டீலில் புதிய ட்விஸ்ட்! டிக் டாக் மைக்ரோசாஃப்ட் டீலுக்கு 45 நாள் அவகாசம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பஞ்சாயத்து 2018-ம் ஆண்டில் வர்த்தகத்தில் தொடங்கி, ஹாங்காங் பஞ்சாயத்து, கொரோனா வைரஸ் பஞ்சாயத்து, சைபர் பாதுகாப்பு பஞ்சாயத்து என தொடர்ந்து கொண்டே போகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக, டிக்டாக் அப்ளிகேஷனை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாகச் சொன்னது அமெரிக்க அரசு.

மறு பக்கம் மைக்ரோசாஃப்ட் கம்பெனி, டிக் டாக்கை வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. பிரச்சனை உச்சகட்டத்தில் இருந்த போது தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேசியதாகச் செய்திகள் வெளியானது.

டில் பேச்சுக்கள் தொடரும்

டில் பேச்சுக்கள் தொடரும்

மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் உயர் அதிகாரி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சந்திப்புக்குப் பின், மீண்டும் ஷார்ட் வீடியோ அப்ளிகேஷனான டிக் டாக்கை வாங்குவது டொடர்பாக, பைட் டான்ஸ் கம்பெனி உடனான பேச்சுக்கள் தொடர்ந்து நடக்கும் எனச் சொல்லி இருந்தது மைக்ரோசாஃப்ட் கம்பெனி.

டீல் வராமலும் போகலாம்

டீல் வராமலும் போகலாம்

வரும் செப்டம்பர் 15, 2020-க்குள், இந்த டீல் ஒரு முடிவுக்கு வரலாம் என மைக்ரோசாஃப்ட் கம்பெனி தன் ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த பேச்சு வார்த்தை ஒரு சுமூகமான டீலுக்கு உறுதியாக வராமலும் போகலாம் என்றும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது மைக்ரோசாஃப்ட் கம்பெனி.

எது மாற்றியது

எது மாற்றியது

இத்தனை நாளாக டிக் டாக் செயலியை தடை செய்துவிடுவேன் எனச் சொல்லிக் கொண்டு இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக் டாக்கை வாங்க சுமார் 45 நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறார் என்றே புரியவில்லை. அவர் மன மாற்றத்துக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தடை விதிக்கலாம்

தடை விதிக்கலாம்

சீனாவின் பைட் டான்ஸ் மற்றும் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் கம்பெனிக்கு மத்தியி நடக்க இருக்கும் இந்த டீலை அமெரிக்க அரசின் Committee on Foreign Investment in the United States (CFIUS) மேற்பார்வை இடுமாம். இந்த அமைப்புக்கு இந்த டீலை ரத்து செய்யும் அதிகாரமும் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சில பிராந்தியங்கள் மட்டும்

சில பிராந்தியங்கள் மட்டும்

மைக்ரோசாஃப்ட் கம்பெனி, ஒட்டுமொத்தமாக டிக் டாக் அப்ளிகேஷனை விலைக்கு வாங்கப் போவதில்லையாம். டிக் டாக் கம்பெனியின் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து போன்ற பிராந்திய செயல்பாடுகளை மட்டுமே வாங்கப் போகிறார்களாம். இந்த டீல் நடந்தால், அமெரிக்க டிக் டாக் பயனர்களின் டேட்டாக்கள், அமெரிக்காவிலேயே இருப்பதை மைக்ரோசாஃப்ட் உறுதி செய்யுமாம்.

மற்ற முதலீட்டாளர்கள்

மற்ற முதலீட்டாளர்கள்

உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனியே பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் அப்ளிகேஷனை வாங்காமல், மற்ற அமெரிக்க முதலீட்டாளர்களையும், ஒரு சிறிய பகுதி டிக் டாக் அப்ளிகேஷன் பங்குளை வாங்க அழைப்பு விடுக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எவ்வளவு பணம்

எவ்வளவு பணம்

டிக் டாக் அப்ளிகேஷனை மேலே சொன்னது போல சில பிராந்தியங்களில் மட்டும் வாங்க, மைக்ரோசாஃப்ட் கம்பெனி, மொத்தம் எவ்வளவு செலவழிக்கும், அதில் மைக்ரோசாஃப்ட் மட்டும் எவ்வளவு பணம் கொடுக்கப் போகிறது போன்ற விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லையாம். இருப்பினும் டிக் டாக் அப்ளிகேஷனின் மதிப்பீடு 50 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கிறதாம். அமெரிக்க சீன பிரச்சனை போய்க் கொண்டு இருபப்தால் டிக் டாக் செயலியின் மதிப்பீடு குறையலாம் என்கிறார்கள்.

டெக்னாலஜி சவால்

டெக்னாலஜி சவால்

டிக் டாக் டெக்னாலஜியை, பைட் டான்ஸ் நிறுவனத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் டெக்னாலஜியில் இருந்து பிரிக்க வேண்டி இருக்கிறதாம். இந்த பிரச்சனையில் இருந்து மீள, ஒரு குறிப்பிட்ட காலத்தை transition period-ஆக வைத்துக் கொண்டு டெக்னாலஜி மாற்றத்தைச் செய்யலாம் எனவும் ஐடியா வைத்து இருக்கிறார்களாம். இத்தனை தடைகள் மற்றும் பிரச்சனைகளைத் தாண்டி, டிக் டாக் - மைக்ரோசாஃப்ட் டீல் முடியுமா? என்ன விலை கொடுத்து வாங்குவார்கள்? பொருந்த்திருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump agreed to give 45 days to TikTok to negotiate a deal with Microsoft

The American president Donald Trump agreed to give 45 days time to china tiktok to finalize a good sale deal to Microsoft company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X