உலகின் டாப் 10 தனியார் வங்கிகள்.. இந்திய வங்கிகளுக்கு இடமில்லயாம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இன்றைய நவீன உலகப் பொருளாதாரத்தில் வங்கிகள் ஒரு நாட்டை வல்லரசாக மாற்றுகின்றது. நிதிப் புழக்கம் என்பது எந்த நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்குகிறது, இத்தகைய நிதிப் புழக்கத்திற்கு அந்த நாட்டில் உள்ள வங்கிகள் பெரும் பங்காற்றுகின்றன.

வாடிக்கையாளர்களுக்குச் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகள் போன்ற சேவைகளை நடத்துவதன் மூலம் பணத்தைக் கையாளும் முகவர்களாக வங்கிகள் செயல்படுகின்றன. இன்று, உலகெங்கிலும் உள்ள பல வங்கிகள் தங்களுக்கு வருமானத்தைத் தரும் வாடிக்கையாளர்களுக்கு வருவாய் சார்ந்த சார்பு வங்கி சேவைகளை வழங்குகின்றன.

இப்போதெல்லாம், வங்கிகள் சமூக அமைப்பின் ஒருங்கிணைந்த பாகங்களாக மாறிவிட்டன. ஆயுள் காப்புறுதி, பங்கு மேலாண்மை, கடன் சேவைகள், முதலீடு, வணிகக் கடன், பரஸ்பர நிதிகள் மற்றும் இன்னும் இது போன்ற பல்வேறு நிதிச் சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இப்படி ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அடித்தளத்தில் இருந்து கட்டமைக்கும் முக்கியமான பொறுப்பில் வங்கிகள் உள்ளது.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த 10 தனியார் வங்கிகளைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

10. பிக்செட்

பிக்செட் என்பது சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் துறை வங்கியாகும். இது சுவிஸ்ஸில் உள்ள முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இது செல்வ மேலாண்மை, சொத்து மேலாண்மை மற்றும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் வாடிக்கையாளர்களுக்குச் சொத்துசேவை போன்ற முக்கியமான சேவைகளை வழங்குகிறது.

26 அலுவலகங்கள்

பிக்செட் உலகின் சிறந்த தனியார் வங்கியில் ஒன்றாகும், மேலும் இதில் உலகம் முழுவதும் உள்ள 26 அலுவலகங்களில் சுமார் 4,100 க்கும் மேற்பட் ட நபர்கள் பணியாற்றுகின்றனர். உயர் மதிப்பு வாடிக்கையாளர்களுக்கும் பெரிய நிதி நிறுவனங்களுக்கும் தனியார் வங்கியியல் நிபுணத்துவச் செல்வவள தீர்வையை இது வழங்குகின்றது.

9. ராயல் பேங்க் ஆப் கனடா

கனடாவின் ராயல் பாங்க் ஆஃப் கனடா (RBC) 1864 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கனடாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனம் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சிறப்புக் கடன் தீர்வுகளை ஆர்பிசி எஸ்டேட் திட்டமிடல் ஆலோசனையிலிருந்து பிரத்தியேக சேவையாக வழங்குகிறது.

650 பில்லியன் டாலர்

இந்த வங்கி நிர்வாகத்தின் கீழ் 650 பில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன. இது உலகின் முதல் 10 தனியார் வங்கிகளுள் ஒன்றாகும். கனடாவில் இருந்து செயல்பட்டாலும் உலகம் முழுவதும் உள்ள 40 நாடுகளில் இது செயல்படுகிறது. கனடாவின் ராயல் பேங்க், வருவாய் மற்றும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கனடாவில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகின்றது.

8. பிஎன்பி பரிபாஸ்

பிஎன்பி பரிபாஸ் பிரெஞ்சு பன்னாட்டு வங்கி ஆகும். இந்த நிறுவனத்திற்கு 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இது யூரோப்பகுதியில் இரண்டாவது முக்கிய வங்கியாகும்.

