ஆடை உலகின் முடிசூடா மன்னன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடை தயாரிப்புத் தொழில் மற்றும் அதன் வர்த்தகம் எல்லா நேரங்களிலும் மிக முக்கியமாகவும், ஆதிக்கம் நிறைந்த ஒரு தொழிலாக விளங்குகிறது. இன்றைய நவீனமயமான உலகிலும் ஆடை தயாரிப்பு மற்றும் அதன் வர்த்தகத்திற்குத் தனி இடம் உண்டு என்றே சொல்ல வேண்டும்.

 

உலகப் பொருளாதாரம் சரியும் போது கூட ஆடைத் தயாரிப்புத் தொழில் மேன்மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. உலகில் பல நம்பகமான ஆடம்பர ஆடை பிராண்டுகள் உலகளவிலான வர்த்தகம் செய்து இன்றைய இளைஞர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தலைசிறந்து விளங்கும் உலகளவில் டாப் 10 பிராண்டுகளையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

10. வெர்சாஸ்

10. வெர்சாஸ்

வெர்சாஸ் ஒரு இத்தாலிய ஆடம்பர ஆடை தயாரிப்புப் பிராண்டாகும். இது 1978 இல் கியான்னி வெர்சாஸால் நிறுவப்பட்டது. நாட்டின் வருவாய் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த போது நிறுவனத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வெர்சாஸ் என்பது உலகின் சிறந்த ஆடை விற்பனை பிராண்ட் மட்டுமல்ல, மேலும் உலகின் விலையுயர்ந்த பிராண்டுகளில் ஒன்றாகும். இது உலகின் மிகப் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். நவ நாகரிகத்தை விரும்புபவர்கள் வெர்சாஸின் சமீபத்திய ஃபேஷன் மற்றும் சிறந்த தரத்திற்காக எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த ஆடம்பர பிராண்ட் அதன் கண்ணைப் பறிக்கும் வடிவங்கள் மற்றும் பிரகாசமான வண்ணங்களுக்காகப் புகழ்பெற்று விரும்பப்படுகிறது.

9. ஃபென்டி
 

9. ஃபென்டி

இந்த இத்தாலிய ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் 1925 ஆம் ஆண்டுப் பௌலா ஃபென்டியால் நிறுவப்பபட்டது. இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் இந்த நிறுவனம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை பெறுகிறது. இந்தப் பிராண்ட் அலங்காரப் பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள், குறிப்பாக 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘பகுட்டி' அணிவரிசை கைப்பைக்காகப் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. மேலும் ஃபென்டி ஒவ்வொரு தயாரிப்பையும் ஒரு தனித்தன்மையான முறையில் வடிவமைப்பதில் பிரசித்தி பெற்றது. புதிய கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகின் ஆடம்பர பிராண்டுகளில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு உயர் தர நிலைகளைக் கடைபிடிக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. ஃபென்டி உலகின் சிறந்த விற்பனை ஆடை பிராண்டுகளில் 9 வது இடத்தைப் பிடிக்கிறது.

8. அர்மானி

8. அர்மானி

அர்மானி உலகின் மிகப் புகழ் பெற்ற பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த இத்தாலிய நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சுமார் 3.1 பில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் இந்த நிறுவனம் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைக் கொண்டுள்ளது. மேலும் அர்மானி உலகின் விலையுயர்ந்த ஆடைத் தயாரிப்பு பிராண்டாக அறியப்படுகிறது. இந்தச் சர்வ தேச இத்தாலிய ஃபேஷன் பிராண்ட் நறுமணத் திரவியங்கள் முதல் தோல் பைகள், கண்ணாடிகள், காலணிகள், நகைகள், வீட்டு உள்ளலங்காரப் பொருட்கள் வரை பரந்த அணிவரிசையில் பொருட்களைத் தயாரிக்கிறது. அர்மானி பல ஹாலிவுட் நட்சத்திரங்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், இது உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஃபேஷன் பிராண்ட் ஆகும்.

