உலகின் டாப் 10 வாட்ச் பிராண்டுகள் இதுதான்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இப்போது அணிகலன்கள் மக்களின் வாழ்வில் மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த ஆபரணங்களில் முக்கியமான ஒன்று கடிகாரங்கள்.

கடிகாரங்கள் நேரம் காட்டுவதை தவிர ஒருவரின் விருப்ப நடையையும் காட்டும். ஒரு கடிகாரம் ஒருவருக்கு கவர்ச்சியையும் அழகையும் கூட்டுகிறது. உலகில் பல பிரபலமான கடிகார நிறுவன அடையாளங்கள் உள்ளன. கீழ்வரும் கட்டுரையில் உலகில் முதல் 10 மிகப் பிரபலமான & புகழ்பெற்ற கடிகார நிறுவன அடையாளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

10. டாக் ஹியூயர்

டாக் ஹியூயர் ஒரு ஸ்விஸ் உற்பத்தி நிறுவனமாகும். அது கடிகாரங்கள் வடிவமைப்பிற்கும் தயாரிப்பிற்கும் பிரபலமான நிறுவனமாகும். 1860 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட்-இமியர் என்ற இடத்தில் எடுவர்ட் ஹியூயர் என்பவரால் நிறுவப்பட்டது.

டாக் ஹியூயர் ஒரு புதுமையான, தனித்த பாணி மற்றும் துல்லியத்துடன் ஒரு ஆடம்பர நிறுவன அடையாளமாக தனது அடையாளத்தை வைத்திருக்கிறது. டாக் ஹியூயர் 1920 களின் மூன்று கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பனிச்சறுக்கு உலக முதன்மை ஆட்டங்கள் மற்றும் ஃபார்முலா ஒன் உலக முதன்மை ஆட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் உத்தியோகபூர்வ காலக்கெடுப்பொறுப்பாளராக இருந்துள்ளது.

 

9. செய்க்கோ

செய்க்கோ என்பது ஜப்பானிய கடிகார நிறுவன அடையாளம் ஆகும். உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு மணிக்கட்டு-கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்கள் வழங்கும் குறைபாடற்ற வடிவமைப்பிற்கு பெயர் போனது. செய்க்கோ ஆடம்பரமான கடிகாரங்களை புதுமையான தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கிறது. இது செய்க்கோ கடிகாரங்களில் மட்டுமே காணப்படுகிறது.

செய்க்கோ பல ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஃபிஃபா உலகக் கோப்பை, ஐஏஏஎப் உலக முதன்மை ஆட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான உத்தியோகபூர்வ காலக்கெடுப்பொறுப்பாளராக இருந்துள்ளது.

 

8. ஜேகேர்-லீகோல்டர்

ஜேகேர்-லீகோல்டர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முன்னணி ஆடம்பர கடிகார உற்பத்தியாளர்கள் ஆவர். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் கடிகார உற்பத்தி அனுபவத்துடன், இந்த மதிப்புமிக்க நிறுவனம் வடிவமைப்பிலும், கைவினைப்படுத்துவதிலும் மிகச்சிறந்த கடிகாரங்களை வழங்குகிறது.

நிறுவனத்தின் பெயரில் 350 காப்புரிமைகள் உள்ளன. 1833 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் லே செண்டியர் என்ற இடத்தில் நிறுவனம் நிறுவப்பட்டது. ஏகேர்-லீகோல்டர் உலகில் மிக ஆடம்பரமான கடிகாரங்கள் தயாரிப்பில் பிரபலமாக உள்ளது.

 

7. ஆடிமேர்ஸ் பிகியூட்

ஆடிமேர்ஸ் பிகியூட் சுவிஸ்ஸில் உற்பத்தியாகும் ஆடம்பர கடிகார உற்பத்தியாளர் ஆவார். ஆடிமேர்ஸ் பிகியூட் இயந்திர கடிகாரங்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. நிறுவனம் 1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது முதல் தொடர்ந்து கடிகாரங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவன அடையாளம் உலகின் மிகப் பழைய கடிகார உற்பத்தியாளர்களில் ஒருவராக இருக்கிறது.

இந்த ஆடம்பரக் கடிகாரங்கள் இப்போதெல்லாம் நேர்த்தியான மற்றும் ஆடம்பரமான இயல்பு காரணமாக பிரபலங்களிடையே மிகவும் புகழ்பெற்று உள்ளன. ஆடிமேர்ஸ் பிகியூட் உலகின் மிக ஆடம்பரமான கடிகார நிறுவன அடையாளம் ஆகும். மேலும் உலகில் பிரபலமான & புகழ்பெற்ற கடிகார நிறுவன அடையாளங்களில் ஒன்றாகும்.

 

6. வாசேரோன் கான்ஸ்டான்டின்

வாசேரோன் கான்ஸ்டான்டின் 1755 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஜெனீவா அடிப்படையிலான உலகின் மிகப்பெரிய கடிகார உற்பத்தியாளர் சிறந்த சில கடிகாரங்களை வடிவமைத்து விற்பனை செய்திருக்கிறார். 1979 ஆம் ஆண்டில் காலிஸ்ட்டா என்றழைக்கப்படும் மிக விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை உருவாக்கியது.

அதன் ஆரம்ப விலை $ 5 மில்லியன் ஆகும். வாசேரோன் கான்ஸ்டான்டின் உலகிலேயே மிகவும் பிரபலமான & புகழ்பெற்ற கடிகார நிறுவன அடையாளங்கள் மட்டும் அல்ல. இது உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடிகார நிறுவன அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

5. புலோவா

புலோவா அமெரிக்காவை சேர்ந்த கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். புலோவா தற்போது பல வித்தியாசமான கடிகார நிறுவன அடையாளங்களை வடிவமைத்து, தயாரித்து, விற்பனை செய்கிறது. அவை புலோவா, காரவெல் நியூயார்க், விட்னாஹிர் சுவிஸ் மற்றும் மரைன் ஸ்டார் ஆகும். புலோவா ஜோசப் புலோவாவால் நிறுவப்பட்டு 1875 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது.

இந்த நிறுவனம் தனது முதல் ஆலையை 1912 ஆம் ஆண்டில் கடிகார உற்பத்திக்காக முழுமையாகஅர்ப்பணித்தது. குறிப்பிடத்தகுந்த காட்சி பாணி, துல்லியம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி போன்றவை உலகில் பிரபலமான & புகழ்பெற்ற கடிகார நிறுவன அடையாளமாக புலோவாவை உருவாக்கியது.

 

4. ஒமேகா

ஒமேகா 1848 முதல் புகழ் பெற்ற சுவிஸ் கடிகாரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த ஆடம்பர கடிகார நிறுவன அடையாளம் துல்லியம் மற்றும் முன்னோடிக்காக அறியப்படுகிறது. ஒமேகாவின் கடிகாரங்கள் இளவரசர் வில்லியம், ஜார்ஜ் குளூனி, ஜான் எஃப். கென்னடி மற்றும் பஸ் ஆல்ட்ரின் உட்பட பல உயர்தர மக்களால் அணியப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ராயல் ஃப்ளையிங் கார்ப்ஸ் 1917 ல் அதன் போர் பிரிவுகளுக்கு அதிகாரபூர்வ கடிகாரமாக தேர்ந்தெடுத்துள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்பட கதாப்பாத்திரமான ஜேம்ஸ் பாண்டின் கையில் நீங்கள் இந்த கடிகார நிறுவன அடையாளத்தை பார்க்கலாம்.

 

3. பிரேகெட்

பிரேகெட் 1775 இல் ஆபிரகாம்-லூயிஸ் பிரேகெட் என்பவரால் நிறுவப்பட்ட சுவிஸ் ஆடம்பர கடிகார நிறுவனம் ஆகும். பிரேகெட் டூர்பில்லியன் போன்ற பல கடிகார தயாரித்தல் தொழில்நுட்பங்களில் முன்னோடியாக விளங்குகிறது. பிரேகெட் 1810 ஆம் ஆண்டில் முதல் கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டது.

பிரேகெட் ஆடம்பர கடிகாரங்களின் சிறந்த சுவிஸ் உற்பத்தியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறது. இது உலகிலேயே மிகப்பழமையான மற்றும் ஜீவித்து இருக்கும் கடிகார தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.

 

2. ரோலக்ஸ்

ரோலக்ஸ் எந்த சந்தேகமும் இல்லாமல் உலகில் மிக பிரபலமான & புகழ்பெற்ற கடிகார நிறுவன அடையாளங்களில் ஒன்றாகும். இந்த ஸ்விஸ் ஆடம்பர கடிகார நிறுவன அடையாளமானது, தரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய விரும்பும் உயர்வர்க்க மக்களிடையே மிகவும் புகழ் பெற்றது. ரோலக்ஸ் உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை ஆடம்பர கடிகார நிறுவன அடையாளம் ஆகும். ஜெனீவாவை அடிப்படையாகக் கொண்ட இந்நிறுவனம் ஒரு நாளைக்கு 2,000 க்கும் அதிகமான கடிகாரங்களை தயாரிக்கிறது.

இந்நிறுவனமானது நீர்ப்புகாப்பு கடிகாரங்கள், பல கால அளவுகளைக் காட்டும் கடிகாரங்கள் மற்றும் கையின் நாடித்துடிப்பைக்கொண்டு வேலை செய்யும் கடிகாரங்கள் போன்ற வித்தியாசமான கடிகாரங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. இது உலகின் மிகவும் புகழ்பெற்ற ஆடம்பர கடிகார உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

 

1. படேக் பிலிப்

படேக் பிலிப் என்பது ஜெனீவா சுவிச்சர்லாந்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சொகுசு கடிகார நிறுவன அடையாளம் ஆகும். படேக் பிலிப் பாரம்பரிய வடிவமைப்புகளுடன் உயர் துல்லியமான மற்றும் உயர்தர கடிகாரங்களைத் தயாரிக்கிறது. பல உயர் வல்லுனர்களால் உலகில் மிகவும் மதிப்புமிக்க கடிகார நிறுவன அடையாளமாக படேக் பிலிப் கருதப்படுகிறது. 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் உலகின் பழமையான கடிகார நிறுவன அடையாளங்களில் ஒன்றாகும்.

படேக் பிலிப் மிகவும் சிக்கலான மற்றும் முழுமையான எந்திரவியல் கடிகாரங்களை தயாரிப்பதில் பிரபலமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் கடிகாரங்கள் ராணி விக்டோரியா, விக்டர் இமானுவேல் III, மற்றும் டென்மார்க்கின் இளவரசி லுயிஸ் ஆகியோரால் அணியப்பட்டுள்ளன. படேக் பிலிப் உலகிலேயே மிகவும் பிரபலமான & புகழ்பெற்ற கடிகார நிறுவன அடையாளம் ஆகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Most Popular Watch Brands In The World

Top 10 Most Popular Watch Brands In The World
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns