இந்த 10 பேருக்கு மட்டும் 11,000 கோடி ரூவா சம்பளமா (Salary)..? அப்ப மத்தவங்களுக்கு 910 தானா..?

By G P Subramanian
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய நோயாளிகள், ஆஞ்சியோ செய்து கொண்டு ஓய்வில் இருப்பவர்கள், ரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்கள், கர்பிணிப் பெண்கள், நீண்ட நாட்களாக ஆண்டுக்கு 910 ரூபாய் இன்க்ரிமெண்டிலேயே காலம் தள்ளும் சம்பள ஏழைகள் இந்த கட்டுரையைப் படிக்க வேண்டும்.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தனியார் நிறுவன அதிகாரிகள் யார் யார்ன்னு இப்ப பார்க்க போறாம். அவங்க சம்பளத்தை கேட்டு உங்களுக்கு ரத்தத் கொதிப்பு கூடலாம், வயிற்றில் எரிச்சல் உண்டாகலாம், காதில் புகை வரலாம். அப்படி வந்தால் கம்பெனி பொறுப்பாகாது. பாத்துக்குங்க.

பொதுவாக கூகுள், அமேசான், பேஸ்புக், லிங்க் இன், மைக்ரோசாஃப்ட் போன்ற பிரபல நிறுவனங்கள் தான் தங்களது அதிகாரிகளுக்கு பணத்தை தண்ணியாக வாரி இறைக்கும் என நினைப்போம். நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் டென்ஷனை விடுங்க பாஸ்.. 220 வயசு பீர்.. கேள்விப்பட்டிருக்கீங்களா.. பெல்ஜியத்தில் இருக்காம்! தேர்தல் டென்ஷனை விடுங்க பாஸ்.. 220 வயசு பீர்.. கேள்விப்பட்டிருக்கீங்களா.. பெல்ஜியத்தில் இருக்காம்!

 இவர்கள் உண்டு

இவர்கள் உண்டு

ஆனால் வெளி உலகுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாத நிறுவனங்களில் கூட, பெரிய பொறுப்புகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அவர்களின் நிறுவனங்கள் மேலே சொன்ன பிரபல நிறுவனங்களை விட, அதிகமாக கடந்த 2018-ல் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் டாப் 10 அதிகாரிகளைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். முதலில் ஹைப்பர் ஆக்டிவ் கிட் எலான் மஸ்கிடம் இருந்து தொடங்குவோம்.

 Elon Musk

Elon Musk

தட்டை வடிவ பூமியிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி யார்ன்னு கேட்டா...! எலான் மஸ்க்-ன்னு சின்னக் குழந்தையும் சொல்லும்...! அந்த மனுஷன் தான் உலகின் மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் என மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டு வருகிறார்.

 வியப்பு தான்

வியப்பு தான்

எலான் மஸ்க் சென்ற ஆண்டு தனது சம்பளமாக 51.32 கோடி டாலரை தன் பழைய டிரங்கு பெட்டியில் போட்டு, வீட்டுக்கு எடுத்து சென்றார். நிலவுக்கு மனிதர்களை அழைத்து செல்ல போகிறேன் என்று கூறி மக்கள் தன்னை வியக்கும்படி செய்தவர், சம்பள விஷயத்திலும் நம்மை வியக்க வைக்கிறார்.

 நோட் திஸ் பாயிண்ட்

நோட் திஸ் பாயிண்ட்

யுவர் ஆனர்... இவரின் டெஸ்லா நிறுவனம் கடந்த மார்ச் 2019 காலாண்டு முடிவில் மட்டும் சுமார் 70 கோடி டாலர் நஷ்டம் சந்தித்தது. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அதேசமயம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதை பற்றியும் கவலைபடாமல் அந்த இடத்திலேயே கஞ்சா புகைத்து புகையை பறக்க விட்டு தன்னை ஏசும்படியும் செய்வார்.

 Brendan Kennedy

Brendan Kennedy

2018ல் Tilray நிறுவனம் தனது தலைமை செயல் அதிகாரி Brendan Kennedy-க்கு சம்பளமாக 25.60 கோடி டாலரை கொட்டி கொடுத்தது. என்னடா பணத்தை இப்படி அவருக்கு அள்ளி கொடுக்குதே, அப்படி என்ன தொழிலை அந்த நிறுவனம் செய்யுதுன்னு கூகுளாண்டவர் கிட்ட கேட்டோம்.

 கஞ்சா வித்த காசு

கஞ்சா வித்த காசு

"உங்க ஊர்ல (இந்தியாவுல) ஐ.டி.சி. சிகரெட் விக்கிற மாதிரி Tilray நிறுவனம் அமெரிக்காவுல கஞ்சா உற்பத்தி செஞ்சி விக்கிறான்" என கூலாகச் சொல்கிறார். அதனாலத் தான் அதிகாரிக்கு அந்த நிறுவனம் சம்பளத்தை சரமாரியாகக் கொடுத்திருக்கிறது. இப்போது ஒரு கேள்வி... அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் கஞ்சா உற்பத்தி நிறுவனம் எது..? Tilray தானாம்.

