உலகிலேயே பணக்கார நடிகர் என்றால் இவர்தான்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

நடிகர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாகத் தான் இருப்பர். என்றாலும் இருப்பதிலேயே பணக்கார நடிகர்கள் யார் என்றும், எந்தெந்த நடிகர்கள் மிகப்பெரிய மாளிகைகளில் வசிக்கிறார்கள் என்றும், யாரெல்லாம் மிகவும் ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்றும் அறிந்து கொள்வதில் மக்கள் எப்போதும் அணையா ஆர்வத்துடனே இருக்கிறார்கள்.

அந்நடிகர்களைப் போல் தாமும் வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பெரும்பாலான நடிகர்கள் வறுமையான நிலைமையிலிருந்து பெரும் பணக்காரர்களாய் ஆகியுள்ளது அவர்களைப் போல் நாமும் ஆக வேண்டும் என்று சாதாரண மக்களையும் உத்வேகம் கொள்ளத் தூண்டுவதோடு, அவ்வாறு ஆவது சாத்தியமே என்றும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

நடிகர்களில் கணிசமானோர் தொடக்கக் காலத்தில் வெயிட்டர், கண்டக்டர், கூலி வேலை போன்ற சாதாரண வேலைகளில் தாம் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் இன்றைய நிலையை எட்டுவதற்குக் காரணம் அவர்களின் திறமையும், உழைப்பும் தான் என்பதை மறுப்பதற்கில்லை. திரைத்துறையில் பணக்கார நடிகர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இதோ உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பணக்கார நடிகர்களின் பட்டியல் உங்களுக்காக.

உலகின் முதன்மையான 10 பணக்கார சினிமா நடிகர்கள்

10. கியானு ரீவ்ஸ் - நிகர மதிப்பு: 350 மில்லியன் அமெரிக்க டாலர்

கியானு ரீவ்ஸ், மூன்று பாகங்களாக வெளிவந்த பிரபலமான மாட்ரிக்ஸ் ட்ரைலாஜி திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். இவர் லெபனானில் உள்ள பெய்ரட் என்னும் ஊரில் 1964 ஆம் ஆண்டுப் பிறந்தார். இவரது நிகர மதிப்புத் தோராயமாக 370 மில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திரை நட்சத்திரம் ஜான் விக் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்திலும் தோன்றியுள்ளார்.

9. க்ளின்ட் ஈஸ்ட்வுட் - நிகர மதிப்பு: 375 மில்லியன் அமெரிக்க டாலர்

ஹாலிவுட்டின் வாழும் சகாப்தமாகக் கருதப்படும் க்ளின்ட் ஈஸ்ட்வுட் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிபதி ஆவார். இவர் 1930 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் பிறந்தார். ஸெர்கியோ லியோனின் டாலர்ஸ் ட்ரைலாஜியான ஸ்பாகெட்டி வெஸ்டர்ன்ஸ் திரைப்படத்தில் அவரது கதாபத்திரமான மேன் வித் நோ நேம் அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. மேலும் பல ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது உலகின் ஒன்பதாவது பெரும் பணக்கார நடிகராக உள்ளார்.

8. ஜாக் நிக்கல்ஸன் - நிகர மதிப்பு: 390 மில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்படத் தயரிப்பாளரான ஜாக் நிக்கல்ஸன், திரைப்படத் துறையில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். இவர் 67 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும் மூன்று முறை அகாடமி விருதும் வாங்கியுள்ளார். இவரது நிகர மதிப்பு சுமார் 390 மில்லியன் டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது.

7. பில் கோஸ்பை - நிகர மதிப்பு: 400 மில்லியன் அமெரிக்க டாலர்

ஏழு முறை கிராமி விருது பெற்றவரான பில் கோஸ்பை சுமார் 390 மில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். ஸ்டாண்ட்-அப் காமெடியனாகத் திகழ்ந்த இந்த அமெரிக்க நடிகர், தேர்ந்த பாடகரும் கூட. இவர் ஃபிலடெல்ஃபியாவின் பென்சில்வேனியா நகரில் 1937 ஆம் ஆண்டுப் பிறந்தார். அவர் நடித்த காலகட்டத்தில் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கினார்.

6. ஜானி டெப் - நிகர மதிப்பு: 400 மில்லியன் அமெரிக்க டாலர்

உலகிலேயே மிகவும் பிரபலமான, அதிகச் சர்ச்சைகளுக்குள்ளான, அதிகளவில் பேசப்பட்ட, அதீத திறமை வாய்ந்த என்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் திரைப்பட நடிகர் ஜானி டெப். பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் திரைப்படங்களில் அவருடைய கதாப்பாத்திரம் உலகெங்கிலும் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இவர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள ஓவென்ஸ்போரோ என்ற இடத்தில் 1963 ஆம் ஆண்டுப் பிறந்தார். ஜானி டெப், கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகருக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். உலகின் ஆறாவது பணக்கார நடிகராக உள்ள இவர் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.

5. அமிதாப் பச்சன் - நிகர மதிப்பு: 420 மில்லியன் அமெரிக்க டாலர்

"பாலிவுட்டின் ஷாஹேன்ஷா" என்று அன்போடு அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இந்திய திரைப்பட நட்சத்திரம் ஆவார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்திய திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். சுமார் 190-க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் இவர் தோன்றியுள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நடிகராக இவர் கருதப்படுகிறார். இவர் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும், அகில உலக அளவில் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளார். இவர் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலரை நிகர மதிப்பாகக் கொண்டுள்ளார்.

4. டாம் க்ரூஸ் - நிகர மதிப்பு: 480 மில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளரான டாம் க்ரூஸ் மூன்று கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருப்பதோடு, மூன்று அகாடமி விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் டாப் கன், ரெயின் மேன், ட்ராபிக் தண்டர், ஃப்யூ குட் மென் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களிலும், உலகளவில் ப்ளாக்பஸ்டர் சினிமாவாகக் கருதப்படும் மிஷன் இம்பாஸிபிள் ஃப்ரான்சைஸிலும் நடித்துப் பெரும் புகழ் பெற்றுள்ளார். டாம் க்ரூஸின் நிகர மதிப்பு 480 மில்லியன் அமெரிக்க டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது.

3. டைலர் பெர்ரி - நிகர மதிப்பு: 650 மில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்க நடிகர், காமெடியன் மற்றும் படத்தயாரிப்பாளரான டைலர் பெர்ரி அமெரிக்காவின் லௌஸியானா மாகாணாத்தின் நியூ ஆர்லியன்ஸில் 1969 ஆம் வருடம் பிறந்தார். இவர் 1990-களிலும், 2000-களின் முதற்பாதியிலும் ஏராளமான மேடை நாடகங்களை எழுதியும், தயாரித்தும் இருக்கிறார். இவர் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியின் பிரத்யேக பார்ட்னரும் ஆவார். உலகின் மூன்றாவது பணக்கார நடிகரான இவர் சுமார் 600 மில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.

2. ஷாருக் கான் - நிகர மதிப்பு: 650 மில்லியன் அமெரிக்க டாலர்

"கிங் ஆஃ பாலிவுட்" என்று பெருமையாகக் குறிப்பிடப்படும் ஷாருக் கான் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் 75-க்கும் மேற்பட்ட ஹிந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஷாருக் கான் சர்வதேச அளவிலான 10 முதன்மையான பணக்கார நடிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் சுமார் 620 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.

1. ஜெர்ரி சீன்ஃபீல்டு - நிகர மதிப்பு: 820 மில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்கரான ஜெரோம் ஆலென் "ஜெர்ரி" சீன்ஃபீல்டு, காமெடி, நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர். நியூயார்க்கின் ப்ரூக்ளினில் 1954 ஆம் ஆண்டுப் பிறந்த இவர் "உலகின் பணக்கார நடிகர்கள்" பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2005 ஆம் ஆண்டில் காமெடி சென்ட்ரல் "இறவாப் புகழ் பெற்ற 12-வது மாபெரும் நகைச்சுவை நடிகர்" என்ற பெருமையை இவருக்கு வழங்கியது. ஜெர்ரி சீன்ஃபீல்டின் சொத்து மதிப்பு சுமார் 820 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

தமிழ்நாடு

இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..?

ஆயுத உற்பத்தி

ஆயுத உற்பத்தியில் பட்டையைக் கிளப்பும் 10 நிறுவனங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 Richest Actors in the World

Top 10 Richest Actors in the World
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns