பிரிட்டன் நிறுவனங்களின் முக்கிய கோரிக்கை.. ரிஷி சுனக் அரசு செய்யுமா..? இந்தியர்களுக்கு லாபமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு யாரும் எதிர்பார்க்காத நிலையில் 3 மாத உச்சத்தைச் செப்டம்பர் மாதம் தொட்டு உள்ளது.

 

இதேபோல் கோவிட் வேக்சின் பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வருவது பெரும் சவாலாக அமைந்துள்ளது.

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டில் உருவாகி வரும் ரெசிஷன் அச்சம் தொடர்ந்து மோசமான நிலையை எட்டியிருக்கும் நிலையில் நாட்டில் பணக்காரர்கள் மீதான வரியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில் நாட்டின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

மேலும் அந்நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து 3.5 சதவீதமாகக் குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் பிரிட்டன் நிறுவனங்கள் ரிஷி சுனக் அரசிடம் முக்கியமான கோரிக்கையை வைத்து வருகிறது.

பிரெக்சிட்

பிரெக்சிட்

பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்து வந்த நாளில் இருந்து பிரிட்டன் நாட்டில் தகுதியான ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.

குடியேற்ற விதிகள்
 

குடியேற்ற விதிகள்

இந்த நிலையைச் சமாளிக்கப் பிரிட்டன் நாட்டின் நிறுவனங்களும், வர்த்தக அமைப்புகளும் விரைவில் குடியேற்ற விதிகளைத் தளர்த்திப் பிரிட்டன் நாட்டில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் ரெசிஷன் பிரச்சனையைக் குறைக்கக் கோரிக்கை வைத்துள்ளது.

பிரிட்டிஷ் தொழில் கூட்டமைப்பு

பிரிட்டிஷ் தொழில் கூட்டமைப்பு

இதுகுறித்துப் பிரிட்டிஷ் தொழில் கூட்டமைப்பு (சிபிஐ) கூறுகையில் குடியேற்ற விதிகளில் விரைவில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் இதனால் நாட்டில் நிலவு மோசமான நிலையைச் சமாளிக்க முடியும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

துறை வாரியான தரவுகள்

துறை வாரியான தரவுகள்

இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் வேலைவாய்ப்பின்மை செப்டம்பர் மாதம் 3.8 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது பல கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் எந்தத் துறையில் அதிகப்படியான ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது, எந்தத் துறையில் செப்டம்பர் மாதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறித்த முழுமையான தரவுகள் வெளியிடப்படவில்லை.

ரிஷி சுனக் மற்றும் ஜெர்மி ஹன்ட்

ரிஷி சுனக் மற்றும் ஜெர்மி ஹன்ட்

பிரிட்டன் நாட்டின் அதிபர் ரிஷி சுனக் மற்றும் நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் இணைந்து விரைவில் இலையுதிர் அறிக்கையை வெளியிட உள்ளது. இதில் பிரிட்டன் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் காட்டிலும் பிரிட்டன் நாட்டின் நிதி நிலையைச் சரி செய்ய வரி உயர்வு மற்றும் செலவின குறைப்புகளில் தான் அதிகப்படியான கவனத்தைச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகம், பொருளாதாரம்

வர்த்தகம், பொருளாதாரம்

ஆனால் இதே வேளையில் பிரிட்டிஷ் தொழில் கூட்டமைப்பு குடியேற்ற விதிகளைத் தளர்த்தி வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதன் மூலம் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவை மேம்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இலவசம்

இலவசம்

மேலும் இது செலவில்லாமல் இலவசமாகச் செய்யக்கூடிய ஒரு திட்டம் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் ரிஷி சுனக் அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது, பிரிட்டன் தனது குடியேற்ற விதிகளைத் தளர்த்தினால் இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், இதைவிட ஐரோப்பிய நாடுகள் இதன் மூலம் அதிகம் பலன் அடையும்.

 ரிஷி சுனக் வந்த பின்

ரிஷி சுனக் வந்த பின்

பிரிட்டன் மக்கள் கடந்த 3 மாதத்தில் 3 பிரதமர்களைப் பார்த்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காதது என உலக நாடுகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் ரிஷி சுனக் வந்த பின்பு அரசியல் சலசலப்பு கணிசமாக குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK businesses pressure Rishi Sunak to relax immigration rules; Does Indians will benefit

UK businesses pressure Rishi Sunak to relax immigration rules to solve chronic staff shortages, looming recession in Britain. Does Indians will benefit from relaxing on immigration rules
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X