7. பர்பெர்ரி

7. பர்பெர்ரி

பர்பெர்ரி ஒரு பிரிட்டிஷ் ஆடம்பர ஃபேஷன் நிறுவனமாகும். இது 1856 ஆம் ஆண்டுத் தாமஸ் பர்பெர்ரியால் தொடங்கப்பட்டது. இந்தப் புகழ்பெற்ற ஃபேஷன் இல்லத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு சுமார் 5.87 பில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் இந்த நிறுவனத்தின் வருவாய் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டாலராகும். இவர்கள் வெளிப்புற பாதுகாப்பு ஆடைகள் முதல் நறுமணப் பொருட்கள், ஃபேஷன் அலங்காரப் பொருட்கள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு தரும் குளிர் கண்ணாடிகள், அழகு சாதனங்கள் வரை தரமான தயாரிப்புகளின் அணிவரிசையை விற்கிறார்கள். இந்த நிறுவனத்திற்குப் பல்வேறு துணை பிராண்டுகளும் இருக்கின்றன. அவற்றில் பர்பெர்ரி இலண்டன், பர்பெர்ரி பிரிட், மற்றும் பர்பெர்ரி ப்ரோசம் ஆகிய பிராண்டுகளும் அடங்கும். இந்த நிறுவனத்திற்கு 50 நாடுகளில் 500 க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் உள்ளன. டிரென்ச் கோட்டுக்கு இந்த நிறுவனம் புகழ்பெற்றது. அவர்கள் மேலும் ராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் வேல்ஸின் அரசாங்க உத்திரவாதத்தைப் பெற்றுள்ளனர்.

6. ப்ரதா

6. ப்ரதா

இந்த இத்தாலிய ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் சுமார் 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிராண்ட் மதிப்பையும் மற்றும் சுமார் 3.91 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 1913 ஆம் ஆண்டு மரியா ப்ரதா என்ற இத்தாலிய தோல் பொருட்கள் தயாரிப்பாளரால் நிறுவப்பட்டது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஆடை பிராண்டுகளில் ஒன்றாகும். மேலும் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் இதை வாங்க விரும்புகிறார்கள். ப்ரதாவின் தயாரிப்புகளில் அணியத் தயாராக இருக்கும் தோல் மற்றும் ஃபேஷன் அலங்காரப் பொருட்கள், உயர்தரச் சூட்கேஸ்கள், காலணிகள், பயணப் பொருட்கள், நறுமணத் திரவியங்கள், கை கடிகாரங்கள், மற்றும் இதர ஃபேஷன் அலங்காரப் பொருட்களும் அடங்கும். ப்ரதா உலகின் சிறந்த ஆடை விற்பனை பிராண்டுகளில் ஒன்றாகும்.

5. ஜியுசிசிஐ

5. ஜியுசிசிஐ

ஜியுசிசிஐ ஆடம்பர ஆடை பிராண்டுகளின் பிரிவின் தலைவராகும். ஜியுசிசிஐ ஃபேஷன் வடிவமைப்பாளர் குசியோ குசியால் இத்தாலியில் ப்ளாரன்ஸ் நகரத்தில் 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஆடம்பர பிராண்டின் வருவாய் சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சுமார் 12.4 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்த நிறுவனம் உயர் தரத்தில் ஆடைகள், கைக்கடிகாரங்கள், நகைகள், காலணிகள், தோல் பொருட்கள் மற்றும் இதர ஃபேஷன் அலங்காரப் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜியுசிசிஐ உலகின் விலையுயர்ந்த ஆடை பிராண்டுகளில் ஒன்றாகும். மேலும், இது செல்வந்தர்களுக்கான ஆடம்பர ஆடை உற்பத்திக்கு பிரசித்தி பெற்றதாகும். ஜியுசிசிஐ உலகின் புகழ்பெற்ற பிரபலங்களுக்கிடையே விரும்பித் தேர்ந்தெடுக்கப்படும் பிராண்டாக இருக்கிறது.

4. சேனல்

4. சேனல்

சேனல் பிராண்ட் அணியத் தயாராக உள்ள ஆடைகள், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ஃபேஷன் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பிரத்யேகமான ஆடம்பர ஃபேஷன் பிராண்டாகும். இந்தப் புகழ்பெற்ற பிரான்சு நிறுவனம் 1909 ஆம் ஆண்டுக் கோக்கோ சேனலால் தொடங்கப்பட்டது. இந்தச் சேனல் புகழ்பெற்ற மற்றும் பணக்கார பிரபலங்களால் விரும்பப்படுகிறது. இந்த நிறுவனம் நவநாகரிக மற்றும் செழிப்பான வடிவமைப்புகளை வழங்குகிறது. இவர்கள் மற்றவர்களுடைய பாணியைப் பின்பற்றுவதில்லை. மேலும் இவர்கள் தனக்கெனத் தனித்தன்மையான பாணியைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்த நிறுவனத்தால் ஈட்டப்பட்ட வருவாய் 5.4 பில்லியன் அமெரிக்க டாலராகும். சேனல் உலகின் விலையுயர்ந்த பிராண்டுகளில் ஒன்றாகும்.

3. ஹெர்மஸ்

3. ஹெர்மஸ்

ஹெர்மஸ் என்பது பிரான்சின் உயர் ஃபேஷன் ஆடம்பர பிராண்டாகும். இது 1837 ஆம் ஆண்டுத் தியரி ஹெர்மஸ் என்பவரால் நிறுவப்பட்டது. ஹெர்மஸ் உலகின் அதிக விற்பனையாகும் 10 ஆடை பிராண்டுகளின் நமது பட்டியலில் 3 வது இடத்தைப் பிடிக்கிறது. இந்த நிறுவனத்தின் வருவாய் சுமார் 5.37 பில்லியன் அமெரிக்க டாலராகும். மேலும் இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 10.6 பில்லியன் அமெரிக்க டாலராகும். ஹெர்மஸின் தயாரிப்புகள் அணியத் தயாராக இருக்கும் ஆடைகள், தோல் பொருட்கள், வாழ்க்கை முறை அலங்காரப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் நறுமணத் திரவியங்கள் ஆகும். இந்த 176 வருடப் பழமையான பிராண்ட் அதன் கெல்லி பைகள், மற்றும் பட்டு ஸ்கார்ஃப்கள் ஆகியவற்றிற்குப் பிரசித்தி பெற்றதாகும். மேலும், இது உலகின் விலையுயர்ந்த பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் உலகெங்கும் 8050 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

2. ரால்ஃப் லாரன்

2. ரால்ஃப் லாரன்

ரால்ஃப் லாரன் அமெரிக்காவின் முதன்மையான ஆடம்பரப் பொருட்களின் பிராண்டாகும். இந்த நிறுவனம் கோடீஸ்வரரான ஃபேஷன் வடிவமைப்பாளர் ரால்ஃப் லாரன் பேக்கால் 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஆடம்பர ஆடை தயாரிப்புத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள், அலங்காரத் துணை பொருட்கள், நறுமணத் திரவியங்கள் தயாரிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்துகிறது. ரால்ஃப் லாரன் கார்ப்பரேஷன் பல்வேறு இதர உயர்தர ஃபேஷன் நிறுவனங்களான போலோ ரால்ஃப் லாரன், ரால்ஃப் லாரன் கலெக்ஷன், ரால்ஃப் லாரன் குழந்தைகளுக்கான ஆடைகள், லாரன் ரால்ஃப் லாரன், டபுள் ஆர்எல், டெனிம் அண்ட் சப்ளை ரால்ஃப் லாரன் உள்ளிட்ட பிராண்டுகளை நிர்வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு 6.6 பில்லியன் அமெரிக்க டாலராகும் மேலும் இந்த நிறுவனத்தின் வருவாய் சுமார் 7.4 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

1. லூயிஸ் வுட்டன்

1. லூயிஸ் வுட்டன்

லூயிஸ் வுட்டன் உலகின் முன்னணி சர்வதேச ஃபேஷன் இல்லமாகும். லூயிஸ் வுட்டன் உலகின் விலையுயர்ந்த ஆடம்பர பிராண்ட் ஆகும். இந்தப் பிராண்டின் மதிப்பு சுமார் 28.1 பில்லியன் அமெரிக்க டாலரும் மற்றும் வருவாய் 10.1 பில்லியன் அமெரிக்க டாலருமாகும். லூயிஸ் வுட்டன் ஹாலிவுட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜுலி, சாரா ஜெஸ்ஸிகா பார்க்கர், கிம் கர்தாஷியான், லேடி காகா மற்றும் பலரின் விருப்பத்திற்குரிய பிராண்டாகும். லூயிஸ் வுட்டன் ஆடம்பர ஆடை பிராண்டுகளின் பிரிவில் உலகின் அதிகப் புகழ்பெற்ற மற்றும் அதிகமாக விற்பனையாகும் ஒரு பிராண்டாகும்.

லூயிஸ் வுட்டன் நிறுவனம் வுட்டன் என்பவரால் 1854 ஆம் ஆண்டுப் பிரான்சில் பாரிஸ் நகரில் ரூ நூ டெஸ் கேபுசைன்ஸ் நகரில் தொடங்கப்பட்டது. இன்றைய தேதி வரை இதன் வெற்றியையும் புகழையும் வேறு எந்தப் பிராண்டினாலும் முறியடிக்க முடியவில்லை. மேலும் லூயிஸ் வுட்டன் உலகின் விலையுயர்ந்த பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஆடம்பர பயணப் பெட்டிகள், மற்றும் தோல் பொருட்கள், அணியத் தயாராக இருக்கும் ஆடைகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் குளிர்க்கண்ணாடிகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளின் தயாரிப்பு அணிவரிசையை விற்பனை செய்கிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Best Selling Clothing Brands in The World

Top 10 Best Selling Clothing Brands in The World
Story first published: Saturday, November 18, 2017, 12:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X