300 ஊழியர்களை மீண்டும் வேலையை விட்டு தூக்கி எறியும் டிவிட்டர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ளூம்பெர்க் திங்களன்று வெளியிட்டுள்ள செய்தியில் டிவிட்டர் நிறுவனம் மீண்டும் 300 பேர் அல்லது நிறுவனத்தின் 8 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் என செய்தி வெளியிட்டுள்ளது.

 

பணி நீக்கத்திற்கான அறிவிப்பு வியாழக்கிழமை நடக்க உள்ள நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கை வெளியீட்டிற்கு முன்பே இருக்கும் என்று ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரைக் கேட்ட பொழுது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

2015 ஆம் ஆண்டு

2015 ஆம் ஆண்டு

சென்ற வருடமும் இதேப் போன்று ஜேக் டோர்சே நிரந்தர தலைமை செயல் அதிகாரியாகப் பதவி ஏற்ற ஒரு வாரக் காலத்தில் 336 ஊழியர்களுக்கும் மேற்பட்டோரை டிவிட்டர் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது.

நிறுவன கையகப்படுத்துதல்

நிறுவன கையகப்படுத்துதல்

சென்ற மாதம் நிச்சயமற்ற நிலையில் உள்ள சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் நிறுவனத்தை வாங்கு விரும்புவதாக அறிவித்த டிவிட்டர் நிறுவனம் இன்னும் விலை ஏதும் அறிவிக்கப்படாத நிலையில் இதற்காக வங்கி ஊழியர்களை நியமித்துக் கையகப்படுத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

12.76 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு

12.76 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு

மேலும் 12.76 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு உடைய டிவிட்டர் நிறுவனம் சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 400 மில்லியன் டாலர் நட்டத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் இந்தியா
 

டிவிட்டர் இந்தியா

செப்டம்பர் மாதம் இந்தியாவில் உள்ள தனது நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் இருந்து இஞ்ஜினியரிங் பிரிவை இழுத்து மூடியதால் 20க்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர்.

மூன்றாவது காலாண்டு அறிக்கை

மூன்றாவது காலாண்டு அறிக்கை

திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள டிவிட்டர் நிறுவனம் வியாழக்கிழமை மூன்றாவது காலாண்டு அறிக்கையை வேலியிடுவதாக்க அறிவித்ததில் சிறிது மாற்றம் செய்து அன்று மாலை சந்தையின் முடிவில் அறிக்கையை வெளியிடுவதாக அறிவித்தது.

டிவிட்டர் நிறுவனத்தில் அனைத்து அலுவலகங்களையும் சேர்ந்து மொத்தம் 3,860 ஊழியர்கள் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

இந்தியாவின் டாப் 10 காஸ்ட்லி நகரங்கள் இவை தான்..! சென்னைக்கு என்ன இடம் தெரியுமா..?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பேஸ்புக் நிறுவனத்தை ஏன் வாங்க முடியவில்லை என்று தெரியுமா..?

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிர்வாகிகள் ஊதியங்களில் 10 சதவீதத்திற்கு வேட்டு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter plans to cut about 300 more jobs: Bloomberg Report

Twitter plans to cut about 300 more jobs: Bloomberg Report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X