ஜீன்ஸ் விற்பனையில் கல்லாக்கட்டும் உலகின் டாப்10 நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளாவிய ஆடை கலாச்சாரத்தை முற்றிலும் மாற்றிய ஒரு ஆடை என்றால் ஜீன்ஸை குறிப்பிடலாம். ஆண்கள், பெண்கள் என இருதரப்பினருக்கும் ஜீன்ஸை பிற ஆடைகளை விடவும் வசதியானதாக உணர்கிறார்கள் இதுவே இதன் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்குகிறது.

 

இப்படி ஜீன்ஸ் உலகில் பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் ஜீன்ஸ் பல பிராண்டுகளில் சந்தையில் வர்த்தகத்தில் வருகின்றன. ஆனால் இங்கே நாம் உலகில் விற்பனையாகும் முதல் 10 சிறந்த ஜீன்ஸ் பிராண்ட்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

10. லீ

10. லீ

லீ டெனிம் ஜீன்ஸ் ஒரு அமெரிக்கப் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனம் 1889 முதல் ஜீன்ஸ் துணிகளை உற்பத்தி செய்து வருகிறது. இது உலகில் விற்பனையாகும் மிகச் சிறந்த ஜீன்ஸ் பிராண்ட்களில் ஒன்றாகும்.

லீ பிராண்ட் மிகவும் வசதியானது, மலிவானது, கம்பீரமானது மற்றும் நீடித்து உழைக்கக்கூடியது. நல்ல பொருத்தம், துணியின் தரம் மற்றும் நல்ல தோற்றம் காரணமாக, ஜீன்ஸ் பிராண்ட் உலகில் மிகவும் பிரபலமான பிராண்டாக இது தொடர்கிறது.

 

9. ரங்லர்

9. ரங்லர்

ரங்லர் அமெரிக்க நிறுவனம் ஆகும். இது 1904 ஆம் ஆண்டு முதல் ஜீன்ஸ் மற்றும் பிற ஆடை பொருட்களைத் தயாரித்து வருகின்றது. உலகில் உள்ள சிறந்த ஆண்கள் ஜீன்ஸ் பிராண்டுகளில் ஒன்றாக ரங்லர் அறியப்படுகின்றது. நிறுவனம் நாகரீகமான, கம்பீரமான மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் கூடிய டெனிம் துணிகளில் பல்வேறு வகையிலான ஜீன்ஸ்களைத் தயாரித்து வழங்குகிறது.

ரிங்க்ஸ், 20X மற்றும் ஆரா போன்ற பல ஆடை வகைகளையும் ரங்லர் தயாரிக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஜீன்ஸ்கள் சராசரியாக $ 30 என்கிற மலிவு விலையில் விற்கப்படுகின்றது. இந்த நிறுவனம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஜீன்ஸ் வகைகளைத் தயாரிக்கிறது.

 

8. பெபே ஜீன்ஸ்
 

8. பெபே ஜீன்ஸ்

பெப்பே ஜீன்ஸ் என்பது 1973 ஆம் ஆண்டில் லண்டனில் நிறுவப்பட்ட ஸ்பெயினைச் சார்ந்த பிராண்ட் ஆகும். இந்த நிறுவனம் உலகெங்கிலும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறந்த தரம் வாய்ந்த டெனிம் ஜீன்ஸ் மற்றும் தற்காலிக அணிந்துகளை விற்பனை செய்கிறது. பேபே உலகிலேயே மிகவும் பிரபலமான ஜீன்ஸ் பிராண்டுகளில் ஒன்றாகும்.

இது பேஷன் நேசர்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. சரியான பொருத்தம், சிறந்த தரமான மற்றும் நவநாகரீக பாணி போன்ற காரணங்களினால் இது முண்ணணியில் உள்ளது. அனைத்து வயதினரும் இந்தப் பிராண்ட் ஜீன்ஸ்களை அணிய முடியும். மேழும் இந்தப் பெபே ஜீன்ஸ் மிகவும் வசதியாக உள்ளது.

 

7. கெஸ் ஜீன்ஸ்

7. கெஸ் ஜீன்ஸ்

கெஸ் ஒரு அமெரிக்க ஜீன்ஸ் பிராண்ட் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் ஆகும். கெஸ் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமான ஜீன்ஸ் பிராண்ட்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் அதிகப் போட்டி நிழவும் இளைஞர் பேஷன் சந்தையில் முண்ணணியில் உள்ளது. இதற்கு அதனுடைய உயர்மட்டப் பண்பு, மேற்கத்திய ஸ்டைல் மற்றும் கவர்ச்சி போன்ற பண்புகள் உதவி புரிகின்றன.

இது உலகின் மிகப் பிரபலமான ஃபேஷன் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் உலகெங்கிலும் பிரபலமாக விளங்குகின்றது. இது மிகவும் மலிவாகக் கிடைத்தாலும் உலகில் விற்பனையாகும் மிகச் சிறந்த ஜீன்ஸ் பிராண்ட்களில் ஒன்றாக விளங்குகின்றது.

 

6. செவன் பார் ஆல் மேன்கைண்ட்

6. செவன் பார் ஆல் மேன்கைண்ட்

செவன் பார் ஆல் மேன்கைண்ட் என்பது 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க டெனிம் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் வெர்னான் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. இது உலகில் விற்பனையாகும் சிறந்த ஜீன்ஸ் பிராண்ட்களில் ஒன்றாகும். இது வடிவமைப்பு, துணியின் தரம் போன்ற பல்வேறு திறன்களில் சிறந்து விளங்குகின்றது.

இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் ஆரம்பக் காலத்தில் பெண்களின் ஜீன்ஸை வடிவமைப்பதன் மூலம் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியது, ஆனால் பின்னர் இவர்கள் ஆண்கள் ஜீன்ஸ், ஷார்ட்ஸ், ஸ்கெர்ட்ஸ் மற்றும் ஜாக்கெட்டுகள் போன்ற பல்வேறு ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

5. கால்வின் க்ளீன்

5. கால்வின் க்ளீன்

கால்வின் க்ளீன் உலகிலேயே மிகவும் பிரபலமான ஜீன்ஸ் பிராண்டில் ஒன்றாகும். இந்த நிறுவனம் 1968 ஆம் ஆண்டில் பேஷன் டிசைனர் கால்வின் கிளினின் என்பவரால் நிறுவப்பட்டது. இது மிகவும் பிரபலமான அமெரிக்கன் பேஷன் பிராண்ட் ஆகும். கால்வின் க்ளீன் பிராண்ட் ஸ்டைலான, நவீன மற்றும் பாரம்பரியமான ஜீன்ஸ் வகைகளை மலிவு விலையில் வழங்குகின்றது.

ஜீன்ஸ் வகைகளைத் தவிர்த்து கால்வின் க்ளீன் நிறுவனம், உள்ளாடை, வாசனைத் திரவியங்கள், ஆடை, கைப்பைகள், காலணிகள் போன்றவற்றையும் தயாரித்து விற்கின்றது.

 

4. ட்ரூ ரிலிஜென்

4. ட்ரூ ரிலிஜென்

2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ட்ரூ ரிலிஜென் என்பது ஒரு சிறந்த ஆடை மற்றும் ஸ்டைலான ஜீன்ஸ் உடைகளை உருவாக்கும் ஒரு அமெரிக்கப் பிராண்ட் ஆகும். சிறப்பான பிட் மற்றும் ஸ்டைலான ஜீன்ஸ்களை இந்த நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் பிராண்ட் ஒரு ஆடம்பரமான பிராண்டாகக் கருதப்படுகின்றது.

உலகில் விற்பனையாகும் சிறந்த ஜீன்ஸ் பிராண்ட்களில் ஒன்றான ட்ரூ ரிலிஜென் உலகின் மிக விலையுயர்ந்த ஜீன்ஸ் பிராண்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிராண்ட் ஜீன்ஸ்களின் விலை சராசரியாக $ 200 முதல் $ 1,000 வரை வேறுபடுகின்றது.

 

3. யுனைட்டட் கலர்ஸ் ஆப் பென்ட்டன்

3. யுனைட்டட் கலர்ஸ் ஆப் பென்ட்டன்

யுனைட்டட் கலர்ஸ் ஆப் பென்ட்டன், 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இத்தாலிய உலக ஃபேஷன் பிராண்ட் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கு ஸ்டைலான மற்றும் வசதியான ஜீன்ஸ் மற்றும் பல்வேறு ஆடைகளை விற்பனை செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

இந்தப் பிராண்ட் பரந்த அளவிலான சர்வதேச பாணியிலான ஆடை மற்றும் ஆபரணங்களை உள்ளடக்கியது. இது உலகின் மிகப் பிரபலமான ஜீன்ஸ் பிராண்டுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.

 

2. டீசல்

2. டீசல்

இந்த இத்தாலிய பிராண்ட் தற்போது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஜீன்ஸ் பிராண்டுகளில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இந்தப் பிராண்ட் ஜீன்ஸ்கள் அதன் வசதி, டிசைன் மற்றும் அதனுடைய டினிம் பொருளின் தரம் போன்றவற்றின் காரணமாகப் பிரபலமாக விளங்குகின்றது. இந்த நிறுவனம் 1978ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் நிறுவப்பட்ட நாள் முதல் ஜீன்ஸ்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் டெனிம் உடைகள் மிகவும் பிரபலமான ஆடையாகத் திகழ்கின்றது. இந்த நிறுவனம் டீசல் மற்றும் டீசல் பிளாக் கோல்ட் ஆகிய இரண்டு வெவ்வேறு ஆடை பிராண்டுகளின் மூலம் ஜீன்ஸை விற்கின்றது. இதில் டீசல் ப்ளாக் கோல்ட் என்பது ஆடம்பர ப்ராண்டாக விளங்குகின்றது.

 

1. லெவி ஸ்டிராஸ்

1. லெவி ஸ்டிராஸ்

லேவி ஸ்ட்ராஸ் உலகின் மிகச்சிறந்த டெனிம் ஜீன்ஸ் உடைகளை உற்பத்தி செய்யும் மிகவும் பிரபலமான அமெரிக்க ஆடை நிறுவனமாகும். இது 1853 இல் நிறுவப்பட்டது. இது உலகில் விற்பனையாகும் ஜீன்ஸ் பிராண்டுகளில் மிகவும் சிறந்ததாக இருந்து வருகிறது. ஜீன்ஸ் தயாரித்தல், வடிவமைத்தல் போன்றவற்றில் லெவி எப்போதும் சிறந்த தரம் வாய்ந்ததாக விளங்குகின்றது.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எந்த ஒரு வயதினருக்கும் ஏற்றா பல்வேறு அளவுகளில் அனைத்து வகையான ஜீன்ஸ் வகைகளைஉம் லெவி நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த நிறுவனத் தயாரிப்புகளின் விலை சராசரியாகச் சுமார் $ 25 க்கு கிடைப்பதால், இது நடுத்தர மக்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகின்றது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Best selling Jeans Brands in The World

Top 10 Best selling Jeans Brands in The World
Story first published: Thursday, November 16, 2017, 19:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X