கச்சா எண்ணெய் உற்பத்தியில் சீனா தான் 'ராஜா'.. அப்போ வளைகுடா நாடுகள்..?

By Boopathi Lakshmanan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உலகளாவிய பெட்ரோல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் ஏற்ற இறக்கங்கள் மிகவும் வெளிப்படையாக நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

  சந்தையில் நிலவும் போட்டியின் காரணமாக எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளின் அளவிற்கு அதிகமான உற்பத்தி மற்றும் புவியியல்-அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் ஆகியவை கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தியது. இதுவே இத்தகைய ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகிறது.

  எனினும், இந்தத் தொழில் துறை உலகின் சில முக்கிய நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இயங்கி வருகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.? இந்த ஆதிக்கம் அனைத்தும் அதன் வர்த்தகச் சந்தையும், வர்த்தக அளவுகளையும் சார்ந்து உள்ளது.

   

  இதன் படி உலகின் மிகப்பெரிய 10 எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும், அவற்றின் வருமானத்தையும் பார்த்து நீங்கள் ஆடிப்போனாலும் ஆச்சரியம் இல்லை.

  10. OJSC லூக் ஆயில் (OJSC Lukoil)

  வருமானம் (2014) : 144.17 பில்லியன் டாலர்
  நாடு : ரஷ்யா
  நிறுவப்பட்ட ஆண்டு : 1991
  தொழிலாளர்களின் எண்ணிக்கை :150,000

  ரஷ்ய அரசால் நடத்தப்பட்டு வந்த சைபீரியாவைச் சேர்ந்த - லாங்கெபாஸ்நெஃப்டெகாஸ், உராய்நெப்டெகாஸ் மற்றும் கோஹலைம்நெப்டெகாஸ் ஆகிய 3 நிறுவனங்களும் 1991-ல் இணைக்கப்பட்டு உருவான நிறுவனம் தான் லூக் ஆயில். லூக் ஆயில் நிறுவனமாக இணைக்கப்படுவதற்கு முன்னதாக, இந்த நிறுவனங்கள் முறையே எண்ணெய் வளங்களைக் கண்டறிதல், சுத்திகரித்தல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகியவற்றைச் செய்து வந்தன.

  எனினும், சோவியத் ரஷ்யாவிற்குப் பிறகு வெற்றிகரமாக இந்நிறுவனத்தை நடத்த வேண்டுமென்றால், இந்த மூன்று நிறுவனங்களையும் மேற்கு நாடுகளிலுள்ள போட்டியாளர்களைப் போல இணைத்துச் செயல்படுவது தான் வழி என்று இந்நிறுவனத்தின் தலைவரான வகித் அலெக்பெரோவ் நம்பினார்.

   

  9. செவ்ரான் கார்ப்பரேஷன் (Chevron Corporation)

  வருமானம் (2014) : 211.97 பில்லியன் டாலர்
  நாடு : அமெரிக்கா
  நிறுவப்பட்ட ஆண்டு : 1879
  தொழிலாளர்களின் எண்ணிக்கை : 64,700

  1879-ம் ஆண்டுப் பசிபிக் கோஸ்ட் ஆயில் என்ற பெயரில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து செவ்ரான் நிறுவனத்தின் வரலாறு தொடங்குகிறது. 1900-ம் ஆண்டு ஸ்டேண்டேர்டு ஆயில் நிறுவனம் வாங்கிய பின்னர், ஸ்டேண்டேர்டு ஆயில் கம்பெனி ஆஃப் கலிபோர்னியா ஆக மீண்டும் பிறந்தது. இதன் பின்னர்ச் சௌதி அரேபியாவைச் சேர்ந்த அராம்கோவிடம் 50 ஆண்டுகளுக்கான சலுகைகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

  1984-ம் ஆண்டு, கல்ஃப் ஆயில் நிறுவனத்துடன் இந்நிறுவனம் இணைந்து செவ்ரான் கார்ப்பரேஷன் என்று பெயர் பெற்ற போது, அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிறுவன இணைப்பாக அது கருதப்பட்டது.

   

  8. குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Kuwait Petroleum Corp)

  வருமானம் (2014) : 252 பில்லியன் டாலர்கள்
  நாடு : குவைத்
  நிறுவப்பட்ட ஆண்டு : 1980
  தொழிலாளர்களின் எண்ணிக்கை : 22,000

  குவைத் நாட்டில் இருந்த 4 பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து அரசின் கட்டுப்பாட்டில் 1980-ம் ஆண்டுக் கொண்டு வந்த போது உருவானது தான் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். இதன் மூலம் பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் கல்ஃப் நிறுவனங்களுக்கு 50 ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டு வந்த சாதகமான விலை திரும்பப் பெறப்பட்டது.