 Bob Iger

Bob Iger

வால்ட் டிஸ்னி என்றால் மிக்கி மவுஸ் என்பதால் நம் அப்பா காலம். இப்ப வால்ட் டிஸ்னி என்றால் அவெஞ்சர்ஸ் தான். அப்படியா-ன்னு மேஜர் சுந்தர் ராஜன் லெவலுக்கு ஆச்சர்யப்படாதீங்க. மார்வெல்லை டிஸ்னி விலை பேசி வருஷங்கள் சில ஆயிருச்சு. தானோஸ் வழியாக சினிமாவை தனதாக்கிக் கொண்ட வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் CEO தான் நம் Bob Iger. இவருக்கு சம்பளமாக கடந்த ஆண்டு 14.66 கோடி டாலரை கொடுத்திருக்கிறார்கள்.

 அப்பரைசல்

அப்பரைசல்

உலகமே அவெஞ்சர்ஸ் எண்ட் கேமுக்காக காத்துக் கொண்டிருந்த போது, டிஸ்னி நிறுவனத்தின் இயக்குநர்களில் பலரும், டிஸ்னி நிறுவனத்தின் CEO பாப் இகருக்கு அதிக சம்பளம் வழங்குவதாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்கள். கடந்த 2017-ல் இதே பாக் இகருக்கு சுமார் 60 கோடி டாலர் வரை சம்பளம் கொடுத்தது டிஸ்னி. இந்த போராட்டக் குரலுக்குப் பின் தான் இப்போது 2018-ல் 14.66 கோடி டாலரைக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் CEO-ஆக இருந்து கொண்டு, அதே நிறுவனத்தின் Appraisal-களில் தோற்ற முதல் CEO நம் பாப் இகராகத் தான் இருப்பார் போல.

 Tim Cook

Tim Cook

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தனது தலைமை செயல் அதிகாரி டிம் குக்-க்கு சம்பளத்தை மற்ற நிறுவனங்களை போல் அளந்து போடாமல் அள்ளித்தான் போடுகிறது கடந்த ஆண்டு டிம் கும் சம்பளமாக 14.16 கோடி டாலர் வாங்கினார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்கு பிறகு ஆப்பிள் நிறுவன பொறுப்புகளை தனது தோளில் சுமந்து வருகிறார் டிம் குக்.

 படுத்தே விட்டது

படுத்தே விட்டது

ஆனால் வியாபாரம் படுத்துக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த 2018-ல் ஒரே வருடத்தில் உலகில் 150.06 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இதில் சாம்சங் முதலிடத்தில் இருக்கிறது 29.18 கோடி ஸ்மார்ட்போன்களை உலகம் முழுக்க விற்று இருக்கிறார்கள். ஆப்பிள் 2018-ல் 20.63 கோடி ஸ்மார்ட்போன்களையும், ஹூவாய் நிறுவனம் 20.52 கோடி ஸ்மார்ட் போன்களையும் விற்று இருக்கிறார்கள். எப்போதும் தன் ஐபோன் விற்பனையை கம்பீரமாக வெளியில் சொல்லும் ஆப்பிள் கடந்த சில காலாண்டுகளாகச் சொல்லவில்லை என்பதையும் ஆப்பிள் ரசிகர்கள் மற்றும் வெறியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒட்டு மொத்தத்தில் ஆப்பிள் பழைய படி இல்லை. அது போக Tim cook is a Gay you know..?

 Nikesh Arora

Nikesh Arora

அதிக சம்பளம் பெறும் டாப் 10 தலைமை அதிகாரிகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறுதல் பரிசு வாங்கிக் கொடுத்தவர் நிகேஷ் அரோரா. அமெரிக்காவின் இணைய பாதுகாப்பு நிறுவனமான Palo Alto-க்கு ராவும், பகலும் உழைப்பதைப் பார்த்து நிகேஷ் அரோரா கடந்த 2018-ல் சம்பளமாக 13 கோடி டாலருக்கு செக் எழுதினார்களாம்.

 அமிஷ் ஷா

அமிஷ் ஷா

அரோரா இதற்கு முன் கூகுள் நிறுவனத்தில் முக்கிய செயல் அதிகாரியாக இருந்தார். அதன் பின் பாஜகவின் மோடிக்குப் பின் அமித் ஷா போல ஸ்டார்ட் அப் முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்கில் அதன் நிறுவனர் மசாயோஷிக்கு அடுத்த இடத்தில் இருந்தார் நிகேஷ் அரோரா. அந்த காலத்தில்தான் இந்திய நிறுவனங்களான ஸ்னாப்டீல், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களில் சாப்ட்பேங்க் கொஞ்சம் தாராளமாக முதலீடு செய்தது.

