சீனாவில் கால்தடம் பதித்தது டுவிட்டர்!! ஹாங்காங் நகரில் முதல் அலுவலகம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: சமுக வலைதள நிறுவனமான டுவிட்டர் நிறுவனம் ஹாங்காங் நகரில் புதிய அலுவலகத்தை துவங்கியுள்ளது, இதன் மூலம் சீனாவில் இந்நிறுவனம் கால்தடம் பதித்துள்ளது. இந்நிறுவனத்தின் நுண்பதிவு சேவை இப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்த அலுவலகத்தின் தலைவரான பீட்டர் கிரீன்பெர்ஜெர் கூறுகையில், சீனாவில் டுவிட்டர் நிறுவனத்தின் சேவை முடக்கப்பட்டாலும் இப்பகுதியில் இருந்து கிடைப்பெறும் விளம்பர வருவாயை அடைய நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

விளம்பர வருவாய்

விளம்பர வருவாய்

டுவிட்டர் நிறுவனம் 2014ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் விளம்பரத்தின் மூலம் சுமார் 479 மில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்சார்

சென்சார்

சீனாவின் தணிக்கை குழு 2009ஆம் ஆண்டு முதல் சமுக வளைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இண்டர்நெட் வீடியோ தளமான யுட்யூப் ஆகியவற்றை முடக்கியது.

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

இந்நிலையில் சீன நிறுவனங்கள் ஹவாய் டெக்னாலஜிஸ் மற்றும் அரசு பத்திரிக்கை நிறுவனமான ஜின்ஹூவா ஆகிய நிறுவனங்கள் உலகத்தில் உள்ள வாடிக்கையாளர்களை கவர டுவிட்டரை இன்றளவும் பயன்படுத்தி வருகிறது.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

2014ஆம் ஆண்டில் தணிக்கை குழு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்து வந்தது, இதன் பின்னரே டுவிட்டர் நிறுவனம் ஹாங்காங் பகுதியில் புதிய அலுவலகத்தை துவங்கியது.

தடை எதற்கு

தடை எதற்கு

சீன அரசு நாட்டின் சமூக ஒழுங்கினை காக்கவே இத்தகைய சமுக வலைதளங்களை முடக்கியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter opens Hong Kong office, gains China foothold

Twitter Inc has opened a Hong Kong office, its first in the Greater China region, the company whose microblogging services are blocked on the mainland said on Tuesday.
Story first published: Tuesday, March 10, 2015, 17:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X