பிரிட்டன் பொருளாதாரம் ஏற்கனவே கடுமையான சரிவினைக் எதிர்கொண்டு வரும் நிலையில், மூன்றாவது காலாண்டிலும் பொருளாதாரம் சரிவினைக் கண்டுள்ளது.
இது இன்னும் சில காலம் நீடிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். மந்த நிலை இன்னும் சில காலம் இருக்கலாம் என்பதை இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, எதிர்பார்த்ததை போலவே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம், 0.2% எனும் அளவுக்கு வீழ்ச்சியினை கண்டது.
3வது காலாண்டில் சரிவு
இரண்டாவது காலாண்டில் வளர்ச்சியினை கண்டிருந்தாலும், மிதமான உச்சத்தினை எட்டியிருந்தது என தேசிய புள்ளியியல் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது காலாண்டிலும் சற்று சுருங்கியுள்ளது. இது 4வது காலாண்டிலும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேங்க் ஆப் இங்கிலாந்து எச்சரிக்கை
இங்கிலாந்து பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையில் இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் 2024ம் ஆண்டின் நடுப்பகுதியில் வரையில் பிரிட்டனின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கலாம் என பேங்க் ஆப் இங்கிலாந்து என எச்சரித்துள்ளது.
ரிஷி சுனக்கிற்கு சவால்
புதிய பிரதமரான ரிஷி சுனக் அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக, இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏனெனில் அவர் இங்கிலாந்திற்கு மிகவும் தேவையான அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரவேண்டிய நிலையில் உள்ளார்.
4 தசாப்தங்களில் இல்லாதளவு உச்சம்
பிரிட்டனில் ரெசசனின் மத்தியில் பிரிட்டனில் விலைவாசியும் உச்சத்தில் இருந்து வருகின்றது. இது மக்கள் 4 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகின்றது. இது தொடர்ந்து 10% மேலாக இருந்து வருகின்றது.
பிரிட்டனுக்கு பிரச்சனை
இதற்கிடையில் பிரிட்டனில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவர்களின் சம்பள விகிதத்தினை அதிகரிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்திய மாதங்களாகவே பிரிட்டன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மேற்கோண்டு பிரிட்டனுக்கு பிரச்சனையாக மாறியுள்ளது.
நிதி பற்றாக்குறை
பணவீக்கத்திற்கு மத்தியில் ஊழியர்களுக்கு நிதி பற்றாக்குறையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் இத்தகைய போராட்டங்கள் இருந்து வருகின்றன.
பிரிட்டனில் நிலவி வரும் எனர்ஜி மற்றும் நுகர்வோர் பொருட்கள் விலையானது கூர்மையான உச்சத்தில் காணப்படுகிறது. இது இங்கிலாந்து பொருளாதாரத்தினை மேலும் பிரச்சனைக்கு தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று KPMG UK-ன் தலைமை பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
எப்போது விடிவுகாலம்
பிரிட்டனில் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் நிலையில், ஏற்கனவே அங்கு அரசியல் பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து அரசியல் மாற்றங்களை கண்டு வந்துள்ளது. மூன்றாவது முறையாக ஒரே ஆண்டில் பிரதமர் மாறியுள்ளார். தற்போது புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு பற்பல சவால்கள் காத்துக் கொண்டுள்ளன எனலாம்.
பற்பல சவால்கள்
முதல் கட்டமாக நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசியினை குறைக்க வேண்டும். இப்படி பற்பல சவால்களை தாண்டி எப்படி வெற்றி பெறப் போகிறார். பொருளாதாரத்தினை மீட்டெடுப்பாரா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications