ட்ரம்ப் அதிரடி! டிரேட் டீல் நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளாக இருக்கும் அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும், உலக நாடுகளை மீட்பார்கள் என்று பார்த்தால், இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

 

அமெரிக்கா & சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரைப் பற்றி படித்து இருப்பீர்கள்.

கடந்த 2018-ம் ஆண்டில் சீன பொருட்கள் மீது பில்லியன் கணக்கில் வரி விதித்தது அமெரிக்கா. அதற்கு சீனாவும் பதிலடி கொடுக்கும் விதத்தில், தன் தரப்பில் அமெரிக்க பொருட்கள் மீது பல பில்லியன் டாலருக்கு வரி விதித்தது.

சமாதான உடன்படிக்கை

சமாதான உடன்படிக்கை

இந்த பிரச்சனையைத் தான் வர்த்தகப் போர் என்கிறோம். உலகின் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள், இப்படி வர்த்தகம் சார்ந்து அடித்துக் கொண்டதால், உலக பங்குச் சந்தைகள் ஆட்டம் காணத் தொடங்கின. ஒட்டு மொத்த உலக ஏற்றுமதி இறக்குமதியில் கூட சலசலப்புகள் ஏற்பட்டன. இதை தீர்த்துக் கொள்ள, இரு தரப்பும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

டிரேட் டீல் பாகம் 1

டிரேட் டீல் பாகம் 1

கடந்த ஜனவரி 2020 மாதத்தில் தான் சீனா மற்றும் அமெரிக்கா டிரேட் டீலின் முதல் பாகத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டார்கள். அந்த டீலின் படி, சீனா, அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை, கூடுதலாக வாங்கிக் கொள்ள வேண்டும், என்பது தான் டீலின் முக்கிய அம்சம்.

2020-ல் எவ்வளவு
 

2020-ல் எவ்வளவு

சி என் பி சி செய்திப் படி, சீனா, இந்த 2020-ம் ஆண்டில் 2017-ல் வாங்கிய 186 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் & சேவைகள் + டிரேட் டீலில் சொல்லப்பட்டு இருக்கும் 200 பில்லியன் டாலரில் 77 பில்லியன் டாலருக்கு பொருட்களை கூடுதலாக வாங்க வேண்டும். ஆக 2020-ம் ஆண்டில், மொத்தம் 263 பில்லியன் டாலருக்கு, சீனா, அமெரிக்காவிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டும். சரி இந்த டீல் சரியாக நடக்கிறதா? டிரேட் டீல் பாகம் 1-ன் நிலை என்ன? அடுத்த கட்ட பேச்சு வர்த்தைகள் எந்த நிலையில் இருக்கிறது?

கொரோனா வைரஸ் பிரச்சனை

கொரோனா வைரஸ் பிரச்சனை

இந்த டீலில், இரு நாடுகளும் ஒரு வழியாக கையெழுத்து போட்டு முடிப்பதற்கும், கொரோனா தன் கை வரிசையை காட்டவும் சரியாக இருந்தது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறிவிட்டது அமெரிக்கா. இதுவரை சுமாராக 56.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.75 லட்சம் பேர் மரணித்து இருக்கிறார்கள். வல்லரசு அமெரிக்காவே, கொரோனாவால் இறந்த தன் மக்களின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தது எனலாம். எல்லா நாட்டை விட, தன் நாட்டில் அதிகம் கொரோனா பரவியதால் ட்ரம்ப் அதிகம் உணர்ச்சி வசப்பட்டார் அல்லது கோபப்பட்டார் எனலாம்.

ட்ரம்பின் கோபம்

ட்ரம்பின் கோபம்

"அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் உயிரிழப்புகள் மற்றும் கணக்கில் அடங்காத பொருளாதார சேதங்களுக்கு எல்லாம் சீனா தான் காரணம்" என வெளிப்படையாக குற்றம் சுமத்தினார் டொனால்ட் ட்ரம்ப். அவ்வளவு ஏன் அமெரிக்காவில் சிலர், சீன அரசு மீது நஷ்ட ஈடு எல்லாம் கேட்டு வழக்கு தொடுத்து இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அதிரடி மிரட்டல்

அதிரடி மிரட்டல்

கொரோனா வைரஸ் பிரச்சனையால் அமெரிக்க அரசு நிர்வாகம் தவித்து கொண்டிருந்த போது, "சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை, சீனா வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன்" என வெளிப்படையாக மிரட்டினார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

சீனா உடனான உறவு முறிவு கருத்து

சீனா உடனான உறவு முறிவு கருத்து

அந்த மிரட்டலைத் தொடர்ந்து "அமெரிக்கா, சீனா உடனான உறவை, முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அப்படி முறித்துக் கொண்டால், அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் இறக்குமதி செலவுகள் குறையும்" எனச் சொல்லி உலக பொருளாதார வல்லுநர்களுக்கு எல்லாம் பகீர் கிளப்பினார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமல்படுத்த பேச்சு வார்த்தை

அமல்படுத்த பேச்சு வார்த்தை

உலக பொருளாதாரத்தின் நல்ல நேரமோ அல்லது நம் நல்ல நேரமோ, ட்ரம்ப் அப்படி எதையும் அவசரப்பட்டு செய்யவில்லை. இன்னும் டிரேட் டீல் பாகம் 1 உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து டிரேட் டீலின் அடுத்த கட்டத்தைப் பற்றி, இப்போது விவாதிப்பதாகவும் தெரியவில்லை. கிணற்றில் போட்ட கல் போல டிரேட் டீல் பிரச்சனை அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.

வெள்ளை மாளிகை முதன்மை ஊழியர்

வெள்ளை மாளிகை முதன்மை ஊழியர்

இது குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதன்மை ஊழியர் மார்க் மெடோஸிடம் (Chief of Staff - Mark Meadows) கேட்ட போது, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான டிரேட் டீலைக் குறித்து புதிதாக விவாதிக்க, எந்த ஒரு உயர் மட்டக் குழு மற்றும் அதிகாரிகள் கூட்டத்துக்கு, தற்போது திட்டமிடவில்லை எனத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

டிரேட் டீல் 1 நிறைவேற்றம்

டிரேட் டீல் 1 நிறைவேற்றம்

ஆனால், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் செய்து கொண்ட டிரேட் டீல் பாகம் 1 உடன்படிக்கையில் சொல்லப்பட்டு இருப்பதை நிறைவேற்ற, அமெரிக்கா மற்றும் சீனா தரப்பில் பேசிக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் மார்க் மெடோஸ். அமெரிக்கா சார்பாக ராபர்ட் லித்தைசர் (Robert Lighthizer) சீனா உடன் பேசிக் கொண்டு இருக்கிறாராம்.

என்ன சொன்னார் ட்ரம்ப்

என்ன சொன்னார் ட்ரம்ப்

"நான் தான் சீனா உடனான பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைத்தேன். ஏன் தெரியுமா? இப்போது சீனா உடன் பேச விருப்பம் இல்லை. சீனா நினைத்து இருந்தால், கொரோனாவை நிறுத்தி இருக்கலாம். சீனா இந்த உலகத்துக்குச் செய்தது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று" என வழக்கம் போல சீனா மீது குற்றம் சாட்டி இருக்கிறார்.

சிறு பாராட்டு

சிறு பாராட்டு

டிரேட் டீலில் இருந்து அமெரிக்கா வெளியேறுமா என்று கேட்டதற்கு "என்ன நடக்கிறது என பார்ப்போம்" என பட்டும் படாமல் பேசி இருக்கிறார் ட்ரம்ப். அதே நேரத்தில், அமெரிக்க விவசாயப் பொருட்களை, சீனா வாங்குவதை, ட்ரம்ப் வெளிப்படையாக குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறாராம். சீனா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் சோயா பீன்ஸ் & கச்சா எண்ணெய் அளவு அதிகரித்து இருக்கிறதாம். ஆனால் 263 பில்லியன் டாலர் டார்கெட்டைத் தொடும் அளவுக்கு, சீனா வாங்கவில்லை என எகனாமிக் டைம்ஸ் செய்திகள் சொல்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump said that he do not want to deal with china now Trade deal is in halfway

The US president Donald Trump said that he do not want to deal with china now. The historical Trade deal between US china is in halfway.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X