உலகில் சிறந்த 10 என்ஜிஓ நிறுவனங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

உலகச் சுகாதார அமைப்பு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சமூக மதிப்புகள், புவியியல் கல்வி, குழந்தைகள் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் திறம்படச் செயல்படும் ஆயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்கள் (NGO) உள்ளன. இவர்கள் பூமியை வாழ ஒரு சிறந்த இடமாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.

உலகிலுள்ள இந்த உயர்மட்ட அரசு சாரா நிறுவனங்கள் பொதுவாகக் குழு, நிறுவனம் அல்லது சில நேரங்களில் ஒரே நபரிடமிருந்து நன்கொடைகளால் நிதியளிக்கப்படுகின்றன.

இவர்கள் பல்வேறு வளரும் நாடுகளில் தங்கள் சேவைகளை இலவசமாக வழங்குவதோடு, பல்வேறு நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர். ஆகவே இங்கு உலகின் சிறந்த 10 என்ஜிஓ நிறுவனங்களின் பட்டியல் உள்ளது.

10. கிளின்டன் உடல்நலம் அணுகல் முயற்சிகள்

கிளின்டன் உடல்நலம் அணுகல் முயற்சி (CHAI) அமைப்பானது உலகில் மிகவும் பிரபலமான அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு ஏராளமான சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகளை வழங்குகிறது.

இந்த அமைப்பு 33 வளரும் நாடுகளில் வேலை செய்கிறது. மேலும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் சிஎச்ஏஐ அணுகி பேச்சுவார்த்தை மூலம் விலை குறைப்புக்கள், மருந்துகள், மருத்துவச் சாதனங்கள், தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்களைப் பெற முடியும். இந்த அமைப்பு தி குளோபல் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

9. சர்வதேச மீட்புக் குழு

சர்வதேச மீட்புக் குழு என்பது 1933 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோரிக்கையால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச மனிதாபிமான அரசு சாரா அமைப்பாகும். இந்த அமைப்பு அகதிகள் மற்றும் போர் அல்லது இயற்கை பேரழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் நீண்டகால உதவி வழங்குவதாக அறியப்படுகிறது.

தற்போது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வேலை செய்து உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவுகிறது. இந்த அமைப்பு உலகில் முதல் 10 சிறந்த அரசு சாரா நிறுவனங்கள் என்ற எங்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

 

8. மெர்சி கார்ப்ஸ்

1979 ஆம் ஆண்டில் மெர்சி கார்ப்ஸ் நிறுவப்பட்டது முதல், உலகெங்கிலும் உயிர்காக்கும் உதவியில் $3.7 பில்லியனுக்கும் அதிகமாக வழங்கியுள்ளது. இந்த அரசு சாரா நிறுவனத்தின் நோக்கம் என்பது மக்கள் தங்கள் சமூகத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான வளங்களை இணைப்பதன் மூலம் துன்பம், வறுமை மற்றும் அடக்குமுறையைத் தடுத்தல் ஆகும்.

இன்று சிரியா நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 2.5 மில்லியன் மக்களுக்கு உதவுவதில் எட்டு நாடுகளில் அவர்களின் உறுப்பினர்கள் உள்ளனர்.

 

7. மக்களுக்கு நீர்

மக்களுக்கு நீர் (Water for people) என்பது அமெரிக்க அடிப்படையிலான அரசு சாரா அமைப்பு ஆகும். இது 1991 ஆம் ஆண்டில் அமெரிக்கன் நீர் வழங்கல் சங்கம் மூலம் நிறுவப்பட்டது. மக்களுக்கு நீர் அமைப்பானது வளரும் நாடுகளில் உயர்தரக் குடிநீர் மேம்பாட்டுக்காகவும் மற்றும் துப்புரவு சேவைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வித் திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் வேலை செய்கிறது.

இந்த அமைப்பின் நோக்கம் என்னவென்றால், உலகில் யாரும் நீராலோ அல்லது துப்புரவு சேவைக்குறைப்பாட்டாலோ இறக்கக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நீர் அமைப்பு ஏற்கனவே 9 நாடுகளில் 4 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான நீர் மற்றும் துப்புரவு வசதிகளை வழங்கியுள்ளது.

 

6. மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ்

மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பு 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சர்வதேச மனிதாபிமான அரச சார்பற்ற நிறுவனமாகும். இது ஒரு சிறு பிரெஞ்சு மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அதன் தலைமையகம் உள்ளது. இது எம்எஸ்எப் (MSF) என உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக அறியப்படும் ஒரு மருத்துவ மனிதாபிமான அமைப்பாகும்.

இது கனடாவிலும் அமெரிக்காவிலும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இது 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவ உதவி வழங்குகிறது. இதில் 30,000 க்கும் அதிகமான செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து வல்லுநர்கள், சுகாதாரம் மற்றும் நீர்வழி பொறியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். இது உலகின் சிறந்த 10 அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும்.

 

5. கேர் இன்டர்நேஷனல்

கேர் (CARE) என்பது ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமாகும். இது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், உலகளாவிய வறுமையை ஒடுக்குவதற்கும் மற்றும் பெண்கள் மீது கவனம் செலுத்தும் அமைப்பாகும். கேர் இன்டர்நேஷனல் 1945 இல் நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான மனிதாபிமான உதவி நிறுவனங்களில் ஒன்றாகும். 94 க்கும் மேற்பட்ட நாடுகளில் கேர் வேலை செய்கிறது.

950 க்கும் மேற்பட்ட வறுமை-எதிர்ப்புத் திட்டங்கள் மற்றும் மனிதாபிமான உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் 80 மில்லியன் மக்களுக்கு நேரடியாகவும், 256 மில்லியன் மக்கள் மறைமுகமாகவும் பயன் அடைந்துள்ளனர். கேர் அமைப்புப் பாதுகாப்பு அவசரநிலை, நீர் மற்றும் சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

 

4. ப்ராக்

முன்னர்ப் பங்களாதேஷ் புனர்வாழ்வளிப்பு உதவிக் குழுவாக அறியப்பட்ட ப்ராக் (BRAC), 100,000 க்கும் அதிகமான ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்பு ஆகும். ப்ராக் ஆனது 1972 ஆம் ஆண்டில் உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கான ஒரு நோக்கத்துடன் நிறுவப்பட்டது.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் 14 க்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ராக் (BRAC) இடம்பெற்றுள்ளது. ப்ராக் (BRAC) சமூக நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளின் சொந்த வலைத்தளத்தின் மூலம் கிட்டத்தட்ட முற்றிலும் தன்னிறைவுடையது. இந்த அமைப்பானது, அரசு சாரா நிறுவனத்தின் தற்போதைய தலைவரான சர் பஸ்ஸெல் ஹசன் அபேட் அவர்களால் நிறுவப்பட்டது. இது உலகின் சிறந்த அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும்.

 

3. அகுமன்

உலகெங்கிலும் உள்ள வறுமை, உடல்நலம் மற்றும் பசி போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொழில் முனைவோர் அணுகுமுறையைப் பயன்படுத்தும் நோக்கத்துடன், 2001 ஆம் ஆண்டில் ஜாகுலின் நோவோக்ராட்ஸினால் அகுமன் நிதி நிறுவப்பட்டது. ஏழை மக்களுக்கு ஏற்ற நலன்கள் மற்றும் சேவைகளை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு இது உதவுகிறது. அகுமன் ஆப்பிரிக்கா, பாக்கிஸ்தான், லத்தீன் அமெரிக்கா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 110 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.

இந்த நிறுவனங்களின் முதலீடுகள் 100 மில்லியன் மக்களுக்கு நன்மை செய்கிறது. அகுமன் தனது தலைமை அலுவலகத்தை நியூயார்க் நகரத்தில் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில், கொலம்பியா, சான் பிரான்சிஸ்கோ, பாக்கிஸ்தான், கென்யா மற்றும் கானா ஆகிய நாடுகளில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளது. 2015 ஆம் ஆண்டில், உலகின் முதல் 10 மிகச் சிறந்த இலாப நோக்கமற்ற நிறுவனங்களில் ஒன்றாக அகுமன் பெயரிடப்பட்டது.

 

2. க்யூர் வயலன்ஸ்

க்யூர் வயலன்ஸ், முன்னர்ச் சீஸ்பயர் (Ceasefire) என அழைக்கப்படும் சிகாகோவை சேர்ந்த அமைப்பாகும். இது சமுதாயத்தில் வன்முறைகளைக் குறைப்பதற்காகவும், அதிக ஆபத்துள்ள நபர்களைக் கண்டறிந்து சமூக நெறிமுறையை மாற்றுவதற்கும் உலகம் முழுவதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பு 2000 ஆம் ஆண்டில் டாக்டர்.

கார்ரி ஸ்லட்கின் என்பவரால் சிகாகோ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் நிறுவப்பட்டது. மேலும் நிறுவப்பட்ட முதல் ஆண்டிலேயே 67 சதவிகிதம் துப்பாக்கி சூடுகளைக் குறைத்துள்ளது. க்யூர் வயலன்ஸ் உலகின் சிறந்த அரசு சாரா நிறுவனமாகப் பாராட்டப்பட்டது.

 

1. விக்கிமீடியா அறக்கட்டளை

விக்கிமீடியா 2003 ஆம் ஆண்டில் இணையத் தொழில் முனைவோர் ஜிம்மி வேல்ஸால் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க அரசு சார்பற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனமானது அதன் தலைமையகத்தைச் சான் பிரான்சிஸ்கோவில் கொண்டுள்ளது. மேலும் 280 க்கும் அதிகமான மக்களைப் பணியில் அமர்த்தியுள்ளது மற்றும் 75 மில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர வருவாயைக் கொண்டுள்ளது.

விக்கிமீடியா விக்கிபீடியா போன்ற வலைத்தளங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இது பன்மொழி மற்றும் பன்மொழி உள்ளடக்கத்தை உருவாக்கி இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கிறது. இந்த அறக்கட்டளை அனைத்துப் பெரிய பத்திரிகைகளாலும் உலகில் ஒரு சிறந்த அரசு சாரா நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Best NGOs in the World

Top 10 Best NGOs in the World
Story first published: Wednesday, November 15, 2017, 18:41 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns