ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றும் சக்தி 'இந்த' நிறுவனத்திடம் உள்ளது..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிதியகங்கள் (Sovereign Wealth Fund) எப்போதும் அந்தந்த நாட்டில் உள்ள மக்கள், தங்கள் பணத்தை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து நிதி நன்மைகளை அனுபவிக்கும் பொருட்டுத் தத்தம் அரசால் நிறுவப்படுகிறது. இந்த வங்கிகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தியே மாற்றி அமைக்கும் திறன் உடையது என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆனால் இதுதான் உண்மை.

பெரும்பாலான நிதியகங்கள் எண்ணெய் நிறுவனங்களின் பின்புலத்தால் உருவாக்கப்பட்டன. நிதியகங்கள் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களானது பெட்ரோலிய எரிபொருள் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நிதியகங்களிலிருந்து $7 டிரில்லியன் நிதி உள்ளது. இதி ல் பெரும் பங்கு எண்ணெய் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டவை என்று உங்களில் எத்தனைபேருக்கு தெரியும்.

இந்நிலையில் உலகின் டாப் 10 வளமிக்க நிதியகங்கள் மற்றும் அதன் சொத்து மதிப்புத் தெரிந்துகொள்ள ஆசையில்லையா..!

10. தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியகம்

10. தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியகம்

தொகை : $249.6 பில்லியன்
நாடு : சீனா
துவங்கப்பட்ட ஆண்டு : 2000

தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியகமானது சீனாவின் நான்கு அரசாங்க நிதியகத்தில் ஒன்றாகும். இதன் முதன்மைப்பங்கானது நாட்டின் சமூகப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தேசிய கவுன்சில் பாதுகாப்பு நிதியகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

 

09. கத்தார் முதலீட்டுக் குமுமம்

09. கத்தார் முதலீட்டுக் குமுமம்

தொகை : $256 பில்லியன்
நாடு : கத்தார்
துவங்கப்பட்ட ஆண்டு : 2005

கத்தார் முதலீட்டு குழுமமானது சிறிய நாடுகளின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் உபரி வருமானத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. முதலில் எரிசக்தி துறையில் தொடங்கப்பட்டுப் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் விரிவாக்கப்பட்டது.
இதனுடைய பெரும்பாலான பங்குகள் பார்க்லேஸ், வோல்ஸ் வேகன் குரூப் மற்றும் போர்ச் நிறுவனங்களுக்குச் சொந்தமானது.

 

08. கவர்மெண்ட் ஆஃப் சிங்கப்பூர் இன்வெஸ்ட்மெண்ட் கார்பரேசன்

08. கவர்மெண்ட் ஆஃப் சிங்கப்பூர் இன்வெஸ்ட்மெண்ட் கார்பரேசன்

தொகை : $344 பில்லியன்
நாடு : சிங்கப்பூர்
துவங்கப்பட்ட ஆண்டு : 1981

சிங்கப்பூர் அரசு மற்றும் நிதி ஆணையத்தின் பணத்தை நிர்வகிக்கும் பொருட்டு இது செயல்கபடுகிறது இந்நிறுவனமானது நாட்டின் எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டு துணைப்பிரதமரான Goh Kong Swee அவர்களால் நிறுவப்பட்டது.

 

07. ஹாங்காங் நாணய ஆணையம் முதலீட்டுச்சேவை

07. ஹாங்காங் நாணய ஆணையம் முதலீட்டுச்சேவை

தொகை : $417.9 பில்லியன்
நாடு : சீனா - ஹாங்காங்
துவங்கப்பட்ட ஆண்டு : 1993

இந்நிதியகமானது பணபரிவர்த்தன நிலையங்கள் மற்றும் வங்கி ஆணையாளரால் 1935ம் ஆண்டு நிறுவப்பட்டது.

 

06. SAFE முதலீட்டு நிறுவனம்

06. SAFE முதலீட்டு நிறுவனம்

தொகை : $547 பில்லியன்
நாடு : சீனா
துவங்கப்பட்ட ஆண்டு : 1997

SAFE முதலீட்டு நிறுவனமானது சீன நாட்டின் அந்நிய செலாவணியை நிர்வகிக்கும் துணை நிறுவனமாகும்

 

05. குவைத் மூலதன அமைப்பு

05. குவைத் மூலதன அமைப்பு

தொகை : $592 பில்லியன்
நாடு : குவைத்
துவங்கப்பட்ட ஆண்டு : 1953

பல பெட்ரோலிய நிதிநிறுவனங்களைப்போல குவைத் மூலதன அமைப்பானது உபரி எண்ணெய் வருவாய் நிதிநிறுவனமாகும். இது மிகவும் பழமையானது. 1982லிருந்து அரசுசார்ந்த சொத்துக்களை நிர்வகிப்பதில் தன்னாட்சியாகச் செயல்படுகிறது.

 

04. SAMA ஃபாரின் ஹோல்டிங்ஸ்

04. SAMA ஃபாரின் ஹோல்டிங்ஸ்

தொகை : $668.6 பில்லியன்
நாடு : சவுதி அரேபியா
துவங்கப்பட்ட ஆண்டு : 1952

சவூதி அரேபியன் மானிட்டர் ஏஜென்சியால் 1952 ல் நிறுவப்பட்டு மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. சவூதியில் உள்ள பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பொது ஓய்வூதியங்களிலிருந்து நிதி பெறப்படுகிறது.

 

03. சீன முதலீட்டுக் கழகம்

03. சீன முதலீட்டுக் கழகம்

தொகை : $ 746.7 பில்லியன்
நாடு : சீனா
துவங்கப்பட்ட ஆண்டு : 2007
இது சீன அரசின் அந்நிய செலாவணியை நிர்வகிக்கத் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2015 ல் உலகின் மிகப் பெரிய அந்நிய செலாவணி இருப்பாக $ 3.65 டிரில்லியன் என்ற அளவில் இருந்தது.

02. அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி

02. அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி

தொகை : $ 773 பில்லியன்
நாடு : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-அபுதாபி
துவங்கப்பட்ட ஆண்டு : 1976

இதற்குப் பெரும்பான்மை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களிலிருந்து நிதி பெறப்படுகிறது.

 

01. அரசு ஓய்வூதிய நிதி நிறுவனம் - குளோபல்

01. அரசு ஓய்வூதிய நிதி நிறுவனம் - குளோபல்

தொகை : $ 882 பில்லியன்
நாடு : நார்வே
துவங்கப்பட்ட ஆண்டு : 1990

நார்வேயின் பெட்ரோலியத்துறையிலிருந்து வரும் உபரி இலாபத்தைப் பொது நிதியில் ஒன்று சேர்ப்பதற்காகத் துவங்கப்பட்ட நிறுவனமாகும். இது நார்வேயின் வங்கி முதலீட்டு மேலாண்மை நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிறுவனம் 75 நாடுகளில் உள்ள 9,000 நிறுவனங்கள் முதலீடு செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Largest Sovereign Wealth Funds in the World

Sovereign wealth funds are defined as state-owned investment funds or entities. Their ultimate purpose is to invest a country’s money in a way that reaps fiscal benefits for its citizens in the long run.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X