  இன்றைய தேதியில், கே.பி.சி நிறுவனம் 2013-ம் ஆண்டில் பெட்ரோலியம் மற்றும் பிற திரவப் பொருட்களை உற்பத்தி செய்யும் தேசிய நிறுவனங்களில் 10-வது இடத்தைப் பெற்றுள்ளது.

   

  7. டோட்டல் எஸ்.ஏ (Total S.A.)

  வருமானம் (2014) : 236.1 பில்லியன் டாலர்கள்
  நாடு : பிரான்ஸ்
  நிறுவப்பட்ட ஆண்டு : 1924
  தொழிலாளர்களின் எண்ணிக்கை : 100,307

  முதலாம் உலகப் போருக்குப் பின்னர்ப் பிரான்சின் பிரதமர் இராயல் டச்சு ஷெல் நிறுவனத்துடன் இணைய மறுத்து, அந்நாட்டிற்குச் சொந்தமாகத் தொடங்கிய நிறுவனம் தான் டோட்டல் எஸ்.ஏ ஆகும். 1985-ம் ஆண்டு வரை கம்பாக்னி பிரான்காய்ஸ் டெஸ் பெட்ரோலெஸ் என்றும், பின்னர் டோட்டல் சி.எஃப்.பி (Total CFP) என்றும், இறுதியாக 1991-ல் டோட்டல் எஸ்.ஏ என்றும் பெயர் மாற்றம் பெற்றது.

  முதல் உலகப்போரின் சீரமைப்பு பணிகளுக்காக ஜெர்மனியிடமிருந்து துருக்கி பெட்ரோலிய நிறுவனத்தின் 25% பங்குகளை இந்நிறுவனத்தைத் தொடங்கிய போது டோட்டல் எஸ்.ஏ பெற்றது.

   

  6. பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP)

  வருமானம் (2014) : 358.7 பில்லியன் டாலர்கள்
  நாடு : இங்கிலாந்து
  நிறுவப்பட்ட ஆண்டு : 1909
  தொழிலாளர்களின் எண்ணிக்கை : 84,500

  1909-ம் ஆண்டில் ஆங்கிலோ-பெர்சியன் ஆயில் கம்பெனி என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் தான் பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆகும். பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னணி வர்த்தகருமான திரு.வில்லியம் டி'ஆர்சி (William D'Arcy) பெட்ரோலியத்தைத் தேடும் போது திவாலாகும் நிலைக்கு வந்திருந்தார்.

  1908-ம் ஆண்டுப் பிரிட்டனின் புவியியலாளர்கள் பெருமளவு எண்ணெய் வளத்தைக் கண்டறிந்த பின்னர் இவரின் பக்கம் அதிர்ஷ்டக் காற்று பெட்ரோலிய மணத்துடன் வீசத் தொடங்கியது. ஆண்டு வருமான இலாபத்தில் 16%-ற்கு மாற்றாக அந்நாட்டின் எணணைய் வளத்தில் பெரும்பாலானவற்றை டி'ஆர்சி-க்கு கொடுத்து விட்டார் ஈரான் நாட்டின் ஷா.

  சுமார் 30 நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனத்தின், மொத்த வியாபாரத்தில் அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் வருமானம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.

   

  5. சௌதி அரேபியன் ஆயில் கம்பெனி (அராம்கோ)

  வருமானம் (2014) : 378 பில்லியன் டாலர்கள்
  நாடு : சௌதி அரேபியா
  நிறுவப்பட்ட ஆண்டு : 1933
  தொழிலாளர்களின் எண்ணிக்கை : 61,907

  சௌதி அராம்கோ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் இந்நிறுவனம் உண்மையில் சௌதி அரேபியாவிற்கும், ஸ்டேண்டேர்டு ஆயில் கம்பெனி ஆஃப் கலிபோர்னியாவிற்கும் ஏற்பட்ட சலுகையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டதாகும். ஆரம்ப நாட்களில் இதன் போட்டி நிறுவனங்களான டெக்ஸாகோ, எக்ஸ்ஸான், மோபில் மற்றும் ஸோகால் ஆகியவையும் இந்நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்தன. 1973-ம் ஆண்டுச் சௌதி அரேபிய அரசு 25% பங்குகளை வாங்கி இந்நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றத் தொடங்கியது, 1980-ம் ஆண்டில் முழுமையாகக் கைப்பற்றி விட்டது.

