இரட்டிப்பு லாபம் காணலாம்.. டொயோட்டாவின் பலத்த எதிர்பார்ப்பு.. டிராகன் தேசம் தான் காரணமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா இன்று அதன் முழு ஆண்டு லாப கணிப்பினை இருமடங்காக உயர்த்தியுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்றும் கூறியுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சீனாவில் விற்பனை நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மிக மோசமாக வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், இரண்டாம் காலாண்டிலும் லாபம் 24 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் லாபம் இருமடங்கு அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது.

ஆன்லைன் பார்மா துறையில் இறங்கும் டாடா.. ஷாக்கான அமேசான், ஜியோமார்ட்..! #1MGஆன்லைன் பார்மா துறையில் இறங்கும் டாடா.. ஷாக்கான அமேசான், ஜியோமார்ட்..! #1MG

லாபம் கணிப்பு

லாபம் கணிப்பு

ஜப்பானின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டொயோட்டா கடந்த மார்ச் 2021வுடன் முடிவடைந்த ஆண்டில் செயல்பாட்டு லாபமாக 1.3 டிரில்லியன் யென்னாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இது முன்னர் 500 பில்லியன் யென்னாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது சரிவு தான். இது முந்தைய நிதியாண்டில் 2.47 டிரில்லியன் யென்னாக இருந்தது.
இதே நிபுணர்கள் இந்த ஆண்டில் லாபம் 1.25 டிரில்லியன் யென்னாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

சரிவில் லாபம்

சரிவில் லாபம்

இதே இந்த நிறுவனம் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் செயல்பாட்டு லாபம் 506 பில்லியன் யென்னாக குறைந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 662.4 பில்லியன் யென்னாக இருந்ததாகவும் கணித்துள்ளது. இது சர்வதேச அளவில் மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவினால், வாகன விற்பனை பாதித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

வியத்தகு வளர்ச்சியில் டொயோட்டா

வியத்தகு வளர்ச்சியில் டொயோட்டா

எனினும் இரண்டாவது காலாண்டு எண்களை பார்க்கும் போது, முதல் காலாண்டில் இருந்து நல்ல ஏற்றம் கண்டுள்ளதாகவும் இந்த நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரி கெண்டா கோன் தெரிவித்துள்ளார். நீங்கள் இரண்டாவது காலாண்டு வளர்ச்சியினை முதல் காலாண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால், வியத்தகு மீட்சியை காணலாம் என்றும் ஆன்லைன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கோன் தெரிவித்துள்ளார். எனினும் டோக்கிய சந்தையில் இந்த பங்குகள் சந்தை முடிவில் வெறும் 0.5% ஏற்றத்தில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிக்கி பெஞ்ச்மார்க்கில் 0.9% ஏற்றத்திலும் காணப்படுகிறது.

விற்பனை எதிர்பார்ப்பு

விற்பனை எதிர்பார்ப்பு

எங்களது RAV4 விளையாட்டு பயன்பாட்டு வாகனம் கிராஸ் ஓவர் மற்றும் ப்ரியஸ் பெட்ரோல் வாகனம் 9.42 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய கணிப்பான 9.1 மில்லியனில் இருந்து இது அதிகமாகும். எப்படி இருந்தாலும் கடந்த ஆண்டினைக் காட்டிலும் இது சரிவு தான். ஏனெனில் கடந்த ஆண்டில் இதன் விற்பனை 10.46 மில்லியன் டாலர்களாகும். குறிப்பாக சீனாவின் பங்கு குறைவாகும்.

மிகப்பெரிய வாகன சந்தை

மிகப்பெரிய வாகன சந்தை

உலகின் மிகப்பெரிய வாகன சந்தையான சீனாவின் விற்பனை இன்னும் மீண்டு வரலாம். இது அதன் சரிவுக்கு கைகொடுக்கலாம் என்றும் இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏனெனில் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் மீண்ட முதல் நாடு சீனா தான். கடந்த செப்டம்பரில் மொத்த வாகன விற்பனை சீனாவில் 12.8% ஏற்றம் கண்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக 6 மாதமாக ஏற்றத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.எனினும் கடந்த ஆண்டினை காட்டிலும் 6.9% சரிவில் தான் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மின்சார வாகன விற்பனை

மின்சார வாகன விற்பனை

டெயோட்டார் அதன் சொகுசு கார்களும் மற்றும் மின்சார வாகனங்களுக்கும் சீனாவில் தேவை அதிகரித்துள்ளதை காண்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2025ம் ஆண்டில் மின்சார வாகன விற்பனை 5.5 மில்லியனாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Toyota expect more than doubles profit outlook amid china

Toyota expect more than doubles profit outlook amid china, but still the numbers showed down in last year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X