அம்மாவுக்கு ரூ750 கோடி கொடுத்திருங்க.. உண்மையை மறைத்த தந்தை மகனுக்கு அதிரடியான தீர்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையை மறைத்து சொத்தினை விவாகரத்தான தாய்க்கு கொடுக்காமல் ஏமாற்றிய மகனுக்கும், கணவருக்கும் சரியான சவுக்கடி கொடுக்கும் விதமாக லண்டன் நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது.

 

தாய் மற்றும் தந்தைக்கு இடையிலான விவாகரத்து வழக்கில் ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வரரின் மகன் ஒருவருக்கு, லண்டன் நீதிமன்றம் இன்றைய இந்திய மதிப்பில் 750 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் பல வருடங்களாக இழுபறியில் இருந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.'

இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெருமை.. லண்டன்-ஐ பின்னுக்குத்தள்ளி நம்ம பெங்களூரு முதல் இடம்..! இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெருமை.. லண்டன்-ஐ பின்னுக்குத்தள்ளி நம்ம பெங்களூரு முதல் இடம்..!

சொத்துக்கள் மறைப்பு

சொத்துக்கள் மறைப்பு

டெமூர் அக்மெடோவ் (Temur Akhmedov) அவரது தந்தை ஃபார்காத் அக்மெடோவ் (Farkhad Akhmedov) உடன் இணைந்து தங்களது சொத்து மதிப்பினை மறைத்துள்ளனர். இதனால் தாய்க்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்ச தொகை குறையும் என செய்துள்ளனர். ஆனால் இது குறித்த தீவிர விசாரணைக்கு பிறகே உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.

உண்மையை மறைக்க மோசடி

உண்மையை மறைக்க மோசடி

உண்மையை தெரிந்து கொண்ட நீதிமன்றம் விவாகரத்தான தாய்க்கு 750 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. டெமூர் அக்மெடோவ் அவரது தந்தையுடன் சேர்ந்து, நீதிமன்றம் அங்கீகரித்த தொகையான 627 மில்லியன் டாலரை தாய் பெறுவதை தடுக்க, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். எனினும் உண்மையை தெரிந்து கொண்ட Gwynneth Knowles, 1000 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார். இன்றைய இந்திய மதிப்பில் 100 மில்லியன் டாலர் என்று கணக்கில் கொண்டாலே அதன் மதிப்பு 750 கோடி ரூபாய்.

வர்த்தகத்தில் இழப்பு
 

வர்த்தகத்தில் இழப்பு

அதெல்லாம் சரி இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? டெமூர் தான் ஒரு கல்லூரி மாணவராக இருந்தபோது, 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை மோசமான வர்த்தகத்தில் (tarding) இழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதன் பின்னர் தான் உண்மை வெளிவந்துள்ளது. தனது தாயிடம் இருந்து சொத்தினை மறைப்பதற்கு பதிலாக, மோசமான வர்த்தகங்கள் மூலம் பலவற்றை இழந்துள்ளனர்.

சொகுசு குடியிருப்புகள்

சொகுசு குடியிருப்புகள்

டெமூர் பல லட்சங்களை இழந்திருந்தாலும், தன் தந்தையிடம் இருந்து ஒரு பைசா கூட தாய்க்கு கிடைக்க கூடாது என எண்ணினார். இதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். டெமூரின் தாயார் டாடியானா(Tatiana Akhmedova), தனக்காக ஒரு சொகுசு குடியிருப்பினை எதிர்பார்ப்பதாகவும், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 ஆதரவான தீர்ப்பு

ஆதரவான தீர்ப்பு

இதற்கிடையில் ஃபர்காத் தனது சொத்துகளை நவம்பர் 2012ல் 1.4 பில்லியன் டாலருக்கு விற்று சம்பாதித்துள்ளார். ஆனால் இந்த சுய நல குழுவானது டாடியானாவுக்கு எந்தவொரு தொகையையும் கொடுக்க முடியாது என மறுத்துள்ளது. இதன் பின்னர் தான் டாடியானா பல நாடுகளில் இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படியொரு பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் லண்டன் நீதிமன்றம் அந்த தாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: uk லண்டன்
English summary

Uk court orders son to pay Rs.750 crore to mom in UK’s largest divorce case

Uk court orders son to pay Rs.750 crore to mom in UK’s largest divorce case
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X