 David Zaslav

David Zaslav

நம் வாட்ஸப் டிபிக்கு ஃபோட்டோ தேடிக் கொண்டிருக்கும் போது "இப்ப நான் அடர்ந்த காட்டுக்கு மத்தில இருக்கேன். இந்த நேரத்தில் பயங்கரமான விலங்குகள் வர வாய்ப்பு இருக்கு. அதனால மொதல்ல நான் என்ன பாதுகாத்துக்கனும்" என ஒரு டயலாக் வந்தால், அது டிஸ்கவரி என டிபியை மாற்றிக் கொண்டே சொல்லலாம். மிகப்பெரிய அமெரிக்க ஊடக நிறுவனமான டிஸ்கவரியில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் David Zaslav. காட்டில் அனாதையாகத் திரியும் விலங்குகளை படம் பிடிக்கவே கோடிக் கணக்கில் செலவு செய்யும் டிஸ்கவரி சேனல், 2018-ல் David Zaslav-க்கு சம்பளமாக 12.2 கோடி டாலரை ஒரு டாடா ஏஸ் பிடித்து வீட்டுக்கே அனுப்பி வைத்திருக்கிறார்களாம்.

 James Heppelman

James Heppelman

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான PTC தனது தலைமை செயல் அதிகாரி James Heppelman-க்கு 7.14 கோடி டாலரை சம்பளமாக கடந்த ஆண்டு கொடுத்தது. அப்படி அள்ளிக் கொடுக்க இந்த கம்பெனியில் என்ன இருக்கிறது..? Augmented Reality, Industrial Internet of Things (IIoT) Software, CAD Software என பல்வேறு தொழிற்சாலை சாஃப்ட்வேர்களை இந்த நிறுவனம் தயாரித்து சேவையாக வழங்கி வருகிறது.

 Stephen Schwarzman

Stephen Schwarzman

தனியார் முதலீடு, சொத்து நிர்வாகம் மற்றும் நிதிசேவையில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான Blackstone Group-ன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தான் Stephen Schwarzman. Blackstone Group 2018ல் தலைமை செயல் அதிகாரி Stephen Schwarzman-க்கு சம்பளமாக 6.91 கோடி டாலரை கொடுத்தது. நாம் கடுமையாக உழைப்பது போல், நம்மைப் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள நாம் சிரிப்பதும் முக்கியம் என "வசூல் ராஜாவின் Laughter Therapy என்கிற சிரிப்பு வைத்தியம்"த்தை பலமாக பரிந்துரைத்திருக்கிறார். நம் Stephen Schwarzman.

 Tony James

Tony James

Stephen Schwarzman தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் Blackstone Group நிறுவனத்தில் தான் Tony James செயல் துணை தலைவராக இருக்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு 6.62 கோடி டாலரை சம்பளமாக சலித்தெடுத்திருக்கிறார். இவரின் இந்த வருட டார்கெட் இவரை விட அதிக சம்பளம் வாங்கும் Stephen Schwarzman தானாம்.

 Steve Angel

Steve Angel

கடந்த ஆண்டு அதிக கல்லா கட்டிய தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இங்கிலாந்து அதிகாரி Steve Angel. இங்கிலாந்தை சேர்ந்த Linde PLC-ல் தான் உலகில் தொழிற்சாலைகளுக்கு தேவையான ரசாயன கேஸ்களைத் தயாரிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார்கள். Steve Angel தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு 6.61 கோடி டாலரை சம்பளமாக பெற்று இருந்தார். கடந்த சில வருடங்களாக இந்த நிறுவனத்தின் நிகர லாபம் நிதி நிலை அத்தனை வளர்ச்சி காணவில்லை. அதனாலோ என்னவோ நம் Steve Angel-ன் சம்பளமும் கடந்த சில ஆண்டுகளாக உயரவில்லை போல.

 எதுக்கு வம்பு

எதுக்கு வம்பு

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இவர்களின் சம்பளம் மட்டும் சுமார் 11,000 கோடி ரூபாய் போய்விடும். கம்பெனி லாபத்தில் இந்த பெரிய தொகை போக, மற்ற உயர் அதிகாரிகள்... சிந்திய மிச்சம் மீதி தான் நம்மைப் போன்ற சம்பள ஏழைகளுக்கு, ஆண்டுக்கு 910 ரூபாய் இன்க்ரிமெண்ட் வருகிறது. எதிர்த்துக் கேட்டால் வேலை போய்விடும், எதற்கு வம்பு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

these ten peoples salary is rupees 11,000 crore per annum

these ten peoples salary is rupees 11,000 crore per annum
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X