ட்ரம்பின் புதிய ஆப்பு..! குடியேறிகளை கதற விடும் ஹெல்த் இன்சூரன்ஸ் சிக்கல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2016-ம் ஆண்டு பதவிக்கு வருவதற்கு முன்பே குடியேறிகளைக் கட்டுப்படுத்துவது பற்றி காட்டமாகப் பேசி வந்தார்.

 

பலரும் உலக நாடாக இருக்கும் அமெரிக்கா ஒரு குட்டி நாடு போல தன் குடியேறிகளைத் தடுக்க நினைக்குமா..? என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், குடியேறிகளை தடுக்கும் வேலையில் இறங்கினார் டொனால்ட் ட்ரம்ப்.

அதன் தொடர்ச்சியாக இந்தியர்கள் அதிகம் அமெரிக்காவுக்குப் போய் செட்டில் ஆக உதவிக் கொண்டு இருந்த ஹெச் 1 பி விசா விதிமுறைகளை எல்லாம் மாற்றி, அமெரிக்காவில் செட்டில் ஆக நினைத்துக் கொண்டு இருந்த பல இந்தியர்களின் கனவுகளில் ஒரு லோடு மண்ணைக் கொண்டு வந்து கொட்டிக் கலைத்தார்.

111 மடங்கு அதிக விண்ணப்பங்களைப் பெற்ற ஐ ஆர் சி டி சி..!111 மடங்கு அதிக விண்ணப்பங்களைப் பெற்ற ஐ ஆர் சி டி சி..!

சொந்த செலவு

சொந்த செலவு

இப்போது நேரடியாக அமெரிக்காவின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் கை வைத்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதாவது இனி அமெரிக்காவில் ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாமல் யாரும் குடியேற முடியாது அல்லது குடியேறக் கூடாது என்கிற ரீதியில் விதிகளை மாற்ற இருக்கிறார்களாம். அப்படி ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லை என்றால் கூட அவர்களால் அமெரிக்காவில் மருத்துவ செலவுகளைச் சொந்த செலவில் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

ஹெல்த் இன்சூரன்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ்

அதாவது ஒருவருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லை என்றால், இனி அவர் அமெரிக்காவில் நுழைய முடியாது என்று குடியேற்ற விதிகளை மாற்ற இருக்கிறார்கள். அப்படி இன்சூரன்ஸ் இல்லை என்றால் கூட, அவர்களால் அமெரிக்காவில் மருத்துவ செலவுகளைச் செய்து கொள்ள முடிய வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு அமெரிக்காவில் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விதிகளை மாற்ற இருக்கிறார்கள். அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் என்றால் சொத்து பத்துக்களை எல்லாம் விற்க வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்சுலர் தான்
 

கன்சுலர் தான்

இனி கன்சுலர் அதிகாரிகள் தான் விசாக்களை வழங்க இருக்கிறார்களாம். ஏற்கனவே மேலே சொன்னது போல, அமெரிக்காவின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு சுமையை அதிகரிக்கக் கூடியவர்களை மட்டுமே தேர்ந்து எடுத்து அமெரிக்காவில் வாழ விசா கொடுக்க இருக்கிறார்களாம். இதையும் ட்ரம்ப் தன் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள், அமெரிக்க ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு எந்த ஒரு பாரத்தையும் கொடுக்க மாட்டார் என தகுந்த ஆதாரங்கள் உடன் இந்த கன்சுலர் அதிகாரிகளிடம் நிரூபித்தால் தான் இனி விசா.

நவம்பர் 03 முதல்

நவம்பர் 03 முதல்

இந்த புதிய விதிமுறைகள் வரும் நவம்பர் 03, 2019 முதல் அமலுக்கு வருகிறதாம். இதற்கு முன்பே இந்தியர்களின் ஹெச் 1 பி விசா விதிமுறைகளில் மாற்றம், ஹெச் 1 பி விசா வாங்கி அமெரிக்காவில் வாழ்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வாழ வாங்கப்படும் ஹெச் 4 விசா விதிமுறைகள் மாற்றம், ஹெச் 4 விசா வாங்கி இருப்பவர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதி மறுப்பது என விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக பல மாற்றங்களை டொனால்ட் ட்ரம்பின் அரசு கொண்டு வந்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump to block immigrants with out health insurance or unable to pay hospital bills

Donald Trump government is planning to block immigrants with out proper health insurance. If some one does not have health insurance he should able to pay hospital bills. If not they are not allowed to stay in America.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X