டோஷிபா நிறுவனத்தின் சென்சார் வர்த்தகத்தைக் கைப்பற்றியது சோனி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ: நிதி மற்றும் வர்த்தக நிலையை மேம்படுத்த டோஷிபா நிறுவனம் தனது இமேஜ் சென்சார் வர்த்தகத்தை விற்கத் திட்டமிட்டுள்ளது.

 

இச்செய்தி வெளியான சில நாட்களிலேயே உலகின் முன்னணி எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சோனி, டோஷிபா நிறுவனத்தின் வர்த்தகத்தை 164.68 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

டோஷிபா நிறுவனம்

டோஷிபா நிறுவனம்

லேப்டாப் முதல் அணுமின் நிலையம் வரை அனைத்துத் துறையிலும் இயங்கி வரும் டோஷிபா நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 1.3 பில்லியன் டாலர் வருவாய் பெற்று 2008-09ஆம் ஆண்டுக்கு நிலையான வர்த்தகச் சரிவை எட்டியது.

இதனால் டோஷபா நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கையில் பல மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சென்சார் வர்த்தகத்தை விற்க டோஷிபா முடிவு செய்துள்ளது.

இமேஜ் சென்சார்

இமேஜ் சென்சார்

டிஜிட்டல் கேமிரா மற்றும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் டோஷிபாவின் இமேஜ் சென்சார் வர்த்தகத்தையும் ஜப்பானில் உள்ள இதன் உற்பத்தி நிறுவனத்தையும் சுமார் 164.68 மில்லியன் டாலர் தொகைக்குச் சோனி நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.

சோனி
 

சோனி

இமேஜ் சென்சார் வர்த்தகத்தில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சோனி நிறுவனத்திற்கு டோஷிபா நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் இந்நிறுவனத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.

மேலும் இதுகுறித்த கேள்விகளுக்குச் சோனி பதில் அளிக்க மறுத்துள்ளது.

மொபைல்

மொபைல்

சோனி நிறுவனத்தின் இமேஜ் சென்சார்களைச் சீனாவின் ஜியோமி மற்றும் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Toshiba to sell sensor business to Sony for around $165 mn: sources

Toshiba Corp is set to sell its image sensor business to Sony Corp for around ¥20 billion ($164.68 million) as part of a restructuring plan laid out earlier this year, sources with knowledge of the deal said on Saturday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X