அப்படி போடு! சீன செயலிகளுக்கு செக்! புதிய Executive Order-ல் கையெழுத்து போட்ட ட்ரம்ப்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பிரச்சனை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

 

ஒரு காலத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில், வெறுமனே வர்த்தகப் பிரச்சனைகள் தான் இருந்தன. ஆனால் இன்று சீன செயலிகள், அமெரிக்க பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது எனச் சொல்லி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு புகைச்சல் அதிகரித்து இருக்கிறது.

இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் சில செயலிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிறார். அப்படி என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்?

சீன செயலிகளுக்கு தடை

சீன செயலிகளுக்கு தடை

சீனாவின் டிக் டாக் மற்றும் வீ சாட் போன்ற செயலிகளுக்கு, அமெரிக்க நாட்டில் தடை விதிக்கும் நோக்கில், 06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை அன்று, ஒரு புதிய செயல் ஆணையில் (Executive Order) கையெழுத்து போட்டு இருக்கிறார். அடுத்த 45 நாட்களுக்குள் இந்த செயல் ஆணை அமலுக்கு வந்துவிடுமாம்.

தேசப் பாதுகாப்பு

தேசப் பாதுகாப்பு

சீனாவில் மேம்படுத்தப்பட்டு, சீனர்களுக்கு சொந்தமாக இருக்கும் மொபைல் செயலிகள் (Mobile Application), அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், அமெரிக்க நாட்டின் பொருளாதாரத்துக்கும், அமெரிக்காவின் வெளி உறவு கொள்கைகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லி இருக்கிறார்.

இந்தியா வழியில்
 

இந்தியா வழியில்

இந்தியா தான், தேசப் பாதுகாப்பை காரணம் காட்டி, முதன் முதலில் டிக் டாக் மற்றும் வீ சாட் போன்ற சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதுவரை சுமாராக 706 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருக்கிறது. இதை அதிபர் ட்ரம்பும், அமெரிக்க அரசு நிர்வாகமும் வரவேற்றார்கள்.

டேட்டா பஞ்சாயத்து & குற்றச்சாட்டு

டேட்டா பஞ்சாயத்து & குற்றச்சாட்டு

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி, தன்னிச்சையாக (Automatically), அதைப் பயன்படுத்தும் யூசர்களின் பல விவரங்கள் & தரவுகளை சேமிக்கிறது. இந்த டேட்டா சேகரிப்பு, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியினர்கள், அமெரிக்கர்களின் பல விவரங்களை கையாள அனுமதிப்பதாகவும், உலவு பார்க்க பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார் ட்ரம்ப்.

சென்சார் பிரச்சனை

சென்சார் பிரச்சனை

அதே போல டிக்டாக் செயலி, அரசியல் ரீதியாக சென்சிடிவான விவரங்களை, சென்சார் செய்வதாகவும் சில குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக ஹாங்காங் பிரச்சனை, உய்கர் இஸ்லாமியர்கள் பிரச்சனை போன்றவைகளைப் பற்றி சீன செயலி சென்சார் செய்கிறதாம். அதோடு சீன செயலி பொய் பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தப்படலாம், அது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பயன்படலாம் என்கிறார் அதிபர் ட்ரம்ப்.

டிக் டாக் தரப்பு

டிக் டாக் தரப்பு

சீனாவின் டிக் டாக் தரப்பில் இருந்து, அமெரிக்க யூசர்களின் டேட்டா, அமெரிக்க சர்வர்களில் தான் இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள். எனவே, இது சீன சட்டங்களுக்கு உட்படாது (not subject to chinese law) எனவும் சொன்னார்கள். அமெரிக்க அதிகாரிகள் அச்சப்படுவது போல எதுவும் இல்லை எனவும் விளக்கினார்கள். இருப்பினும் தடை விதிக்க தனி செயல் ஆணையில் கையெழுத்து போட்டு இருக்கிறார் ட்ரம்ப்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump signed EO to ban TikTok and Wechat ban comes into effect in 45 days

The American president Donald trump has signed an Executive Order to ban Chinese apps TikTok and Wechat. This ban will comes into effect in 45 days.
Story first published: Friday, August 7, 2020, 10:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X