33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி அதிகரிப்பு.. இங்கிலாந்து நீண்ட ரெசசனை எதிர்கொள்ளலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்தில் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருந்து வரும் நிலையில், 33 வருடங்களில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக இங்கிலாந்து நீண்டகால மந்த நிலையை எதிர்கொள்ளலாம் என பேங்க் ஆப் இங்கிலாந்து எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகப்பெரிய சவாலான நிலையை எதிர்கொள்ளலாம் என்றும், வேலையின்மை விகிதம் கிட்டதட்ட இரு மடங்கு அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

வட்டி விகிதம் அதிகரிப்பு

வட்டி விகிதம் அதிகரிப்பு

இதற்கிடையில் பேங்க் ஆப் இங்கிலாந்து மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 2.25%ல் இருந்து, 3% ஆக உயர்த்தியுள்ளது. இது 1989-க்கு பிறகு ஒரே முறையில் இந்தளவுக்கு மிகப்பெரிய அளவு ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பல இங்கிலாந்து குடும்பங்கள் கஷ்டத்தினை எதிர்கொண்டுள்ளன.

குறைவான பணம் சம்பாதிக்கலாம்

குறைவான பணம் சம்பாதிக்கலாம்

ஒரு நாட்டின் பொருளாதாரம் இரண்டு மூன்று மாத காலத்திற்கு அல்லது காலாண்டுகளுக்கு தொடர்ந்து சுருங்கும்போது மந்த நிலை சரிவில் காணப்படுகிறது. இதன் காரணமாக நிறுவனங்கள் பொதுவாக குறைவான பணம் சம்பாதிக்கின்றன. இதனால் குறைவான பணம் சம்பாதிக்கின்றன. வேலையின்மை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சவாலான கட்டத்தில் பொருளாதாரம்

சவாலான கட்டத்தில் பொருளாதாரம்

ஏற்கனவே பொருளாதாரம் சவாலான கட்டத்தில் உள்ளதாகவும், இது இனி இன்னும் சரியலாம் என்ற்ம் எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டில் முதல் பாதி வரையில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட மந்த நிலை

நீண்ட மந்த நிலை

இது இங்கிலாந்தின் மிக மோசமான வீழ்ச்சியாக இருக்காது என்றாலும், 1920களில் இருந்து பார்க்கும்போது, இது மிக நீண்டதாக இருக்கும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணவீக்கம் ஏற்கனவே இங்கிலாந்து குடும்பங்களில், ஓய்வூதியதாரர்கள், வணிகங்களில் ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரசின் கவனம் முதலில் இதை மீட்டு எடுப்பதாக இருக்கலாம் என்றும் அதிபர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

கடன் வட்டி அதிகரிக்கலாம்

கடன் வட்டி அதிகரிக்கலாம்

மொத்தத்தில் தற்போதும் வட்டி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இது மேற்கொண்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தினை தூண்டலாம். இது மக்களின் செலவினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதனால் நுகர்வானது குறையலாம். மேற்கொண்டு மக்களின் வாழ்க்கை செலவு என்பது கணிசமாக அதிகரிக்கும். இதனால் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வங்கி

அமெரிக்கா வங்கி

அமெரிக்காவின் மத்திய வங்கியானது தொடர்ந்து 4-வது முறையாக வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதுவே 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

இது கொரோனாவின் தாக்கம், உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் பெரும்பாலும் வட்டியினை உந்தலாம்.

இங்கிலாந்து அரசின் கவனம்

இங்கிலாந்து அரசின் கவனம்

இங்கிலாந்து அரசு தற்போது ஸ்திரத்தன்மை மீட்டெடுப்பது, பொது நிதியை மேம்படுத்துவது, கடனை குறைப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம். இதனால் வட்டி விகிதம் என்பது முடிந்த மட்டில் குறைவாகவே வைத்திருக்க மத்திய வங்கி முயற்சிக்கலாம்.

40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்

40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்

கடந்த செப்டம்பர் மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களின் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், விலைவாசி 10.1% ஆக உச்சம் தொட்டுள்ளது.

ஆக வட்டி அதிகரிக்கும் போது மக்கள் கடன் வாங்குவதை குறைக்கலாம். இதனால் பணத்தை செலவழிப்பதை குறைக்கலாம். மக்களை செலவுகளை குறைக்க உந்தலாம். இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: uk interest rate recession
English summary

UK may fall into longest ever recession amid interest rate hike

Bank of England has raised interest rates to 3% from 2.25%. This is the largest increase since 1989
Story first published: Thursday, November 3, 2022, 20:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X