இரு வணிகப் பகுதிகள்

பிஎன்பி பரிபாஸ் நிறுவனம் இரு வணிகப் பகுதிகள் மூலம் தனது வர்த்தகத்தைச் செயல்படுத்துகிறது: வீட்டு சந்தை மற்றும் சர்வதேச நிதி சேவைகள் மற்றும் பெருநிறுவன மற்றும் நிறுவன வங்கி ஆகியவற்றை உள்ளடக்கிய சில்லறை வங்கி மற்றும் சேவைகள்.

இந்த நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவில் உள்ள சில நாடுகளில் மிகவும் வலுவாக உள்ளது. இது 10 சிறந்த சிறந்த தனியார் வங்கிகளின் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

 

7. கோல்ட்மேன் சாக்ஸ்

கோல்ட்மேன் சாச்ஸ் ஒரு அமெரிக்கப் பன்னாட்டு தனியார் துறை வங்கி ஆகும். இது 1869 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நிறுவப்பட்டது. தற்போது உலகளாவிய அளவில் இந்த நிறுவனத்தில் சுமார் 36,500 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது ஒரு முன்னணி உலகளாவிய முதலீட்டு வங்கி ஆகும்.

நிதி சேவைகள்

இது பத்திரங்கள் மற்றும் முதலீட்டு மேலாண்மை நிறுவனம் ஆகவும் திகழ்ந்து உலகளவில் பல்வேறு நிதி நிறுவனங்கள், அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் வேறுபட்ட வாடிக்கையாளர் தளத்தில் சொத்து மேலாண்மை, சேர்க்கை மற்றும் கையகப்படுத்துதல் ஆலோசனை மற்றும் பிரதான தரகு போன்ற பல்வேறு பரந்த நிதி சேவைகளை வழங்குகிறது.

6. டிச்சிஸ் வங்கி

வர்த்தக வங்கி, காப்பீடு, அடமான கடன்கள், சேமிப்பு, ஈக்விட்டி, கிரெடிட் கார்டுகள், முதலீடு, செல்வ மேலாண்மை போன்ற உயர் தர வங்கி சேவைகளை நிறுவனங்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டிச்சிஸ் வங்கி ஒரு ஜேர்மன் நாட்டைச் சார்ந்த பன்னாட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமாகும்.

70 நாடுகள்

இந்த நிறுவனத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 101,000 க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். எனவே இந்த நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் வலுவான கட்டமைப்புடன் நிதிச் சேவையை வழங்குகின்றது. இது உலகின் சிறந்த 10 சிறந்த தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும்.

5. எச்எஸ்பிசி

1865 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் நிறுவப்பட்ட ஒரு பிரிட்டிஷ் பன்னாட்டு வங்கிச்சேவை மற்றும் நிதி சேவைகள் நிறுவனம் எச்எஸ்பிசி ஆகும். இந்த நிறுவனத்திற்குச் சுமார் 4,000 அலுவலகங்கள் உலகம் முழுவதும் 70 நாடுகளில் உள்ளது இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள 38 நாடுகளைச் சேர்ந்த சுமார் 38 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

நான்கு வியாபார குழுமங்கள்

எச்எஸ்பிசி, சில்லறை வங்கி மற்றும் செல்வ மேலாண்மை, வர்த்தக வங்கி, தனியார் வங்கி மற்றும் உலகளாவிய வங்கி மற்றும் சந்தை (முதலீட்டு வங்கி) ஆகிய நான்கு வியாபார குழுமங்களின் கீழ் தன்னுடைய செயல்பாடுகளை வழங்குகின்றது. எச்எஸ்பிசி உலகில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் சிறந்த தனியார் வங்கிகளில் ஒன்றாகும்.

4. சிட்டி

சிட்டி பேங்க், அமெரிக்கச் சேர்ந்த பன்னாட்டு வங்கிச்சேவை மற்றும் நிதி சேவை நிறுவனமாகும், இந்த நிறுவனம் நுகர்வோர், பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பரந்த அளவிலான நிதியியல் சேவைகள் வழங்குகின்றது. இந்த நிறுவனம் 1812 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் நிறுவப்பட்டது, இன்று இந்த நிறுவனத்திற்கு உலகெங்கும் 19 நாடுகளில் 2,649 கிளைகள் உள்ளன.

நான்கில் ஒன்று

இது அமெரிக்காவின் பெரிய நான்கு வங்கிகள் ஒன்றில் ஒன்றாகும். இந்த நிறுவனம் கடன் அட்டைகள், பெருநிறுவன வங்கி, அடமானங்கள், தனிப்பட்ட கடன்கள், வணிகக் கடன்கள், முதலீட்டு வங்கி, உலகளாவிய செல்வ மேலாண்மை, தனியார் பங்கு மற்றும் நிதி பகுப்பாய்வு ஆகிய பல்வேறு சேவைகளை வழங்குகின்றது.

3. க்ரெடிட் சுவிஸ்

1856 ஆம் ஆண்டில் ஜுரிச்சை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பன்னாட்டு நிதி சேவைகள் நிறுவனமாக 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது. இந்த நிறுவனத்தில் 150 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து சுமார் 47,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
890 பில்லியன் டாலர்

இந்த நிறுவன நிர்வாகத்தின் 890 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சொத்துக்கள் உள்ளது. மேலும் இந்த நிறுவனம் சொத்து மேலாண்மை, முதலீட்டு வங்கி, தனியார் வங்கி மற்றும் பங்கு மேலாண்மை போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகின்றது.

இது சுவிட்சர்லாந்தின் சிறந்த வங்கிகளில் ஒன்றாகும். மேலும் இது உலகின் முதல் 10 தனியார் வங்கிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.

 

2. ஜே.பி. மோர்கன்

ஜே.பி. மோர்கன் ஒரு அமெரிக்க வங்கி மற்றும் நிதியியல் சேவைகள் வழங்கும் நிறுவனமாகும், இந்த நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகின் மிக முக்கியமான நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தீர்வுகளை வழங்கி வருகின்றது.

இந்த நிறுவனம் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. இந்த நிறுவனத்தின் நிகரச் சொத்து மதிப்பின் அடிப்படையில் இது அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியாகும்.

 

2.5 லட்சம் ஊழியர்கள்

இந்த நிறுவனத்தில் சுமார் 250,000 அதிகமன ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் பெருநிறுவன வங்கி, தனியார் வங்கி, வணிக வங்கி, சொத்து மேலாண்மை, தரகு சேவைகள், பொருட்கள் வர்த்தகம், நுகர்வோர் வங்கி, நுகர்வோர் நிதி, உலகளாவிய வங்கி, காப்பீடு, செல்வ மேலாண்மை, முதலீட்டு வங்கி மற்றும் இது போன்ற பல்வேறு சேவைகளைப் பரவலாக வழங்குகிறது. டாப் 10 பட்டியலில் இது 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

1.யூபிஎஸ்

யூபிஎஸ் என்பது ஒரு சுவிஸ் நாட்டைச் சார்ந்த பன்னாட்டு நிதி சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். இது ஜுரிச் மற்றும் பேஸல் ஆகிய நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது.

இந்த நிறுவனம் சுமார் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தனியார், பெருநிறுவனம் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களின் அதிக நிகர மதிப்புடைய சொத்துக்களை மேலாண்மை செய்வது, நிதி மேலாண்மை மற்றும் முதலீட்டு வங்கி போன்ற சேவைகளை வழங்குகிறது. இது சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியாகும்.

 

2 டிரில்லியன் டாலர்

இது சில்லறை வணிக வங்கி மற்றும் வர்த்தக வங்கியியல் சேவைகளை ஐரோப்பா முழுவதும் வழங்குகின்றது. இது உலகம் முழுவதும் சுமார் $ 2 டிரில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புடைய சொத்துக்களை நிர்வகிக்கும் ன் உலகின் மிகப்பெரிய மேலாண்மை நிறுவனமாக உள்ளது. இது உலகின் முதல் 10 சிறந்த தனியார் வங்கிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 Best Private Banks in the World

Top 10 Best Private Banks in the World
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns