உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட டாப் 10 நிறுவனங்கள்..!

ஒரு நிறுவனத்தில் லட்சம் பணியாளர்களை வைத்து வேலை வாங்குவதே கடினம். ஆனால் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் 22 லட்சம் ஊழியர்களை கொண்டு வியாபாரம் செய்து வருகிறது. அடங்கப்பா..

By Boopathi Lakshmanan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே மிகவும் அதிகமான பணியாளர்களை கொண்டிருப்பவை வெறும் நிறுவனங்களாக இல்லாமல் நாடுகளாகவே இருக்கின்றன (குறிப்பாக இராணுவத்தைச் சொல்லலாம்). அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவ துறை மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் ஆகியவற்றில் முறையே 3.2 மற்றும் 2.3 மில்லியன் பேர் பணியாளர்களாக உள்ளனர்.

 

உண்மை நிலை இப்படி இருந்தாலும், உலகெங்கிலும் இராணுவத்தை விடக் குறைவான ஆபத்துகள் உள்ள தொழில்களைக் கொண்டிருக்கும் தனியார் பெரு நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் பொறுப்பேற்றுப் பணி செய்து வருகிறார்கள்.

உலகிலேயே மிகவும் அதிகமான வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனங்களின் பட்டியலைத் தொடர்ந்து, இப்போது உலகிலேயே மிகவும் அதிகமான அளவு வேலைகளைக் கொடுக்கும் திறனுடைய நிறுவனங்களின் பட்டியலை நாங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இதோ உலகிலேயே மிகவும் அதிகமான தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியல் (2016-ன் தொழிலாளர்கள் எண்ணிக்கையின் படி)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய: தமிழ் குட்ரிட்டன்ஸ்

10. டாய்ச் போஸ்ட்

10. டாய்ச் போஸ்ட்

தொடங்கப்பட்டுள்ள நாடு : ஜெர்மனி

தொழில் : தபால் சேவைகள்

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 488,824

ஒரு மதிப்பு மிக்க கொரியர் நிறுவனமாக இருக்கும் டாய்ச் போஸ்ட்-ல் 2014-ம் ஆண்டில் மட்டும் 488,000 பணியாளர்கள் பணி புரிந்து வந்தனர். இந்நிறுவனத்தின் வருமானம் 56.63 பில்லியன் டாலர்களும் ஆகும்.

 

9. சீன கட்டுமான வங்கி

9. சீன கட்டுமான வங்கி

தொடங்கப்பட்டுள்ள நாடு : சீனா

தொழில் : வங்கி மற்றும் நிதியியல்

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 493,583

சீனாவிலுள்ள 4 பெரிய வங்கிகளில் ஒன்றாகவும் மற்றும் சந்தை மூலதன அளவில் உலகிலேயே இரண்டாவது பெரிய வங்கியாகவும் இருப்பது தான் சீன கட்டுமான வங்கியாகும். இந்த நிறுவனத்திற்குச் சீனாவில் மட்டும் 13,600 கிளைகள் உள்ளன மற்றும் பார்சிலோனா, ஃப்ராங்க்பர்ட், லக்ஸம்பர்க், ஹாங்காங், டோக்யோ மற்றும் நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த வங்கியின் கிளைகள் உள்ளன.

 

8. சீனா வேளாண்மை வங்கி
 

8. சீனா வேளாண்மை வங்கி

தொடங்கப்பட்டுள்ள நாடு : சீனா

தொழில் : வங்கி மற்றும் நிதியியல் சேவை

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 493,583

முக்கிய நகரங்களான ஹாங்காங், டோக்யோ, இலண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களிலும், சீனாவில் மட்டும் 24,000 கிளைகளையும் கொண்டிருக்கும் நிறுவனமாக விளங்குகிறது சீனா வேளாண்மை வங்கியாகும். 2010-ம் ஆண்டில் இந்நிறுவனம் பங்குகளை (IPO) வெளியிட்ட போது உலகிலேயே மிகப்பெரிய அளவில் பங்குகளை வெளியிட்ட நிறுவனமாக இருந்தது. இந்தச் சாதனையை சமீபத்தில் அலிபாபா நிறுவனம் முறியடித்தது.

 

7. டெஸ்கோ

7. டெஸ்கோ

தொடங்கப்பட்டுள்ள நாடு : இங்கிலாந்து

தொழில் : சில்லறை வணிகம்

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 510,444

கிழக்கு இலண்டனிலுள்ள ஹாக்னே என்ற இடத்தில் சிறிய கடையாக 97 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிறுவனத்தைத் தொடங்கினார் ஜேக் கோஹன் என்பவர். இன்றைய தினத்தில் டெஸ்கோ உலகிலேயே மிக அதிகமான வருமானத்தைப் பெறும் சில்லறை வணிக நிறுவனமாகவும், பணியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் 7-வது பெரிய நிறுவனமாகவும் உள்ளது. ஹர்ட்போர்ட்ஷயரில் இருந்து கொண்டு, உலகெங்கிலும் 2500 பன்னாட்டுக் கிளைகளை கட்டுப்படுத்தி வருகிறது டெஸ்கோ.

 

6. காம்பஸ் குழுமம்

6. காம்பஸ் குழுமம்

தொடங்கப்பட்டுள்ள நாடு : இங்கிலாந்து

தொழில் : உணவு சேவைகள்

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 514,718

பிரிட்டனை மையமாகக் கொண்டு 50 நாடுகளுக்கும் மேலாக உணவு சேவைகள் நிறுவனத்தை நடத்தி வருகிறது காம்பஸ் குழுமம். இந்த நிறுவனம் வசதி மேலாண்மை, சுத்தம் மற்றும் ஆதரவு சேவைகளையும் அளித்து வருகிறது. உணவு சேவைகளை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றும் நிறுவனமாக இருப்பதால் அசையாச் சொத்துக்களில் குறைந்த அளவே முதலீடு செய்திருக்கும் இந்த நிறுவனத்தின், மிகப்பெரிய செலவினமாக இருப்பது அந்நிறுவனத்தின் 515,000 பணியாளர்களுக்கான ஊதியமே ஆகும்.

 

5. பெட்ரோ சீனா

5. பெட்ரோ சீனா

தொடங்கப்பட்டுள்ள நாடு : சீனா

தொழில் : எண்ணைய் மற்றும் எரிவாயு

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 534,652

1999-ம் ஆண்டில் தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட பெட்ரோ சீனா, 367 பில்லியன் டாலர்கள் வருமானம் தரக்கூடிய வகையில் உலகிலேயே மிகப்பெரிய எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. சீனாவின் எண்ணைய் மற்றும் எரிவாயு துறையின் முதன்மையான நிறுவனமாக விளங்குவதால் - எண்ணைய், எரிவாயு வளங்களைக் கண்டறிதல், பெட்ரோலியப் பொருட்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் பெட்ரோ சீனா கோலோய்ச்சி வருகிறது. 534,652 பணியாளர்களுடன் உலகிலேயே 5-வது மிகப்பெரிய நிறுவனமாகவும் பெட்ரோ சீனா விளங்குகிறது.

 

4. யும்! பிராண்ட்ஸ்

4. யும்! பிராண்ட்ஸ்

தொடங்கப்பட்டுள்ள நாடு : அமெரிக்க

தொழில் : உணவகங்கள்

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 537,000

130 நாடுகளுக்கும் மேலாக 42000 உணவகங்களை நடத்தி வரும் அமெரிக்க நிறுவனம் என்ற அடைமொழியை யும்! பிராண்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. முகுஊ, டாகோ பெல் மற்றும் பிட்ஸா ஹட் போன்ற முன்னணி பிராண்டகளுக்கான உரிமம் பெறுதல் மற்றும் உரிமம் வழங்குதல் போன்றவற்றின் மூலமே சர்வதேச சந்தையில் யும்! பிராண்ட்ஸ் வளர்ந்து வருகிறது.

 

3. வோல்க்ஸ்வேகன்

3. வோல்க்ஸ்வேகன்

தொடங்கப்பட்டுள்ள நாடு : ஜெர்மனி

தொழில் : ஆட்டோமோடிவ்

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 592,586

1937-ம் ஆண்டு ஜெர்மானிய தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பினால் குறைந்த செலவில் வாகனங்கள் தயாரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட வோக்ஸ்வேகன் நிறுவனம், இன்றைய உலகில் ஒரு முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. காலப்போக்கில், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் தன்னுடைய உற்பத்தி மற்றும் ஒருங்கிணைக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி தன்னுடைய காலடியை உலகெங்கிலும் நன்கு பதிவு செய்துள்ளது இந்நிறுவனம்.

 

2. ஹோன் ஹாய் ப்ரிசிஷன் இன்டஸ்ட்ரீ கோ,. லிமிடெட்

2. ஹோன் ஹாய் ப்ரிசிஷன் இன்டஸ்ட்ரீ கோ,. லிமிடெட்

தொடங்கப்பட்டுள்ள நாடு : தைவான்

தொழில் : மின்னணுவியல் உற்பத்தி

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 1.29 மில்லியன்

ஹோன் ஹாய் ப்ரிசிஷன் இன்டஸ்ட்ரீ (ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம் என்ற பெயரில் வணிகம் செய்கிறது) தைவானைச் சேர்ந்த மதிக்கத்தக்கப் பன்னாட்டு ஒப்பந்த மின்னணு பொருட்களை வணிகம் செய்யும் நிறுவனமாகும். ஒப்பந்த உற்பத்தியாளராக இருக்கும் இந்நிறுவனம், முன்னணி பிராண்ட்களாக இருக்கும் நிறுவனங்களின் சார்பாக மின்னணு பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் மக்கியான ஒப்பந்ததாரராக ஐஃபோன் நிறுவனம் உள்ளது.

1.29 மில்லியன் பணியாளர்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தில், பெரும்பாலோர் சீன தேசத்தவர்களே. மோசமான பணி சூழல் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைக்குள்ளான இந்த நிறுவனத்தில், இதே காரணத்திற்காக தற்கொலைகளையும் செய்து கொண்டுள்ளார்கள்.

1. வால்-மார்ட்

1. வால்-மார்ட்

தொடங்கப்பட்டுள்ள நாடு : அமெரிக்கா

தொழில் : சில்லறை வணிகம்

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை : 2.2 மில்லியன்

1960-களில் திரு.ஸாம் வால்டன் என்பவரால் மிகச்சிறிய காய்கறி விற்பனை கடையாக தொடங்கப்பட்ட வ வால்-மார்ட், இன்று 11,500 ஹைப்பர் மார்க்கட் நிறுவனங்களையும், தள்ளுபடி துறைகளையும் மற்றும் 28 நாடுகளுக்கும் மேலாகச் சில்லறை விற்பனை நிலையங்களையும் கொண்டு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது. 2015-ம் ஆண்டின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் போது 485.65 பில்லியன் டாலர்கள் வருமானத்துடன் உலகிலேயே மிக அதிக வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும், பணியாளர்களைப் பொறுத்த வரையில் 2.2 மில்லியன் பணியாளர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாகவும் உள்ளது வால்-மார்ட்.

சமீப நாட்களில் வால்-மார்ட் நிறுவனம் அதன் குறைவான ஊதியம் மற்றும் மோசமான பணி சூழல்களுக்காக விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு 9 டாலராக இருந்த ஊதியத்தை, 10 டாலர்களாக உயர்த்தியுள்ளது வால்-மார்ட்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Companies with the Biggest Workforce in the World

Top 10 Companies with the Biggest Workforce in the World
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X