சென்னைக்கு என தனி நாணயம் இருந்தால் எப்படி இருக்கும்?

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஒரு நாடு பணவீக்கத்தில் சிக்கி தவிக்கும் போது அந்த நாட்டின் நிதி நகரத்திற்காகத் தனி நாணயம் அறிமுகம் செய்வது வழக்கம். வெனிசுலாவிலுள்ள எலோரோஸா, சமீபத்தில் பணவீக்கத்தையும் பண நெருக்கடியையும் சமாளிக்கத் தங்கள் சொந்த உள்ளூர் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. பிற நகரங்களிலும் கூட அவர்கள் உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதனை இப்போது பார்க்கலாம்.

பிரிஸ்டோல் , யுனைடெட் கிங்டம்

2012ம் ஆண்டு, ப்ரிஸ்டால் நகரில் உள்ள உள்ளூர், சுயாதீன வணிகங்களில் மக்கள் தமது பணத்தைச் செலவழிக்க ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அந்த நகரத்தில் பிரிஸ்டல் பவுண்டு நாணயத்தை அறிமுகம் செய்தனர். இந்த நாணயத்தை நகருக்குள் எந்த ஒரு மோசடியற்ற முறையிலும் பயன்படுத்த முடியும். பிரிஸ்டல் பவுண்ட் கணக்கு வைத்திருப்பவர்கள் பவுண்டுகளை 1: 1 விகிதத்தில் பவுண்டுகள் ஸ்டெர்லிங்கிற்கு மாற்றலாம்.

கால்கரி, கனடா

கால்கரி டாலர்கள் கால்கரி உள்ளூர் சமூகத்தின் வளர்ச்சி என்ற ஒரே நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட பிளாஸ்டிக் நோட்டுகள் ஆகும். இது 1995 இல் தொடங்கப்பட்டது, இது சட்ட ஒப்பந்தம் அல்ல என்றாலும், கனடா நகரத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் கடைகள் போன்ற பல வியாபாரங்கள் இந்த நாணயத்தை ஏற்றுக்கொள்கின்றன.

எஸ்பின்னல், மெக்ஸிக்கோ

மெக்ஸிகோவில் உள்ள வெராக்ரூஸ் இன்டெர் கல்சுரல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளூர் பொருளாதாரத்தை வலுவாக உருவாக்கும் நோக்கத்துடன் 2010 இல் டுமின் என்ற மாற்று நாணயத்தைத் தொடங்கினர். அந்த நோட்டுகளில் எமிலினோ சபடா மற்றும் டீகோ ரிவேராவின் ஓவியங்கள் உள்ளன. எஸ்பினாலில் டுமின் மிகவும் பிரபலமாக உள்ளது என்றாலும், டூமின் தயாரிப்பாளர்கள் மெக்சிகோ நாட்டின் தேசிய வங்கியால் பெஸோவை மாற்றியதாக வழக்குத் தொடுத்தனர். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

வோலோஸ், கிரீஸ்

2010 இல் கிரீஸ் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டபோது, துறைமுக நகரமான வோலோஸ் டெம் எனப்படும் ஒரு பண்டமாற்று அடிப்படையிலான அமைப்பைப் பயன்படுத்தத் தொடங்கியது. கிரேக்க நகரத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயம் முற்றிலும் ஆன்லைனில் உள்ளது மற்றும் அங்குள்ள மக்கள் ஒரு நேரத்தில் 1,200 டெம்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படவில்லை. மதிப்பு அடிப்படையில், ஒரு டெம் ஒரு யூரோக்குச் சமம்.

டெட்ராயிட், அமெரிக்கா

2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட டெட்ராய்ட் சியர்ஸ் அமெரிக்க நகரில் உள்ள ஒரு உள்ளூர் நாணயமாகும். இந்த நோட்டு ஒரே ஒரு பிரிவில் மட்டுமே உள்ளது. அது - $ 3 ஆகும் மற்றும் மதிப்பு $ 4,500 ஆகும். இந்த நாணயத்தை அமெரிக்க டாலரின் சம மதிப்புக்குப் பரிமாறிக்கொள்ளலாம். பல உள்ளூர் வணிகர்கள் டெட்ராயிட் சியர்ஸை ஆதரிக்கின்றனர், இது 1930 ம் ஆண்டுப் பெரும் பொருளாதார மந்தநிலையில் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மாதிரி அடிப்படையில் அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These Cities Introduced Their Local Currency To The World

These Cities Introduced Their Local Currency To The World
Story first published: Wednesday, April 4, 2018, 20:41 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns