாகன நிறுவனங்கள் ஆச்சரியம்

சர்வதேச நாடுகளில் சிப் பற்றாக்குறை, மற்ற மூலதன பொருட்கள் பற்றாக்குறைக்கு மத்தியில், வாகன உற்பத்தியானது பாதிக்கப்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் தற்போது தான் தேவையானது மீண்டு வரத் தொடங்கியிருந்தாலும், விற்பனையானது மந்த நிலையில் உள்ளதாகவே மற்ற நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்த நிலையில் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு இப்படி மிகப்பெரிய ஆர்டர் கிடைத்திருப்பது, ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

டிரில்லியன் டாலர் கிளப்

டிரில்லியன் டாலர் கிளப்

டெஸ்லாவின் சந்தை மதிப்பு அதிகரிப்பு குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆப்பிள் இன்க், அமேசான், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஆல்பாஃபெட் நிறுவனங்கள் உள்ள டிரில்லியன் டாலர் மதிப்புடைய எலைட் கிளப்பில் சேர்ந்த முதல் கார் நிறுவனம் டெஸ்லா என்று தெரிவித்துள்ளார்.

ஆதிக்கம் செலுத்தும்

ஆதிக்கம் செலுத்தும்

ஹெர்ட்ஸ் நிறுவனத்தின் இந்த ஆர்டர் மின்சார வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தாது என்றாலும், எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. மின்சார வாகனம் மீதான ஆர்வம் அதிகப்பரிப்பதை நாங்கள் பார்க்கத் தொடங்கியுள்ளோம் என ஹெர்ட்ஸின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஃபீல்ட்ஸ் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எலானின் இலக்கு

எலானின் இலக்கு

மின்சார வாகனங்களுக்கான் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், எலான் மஸ்க் ஆண்டுக்கு சராசரியாக 50% விற்பனையை இலக்காக வைத்துள்ளார். இது வருடத்திற்கு 20 மில்லியன் வாகனங்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலானின் இந்த இலக்கானது, தற்போதைய முன்னணி விற்பனையாளர்களான வோக்ஸ்வேகன் ஏஜி மற்றும் டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் தற்போதைய விற்பனையை விட இருமடங்கு ஆகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tesla டெஸ்லா
English summary

Tesla M-cap reaches $1 trillion following bulk order from Hertz

Tesla, hertz latest updates.. Tesla M-cap reaches $1 trillion following bulk order from Hertz
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X