அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க டிவிட்டர் பேச்சுவார்த்தை.. அதிகரிக்கும் போட்டி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனா இடையேயான கருத்து மோதல்களுக்கு இடையே நாளுக்கு நாள் பதற்றம் கூடிக் கொண்டே போகிறது. இந்த நிலையில் டிக் டாக்கினை கையகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

 

டிக் டாக்கினை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை. இல்லையேனும், அதற்கு செப்டம்பர் 15 வரை கால அவகாசம் வழங்குவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த குறிப்பிட்ட காலத்தில் சுமூக ஒப்பந்தம் போடப்படாவிட்டால், அதற்கு தடை விதிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் தான் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

டிரம்ப் குற்றம் சாடல்

டிரம்ப் குற்றம் சாடல்

இது குறித்த அறிக்கையில் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டிக்-டாக்கின் உரிமையாளர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. டிக்-டாக் நிறுவனம் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனாவுடன் பகிர்ந்து கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். ஆக இதனை எதிரொலிக்கும் விதமாகத் தான் இந்த தடை உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவுக்கு சொந்தமான செயலிகளின் பயன்பாடு, அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. டிக்-டாக்கின் தரவு சேகரிப்பு மூலம் அமெரிக்க அரசாங்க ஊழியர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தி உளவு பார்க்கலாம் எனவும் சீனாவை அனுமதிக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

வீ சாட்டுக்கும் தடை
 

வீ சாட்டுக்கும் தடை

டிக் டாக் மட்டும் அல்ல சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வீ சாட் ஆப்பிற்கும் தடை விதிக்கும் நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எனினும் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட பைட்டான்ஸ் மற்றும் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter and tik tok talks about merger

Twitter also talks about a potential combination with Tik Tok.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X