  சௌதி அரேபியன் ஆயில் கம்பெனி (அராம்கோ) உலகிலேயே மிகவும் மதிக்கத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

   

  4. எக்ஸ்ஸான் மோபில் (ExxonMobil)

  வருமானம் (2014) : 411.94 பில்லியன் டாலர்கள்
  நாடு : அமெரிக்கா
  நிறுவப்பட்ட ஆண்டு : 1999
  தொழிலாளர்களின் எண்ணிக்கை :75,500

  ஜான் டி. ராக்ஃபெல்லரின் ஸ்டேண்டேர்டு ஆயில் நிறுவனத்திலிருந்து மிஞ்சி வந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு தான் எக்ஸ்ஸான் மோபில் ஆகும். நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரங்களைச் சேர்ந்த இந்த இரண்டு நிறுவனங்களும் முறையே எக்ஸ்ஸான் மற்றும் மோபில் என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்த நிறுவனங்களின் இணைப்புக் காரணமாக அமெரிக்க வரலாற்றிலேயே ஏற்பட்ட மிகப்பெரிய நிறுவன இணைப்பு உருவானது.

   

  3. இராயல் டச்சு ஷெல் (Royal Dutch Shell)

  வருமானம் (2014) : 421.1 பில்லியன் டாலர்கள்
  நாடு : இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து
  நிறுவப்பட்ட ஆண்டு : 1907
  தொழிலாளர்களின் எண்ணிக்கை : 94,000

  இராயல் டச்சு ஷெல் என்று அழைக்கப்படும் இந்நிறுவனம் 19-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். அந்தக் காலத்தில், இலண்டனைச் சேர்ந்த மார்கஸ் சாமுவேல் ஓடுகளை (ஷெல்) கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த காரணத்தால், இந்நிறுவனம் ஷெல் என்று மட்டுமே அழைக்கப்பட்டு வந்தது.

  பின்னர் ஷெல் நிறுவனம் சகோதரர்களான மார்கஸ் ஜுனியர் மற்றும் சாம் சாமுவேல் ஆகியோரின் கைகளுக்குச் சென்றது. மார்கஸ் ஜுனியர் தன்னுடைய ஆர்வத்தை எண்ணெய் ஏற்றுமதி வியாபாரத்தில் காட்டினார்.

  இராயல் டச்சு பெட்ரோலியத்துடன் இணைந்து இராயல் டச்சு ஷெல் குழுமம் என்று 1907-ம் ஆண்டு அழைக்கப்படுவதற்கு முன்னதாக, இந்நிறுவனம் ஷெல் டிரான்ஸ்போர்ட் மற்றும் டிரேடிங் கம்பெனி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

   

  2. சீனா தேசிய பெட்ரோலிய கார்ப்பரேஷன் (பெட்ரோசீனா) - Petrochina


  வருமானம் (2014) : 432 பில்லியன் டாலர்கள்
  நாடு : சீனா
  நிறுவப்பட்ட ஆண்டு : 1988
  தொழிலாளர்களின் எண்ணிக்கை : 1,66,532

  பொதுத்துறையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பெட்ரோசீனா நிறுவனம் CNPC என்ற பெயரிலான அரசு நிறுவனமாகும். இது சீனாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த பெட்ரோலிய சக்தி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தொடக்கத்தைக் கம்யூனிஸ புரட்சியின் தொடக்கக் காலத்தில் காண முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட 'எரிபொருள் தொழில் அமைச்சகத்தின்' பெட்ரோலிய பிரிவாக இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது.

   

  1. சைனோபெக் - Sinopec

  வருமானம் (2014) : 437.6 பில்லியன் டாலர்கள்
  நாடு : சீனா
  நிறுவப்பட்ட ஆண்டு : 2000
  தொழிலாளர்களின் எண்ணிக்கை : 358,571

  சீனா பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் என்று அழைக்கப்படும் சைனோபெக் லிமிடெட் நிறுவனம், சைனோபெக் குழுமம் அல்லது சீன பெட்ரோ-கெமிக்கல் நிறுவனத்தின் முக்கியமான துணை நிறுவனங்களில் ஒன்றாகும். போட்டி நிறுவனமான பெட்ரோசீனாவின் உற்பத்தில் கால் பங்கு மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்தாலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய வருடாந்திர எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக இந்நிறுவனம் அறியப்பட்டிருக்கிறது.

   

   

  'எஸ்கேப்'

  'மோடி' அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இவங்க மட்டும் 'எஸ்கேப்'..!

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Top 10 Biggest Oil Companies Around The World

  List of the top 10 oil and gas companies in the world by revenue - Tamil Goodreturns
  Story first published: Friday, November 25, 2016, 11:20 [IST]
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more